fashion dress-- krishnan

hello friends
எனது அண்ணன் பையனுக்கு கிருஸ்ணன் ஜயந்திக்கு கிருஸ்ணன் மாதிரி dress பண்ணணும்.
எப்படி பண்ணனும் சொல்லுங்க ...pls

ஹாய் ஹர்ஷினி அண்ணன் பையனுக்கு எத்தனை வயது.

நெட்ல நிறைய படம் இருக்கு. தேடி அழகா ஒரு கிருஷ்ணர் படம் புடிச்சுக்கங்க. அதைப் பார்த்து தேவையானது எல்லாம் சேகரித்து ட்ரெஸ் பண்ணி விடுங்க. முடி & கிடைக்காத நகைகள்... அட்டையில் கோல்ட் பேப்பர் ஒட்டி அதில் சம்கி ஒட்டி செய்து எடுக்கலாம். அழகா கோல்ட் நாடா போட்டு கட்டி விடுங்க.

முகத்துக்கு கைக்கு என்ன பண்ணலாம்னு தெரியல. ;( பௌடர் பேஸ் கலர் கிடைக்குமா அங்கே? நீல நிறம் வாங்கி பூசிவிடலாம். ஐ ஷாடோ கூட நல்லது. ஆனால் அவ்வளவு எங்கே கிடைக்கும். ;) ட்ராமால மேக்கப் போடுறதுக்கு ஏதாவது இருக்கும் கட்டாயம். என்ன யூஸ் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியல. யாராவது தெரிஞ்சவங்க இருந்தா விசாரிச்சுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

தலைக்கு குடுமி போட்டு மயில் தோகை வச்சிவிடுங்க. பொட்டு வைக்காம நாமம் போட்டு , லிப்ஸ்டிக் போட்டு கண்ணுக்கு மை போட்டு புருவத்தின் மேல் வெள்ளை சிகப்பு போட்டு மாறி மாறி வைத்து உடலின் மேல் பகுதி சட்டை இல்லாமல் கழுத்தில் நல்ல மணி மாலை போட்டு அதன் பிறகு பஞ்சகச்சம் கட்டி விடவும்.(எப்படி கட்டுவது என்பதை வளைதளத்தில் தேடி பாருங்கள் ) இப்படி தான் நான் என் மகளுக்கு செய்ய போகிறேன் . கையில் flute கொடுத்துவிடவும் .

மேலும் சில பதிவுகள்