பொட்டுக்கடலை மாவுருண்டை

தேதி: June 19, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பொட்டுக்கடலை - 1கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்


 

பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் தனித்தனியே பொடித்துக்கொள்ளவும். (நமுத்த பொட்டுகடலையை வறுத்துப்பொடிக்க வேண்டும்). அவற்றுடன் ஏலக்காய் தூள் சேர்த்து, கலந்து, நெய் சுடவைத்து ஊற்றி, உருண்டை பிடியுங்கள். இது மிகவும் சத்தான உணவு.


மேலும் சில குறிப்புகள்


Comments

பொட்டுக்கடலை மாவுருண்டை ரொம்ப ஈஸி ஆன ஸ்வீட் ரெசிபி நாங்களும் இதேமாதிரிதான் பண்ணுவோம் கொஞ்சம் முந்திரி நெய்யில் வருத்துபோட்டு பண்ணுவோம். நன்றாக இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. லக்ஷ்மிஷங்கர் அவர்கள் தயாரித்த பொட்டுக்கடலை மாவுருண்டையின் படம்

<img src="files/pictures/aa338.jpg" alt="picture" />

இது உருண்டை மாதிரி தெரியலையே, தட்டையா இட்லி மாதிரி இருக்கு? வெள்ளையா இருக்கு, பொட்டுக்க்டலை உருண்டை லைட் மஞ்சள் கலரில் இருக்கும் இல்லையா?

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்புப் பார்க்க சாப்பிட வேண்டும் மாதிரி இருக்கிறது நித்யா. கட்டாயம் எப்போவாவது செய்து பார்க்கிறேன்.

அன்புடன் இமா

பி.கு
சீதாலக்ஷ்மி, லக்ஷ்மிஷங்கர் பாவம். விட்டுருங்க. :)))))
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி தோழிகளே!