வெஜிடபிள் இடியாப்பம்

தேதி: August 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

இடியாப்பம்-6
கேரட்,முட்டைகோஸ்,பீன்ஸ்,முளைகட்டியபட்டாணி,காளிப்ளவர்- ஒரு கப்
மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
கொத்தமல்லி-சிறிதளவு
தாளிக்க-
கடுகு
கறிவேப்பிலை
உளுந்து
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-1
கறிவேப்பிலை
மசாலாவிற்கு-
நிலக்கடலை- ஒரு கைப்பிடி
தேங்காய்- ஒரு சில்லு
பூடு-8
வரமிளகாய்-2
பட்டை-1
ஏலக்காய்-2
லவங்கம்-3
எண்ணெய்- சிறிதளவு


 

இடியாப்பம் உதிர்த்து வைக்கவும்

காய்கறிகளை பொடியாக நறுக்கவும்

மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து நீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்

அத்துடன் உப்பு,மஞ்சள்தூள்,கொத்தமல்லி சேர்க்கவும்.

பின்னர் காய்கறிகள் சேர்த்து சிறிதாவு சுருண்டதும் மசாலாவை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்

காய்கறி வெந்தது மசாலா சுருண்டதும் இடியாப்பம் சேர்த்து கிளறவும்.

வெஜிடபிள் இடியாப்பம் தயார்


இதே முறையில் இட்லியிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்