சிக்கன் பிரியாணி - 1

தேதி: June 19, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 500 கிராம்
பச்சரிசி - 3 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லி - ஒரு கட்டு
பட்டை - 10 கிராம்
கிராம்பு - 6
ஏலக்காய் - 4
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 10 பல்
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 5 தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
மஞ்சப்பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
பிரியாணி இலை - 5


 

அரிசியை 6 கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் பிரியாணி இலையை பொடி செய்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
புதினா மற்றும் கொத்தமல்லியை சிறிதாக அரிந்து, சேர்த்து வதக்கவும். சிக்கன் மற்றும் மஞ்சப்பொடியை போட்டு அதனுடன் வதக்கவும். தக்காளியை அரிந்து அதனுடன் வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் வரும் போது கரம் மசாலா சேர்க்கவும்.
பின்னர் அரிசியில் உள்ள தண்ணீரை சிறிது ஊற்றி கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்ததும் ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீரை ஊற்றி கலக்கவும். உப்பு சேர்க்கவும்.
அரிசி பாதி வெந்தவுடன் குக்கர் விசில் போடவும். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள வாணி ரமேஷ் அவர்களுக்கு

உங்கள் சிக்கன் பிரியாணி முறை மிகவும் எளியதாகவும் மிகுந்த சுவையுடனும் இருந்தது.

நன்றி
"அன்பே சிவம்"
தேன்மொழி செந்தில்குமார்
ஆஸ்திரேலியா

"அன்பே சிவம்"
தேன்மொழி செந்தில்குமார்

சகோதரி தேன்மொழி அவர்களுக்கு,

உணவுப்பழக்கம் வெஜிடேரியன்னு ப்ரொஃபைல்ல கொடுத்து இருக்கீங்க.. எப்படி.. சிக்கன் பிரியாணி..?!! :-)

என் கணவருக்காக நான் செய்து கொடுத்து அவர் சொன்ன கருத்து தான் நான் கூறியது.நான் ப்யூர் வெஜிடேர்யன் தான்.

"அன்பே சிவம்"
தேன்மொழி செந்தில்குமார்
ஆஸ்திரேலியா

"அன்பே சிவம்"
தேன்மொழி செந்தில்குமார்

உடன் பதில் கொடுத்தமைக்கு நன்றி. உங்கள் பெயரில் எனக்கு தெரிந்த (சற்று தூரத்து உறவினர்) ஒருவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றார். அவரது கணவர் பெயர் எனக்கு மறந்துவிட்டது. அவராக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ப்ரொஃபைலை பார்வையிட்டேன். அங்கே வெஜிடேரியன் என்று இருந்தவுடன் ஆச்சரியமாய் இருந்தது. அதனால்தான் அந்த கேள்வி. தவறாக எண்ணவேண்டாம்.