பூண்டுச்சட்னி

தேதி: August 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (15 votes)

 

பூண்டு - 150 கிராம்
வரமிளகாய் - 10-15 காரத்திற்கு ஏற்ப
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி


 

பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். மற்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்து பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளி மூன்றையும் நன்றாக பொடிக்கவும். பின் வதக்கிய பூண்டை சேர்த்து அரைத்தெடுக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு ஏற்ற காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது உங்களோட முதல் விளக்க பட குறிப்பு, சூப்பர். சத்தான குறிப்பு. பூண்டு இப்படியாவது சாப்பிடலாம் , சீக்கரம் பண்ணி பாத்துடறேன். இன்னும் நிறைய குறிப்பு அனுப்புங்க :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மஞ்சு மேம் விளக்கப்படத்துடன் உள்ள குறிப்பா ம் அசத்துங்க. இனி படத்துடன் நிறைய குறிப்பு பார்க்கலாம். நான் வதக்கி துவையலாக செய்திருக்கேன். இப்படி சட்னியா செய்தது இல்லை. இது எத்தனைநாள் வரைக்கு வைச்சுக்கலாம்.

மஞ்சு

விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன்.... கண்டிப்பா செய்தே ஆகணும். போட்டோல இருக்குற சட்னியின் டேஸ்ட் சுவைக்காமலேயே தெரியுது

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அருமையான சட்னி குடுத்த மஞ்சுளாவிற்கு நன்றி

KEEP SMILING ALWAYS :-)

ஆஹா மஞ்சு முதல் விளக்கபட குறிப்பா அதுவும் எனக்கு பிடிச்ச பூண்டுசட்னி ஆஹா அருமை நானும் இதேபோல்தான் செய்வேன் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை மஞ்சு வாழ்த்துக்கள்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்லா இருக்குங்க சூப்பர் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய குறிப்புகள் தந்து அசத்துங்க by Elaya.G

மிகவும் சுவையான குறிப்பு. நாளை காலை இது தான் செய்ய போறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் சுவையான சத்தான குறிப்பு..

தளிர்

எனக்கு பூண்டு என்றால் ரொம்ப பிடிக்கும். அது என்னவோ தெரியலைங்க இங்குள்ள பூண்டில் எப்படி அரைத்தாலும் நம்மூரில் செய்யும் ருசி வரவே மாட்டேங்குது. நான் தக்காளி சேர்த்து தான் செய்வேன்....இந்த முறை படியும் செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மஞ்சுளா மேடம்,

ஸ்ஸ்ஸ் சூப்பர் சட்னி..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு மஞ்சுளா,

சூப்பர் கார சட்னி, பாராட்டுக்கள். பூண்டு வாசனை மிளகாயோடு சேர்ந்தால் சுவை அலாதிதான்.

அன்புடன்

சீதாலஷ்மி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுகந்தி
முதல் ஆளா வந்து பின்னூட்டம் தந்ததற்க்கு நன்றி. குறிப்பை செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வினோ

பின்னூட்டத்திற்கு நன்றி. ஒரு வாரம் வரை வைத்துக்கொள்ளலாம்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

manjula madam unga poondu chatnee parkumpothe sappidanum pola irukku

ஆமி

வாழ்த்துகளுக்கு நன்றி. செய்து பாருங்க
நாகா ராம்
வாழ்த்துகளுக்கு நன்றி
ஸ்வர்ணா
வாழ்த்துகளுக்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஜெனிலியா, கவிதா,வனிதா

வாழ்த்துகளுக்கு நன்றி. செய்து பாருங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

தளிர்,லாவன்யா, சீதாலக்ஷ்மி மேடம்

வாழ்த்துகளுக்கு நன்றி.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சு சுவையான குறிப்பு வாழ்த்துக்கள்

பாத்திமா மேம்
வாழ்த்துக்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வாவ் பாத்தாலே நாவில் நீர் ஊருகிறது.படத்துடன் அழகா விளக்கியிருகிங்க.வாழ்துக்கள்.உடனே செய்து பார்கிறேன்.

மஞ்சுமேம் இன்னைக்கு காலையில உங்க பூண்டுச்சட்னி செய்தேன். ரெட் கலருல ரொம்ப நல்ல இருந்தது சட்னி சுவையான குறிப்பு கொடுத்தற்கு நன்றி.

மஞ்சுளா உங்கள் பூண்டுசட்னி செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. இட்லிக்கு காம்பினேஷன் சூப்பராக இருந்தது. வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
மகேஸ்வரி

மஞ்சு,
முதல் விளக்கப்பட குறிப்பா?சூப்பரா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

இன்று உங்கள் பூண்டுச்சட்னி மற்றும் வெங்காய சட்னி செய்தேன்.மிக மிக அருமை....வாழ்த்துக்கள். இட்லி தான் சொதப்பிவிட்டது.எனக்கு இட்லி பூச்சியம் தான்...ரொம்ப களியா வந்துச்சு. எத்தனையோ முறை விதம் விதமாக இட்லிக்கு முயற்சி செய்து விட்டேன். ஒன்றுமே சரிவரலை.