தக்காளி குருமா

தேதி: August 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (15 votes)

 

பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - நான்கு
சீரகம், கடுகு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை கழுவி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு வதங்கியதும் தக்காளி துண்டுகளை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைந்து வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.
லேசாக தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும். தக்காளி மீது எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்தவும்.
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எளிதில் சமைக்கக்கூடிய தக்காளி குருமா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Kannai parikuthu kuruma.vaalththukkal

குமாரி குருமா நிறத்துக்கு பேக்ரவுண்ட்டையும் அமைச்சுட்டீங்க:( குருமா நல்லா கலரா சூப்பரா இருக்கு.

நானும் இப்படி தான் செய்வேன்... மிளகாய் தூள் முதல்லையே சேர்த்துடுவேன். கடைசியில் சேர்ப்பதால் தூள் வாசனை வராதில்லையா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சப்பாத்திக்கு ஏற்ற சைடு டிஷ் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

குமாரி அக்கா, குருமா நல்லா டேஸ்டா இருக்கு சுப்பர் ம்ம்ம்ம்ம்ம்....

KEEP SMILING ALWAYS :-)

இப்படி தான் எங்க வீட்ல கூட செய்வோம் குமாரி அக்கா இத பச்சடி நு சொல்லுவோம். அழகா தெளிவா இருக்கு படங்கள் வாழ்த்துக்கள் by Elaya.G

நாங்களும் இதே தான் செய்வோம்... உங்க பாதி குறிப்பில் நான் இதையே தான் சொல்ல வேண்டி இருக்கு ;( நான் என்ன செய்ய... நாங்க வெங்காயம் தக்காளின்னு சொல்வோம். இட்லி தோசைக்கும் சப்பாத்திக்கும் சூப்பர் சைட் டிஷ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க வீட்டுலயும் இப்படி தான் செய்வோம்,குட்டி வித்தியாசம், எல்லாம் முடுஞ்சு கொத்துமல்லி தளை தூவுவோம், அது ஒன்னு மட்டும் தான் வித்தியாசம்.வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாவ்.....கலரே அசத்தலா இல்லை இருக்கு. பார்க்கும் போதே புளிக்குதே.....ஸ்ஸ்ஸ்....

எங்கள் வீட்டில் சப்பாத்தி என்றால் பொதுவாக இது தான் சைடு டிஷ். இதை நாங்கள் தக்காளி வெங்காய தொக்கு என்று சொல்லுவோம் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

suvai arumai seithu paarthuvitten

குமாரி,

ஹே! நானும் இப்படி செய்வேனே!!!தோசைக்கு அடித்து கொள்ள முடியாது

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு குமாரி,

கலர்ஃபுல்லாக செய்திருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

நல்ல கலர்ஃபுலான சூப்பர் குறிப்பு. வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஜானு வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வினோ ஏன் பேக்ரவுண்ட் பிடிக்கலையா? வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஆமினா வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.மிளகாய் வாசம் வராது செய்து பாருங்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் நாகா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ம்ம்ம் நல்லா இருக்கும் செய்து பாருங்க

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இளையா வருகைக்கும் பதிவிற்கும் நன்றி டா.உங்க வீட்ல செய்யறதும் இப்படிதானா சந்தோசம்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனி வருகைக்கும் பதிவிற்கும் நன்றி .உங்க வீட்ல செய்யறதும் இப்படிதானா .அபோ டேஸ்ட் எப்படி இருக்குனு தெரியும்.

ஹா ஹா ஹா நாமம் வீட்டில் ஒரே சமையல் தான்னு சொல்லுங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுகி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி . நீங்களும் இம்முறையில் தான் செய்விங்களா? அபோ டேஸ்ட் எப்படி இருக்குனு தெரியும்.

நானும் சேர்ப்பேன் அதும் இல்லாம அவசரமா சாப்பிட வேண்டி இருந்தது அதான்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

லாவண்யா வருகைக்கும் பதிவிற்கும் நன்றி . நீங்களும் இம்முறையில் தான் செய்விங்களா? நாம பேர்தான் மாத்தி மாத்தி சொல்றோம் ,மத்தபடி ஒரே செய்முறைதான்.

ஏதும் காய் இல்லை என்றால் பத்து நிமிடத்தில செய்யகூடிய தக்காளி குருமாதான் நான் செய்வேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்க்கு நன்றி ஜானு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கவி வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஆமாம் கவி தோசை சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சீதா மேடம் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரம்யா வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி செய்வது ஈஸி தான் செய்து பாருங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நானும் இப்படித்தான் செய்வேன் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பாத்திமா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி சப்பாதிக்கு ஏற்ற சைடு டிஷ் சூப்பர்ர்ர்ர்ர் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்வர்ணா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪