நூடுல்ஸ் & உருளை ப்ரை

தேதி: August 20, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

வெஜ் நூடுல்ஸ்:
ஸ்பெகட்டி - அரை பாக்கெட்
வெங்காயம் - ஒன்று
காரட் - ஒன்று
பீன்ஸ் - 10
முட்டைகோஸ் - 4 இலை
குடைமிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
முட்டை - 3
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - சிறிதளவு
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொட்டேடோ ஃப்ரை:
உருளைக்கிழங்கு - 2
உப்பு, மிளகுத்தூள் கலவை - ஒரு மேசைக்கரண்டி
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி


 

ஸ்பெகட்டியை உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டி தனியே வைக்கவும். காய்களை நீளவாக்கில் சன்னமாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வறுக்கவும்.
முட்டை ஈரப்பதம் இல்லாமல் சுருண்டு வந்ததும் அதனுடன் வெங்காயம் மற்ற காய்கள் எல்லாம் சேர்த்து ஹைஃபிளேமில் வைத்து வேக வைக்கவும்.
காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் ஸ்பெகட்டியை சேர்த்து வதக்கவும். அதனுடன் அஜினோமோட்டோ, சோயா சாஸ், வினிகர், மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஹைஃபிளேமில் வதக்கவும்.
எல்லாம் ஒன்று கூடி வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைக்கவும்.
முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி மிளகுத்தூள், உப்பு கலவை, மிளகாய் தூள் கலந்து தனியே வைக்கவும்.
பின்பு கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் மைதாமாவு சேர்த்து பிசறவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து பிசறி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு வறுத்தெடுக்கவும்.
வறுத்தெடுத்த உருளைக்கிழங்கை ஒரு டிஷ் பேப்பரை விரித்து அதில் போட்டு வைக்கவும்.
வெஜ் நூடுல்ஸ் மற்றும் பொட்டேடோ ஃப்ரை ரெடி. டொமேட்டோ கெச்சப்புடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நூட்லஸ் + உருளைக்கிழங்கு =>அடேகப்பா சூப்பர்ங்க. படங்கள் தெளிவா இருக்கு. வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப சூப்பரா இருக்குங்க உங்க குறிப்பு படங்கள் நல்லா தெளிவா எடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் by Elaya.G

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றிகள் பல.
பொன்னி

சுகந்தி, இளையா நன்றிப்பா. செய்துபாருங்க ரொம்ப ஈஸி.

ponni

உங்க நூடுல்ஸ் சூப்பர்....... படங்கள் தெளிவா இருக்கு சீக்கிரம் செய்து பாத்துட்டு சொல்ரேன்.......
அன்புடன்
லதா....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

பொன்னி எப்படி இருக்கீங்க?

பையன் எப்டி இருக்கார்?

ரொம்ப நாளாச்சு பார்த்து :) அருமையான குறிப்பு தொடர்ந்து கொடுங்க....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வெகு நாட்களாக காணோமே... நல்ல குட்டீஸ் ரெசிபி. :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanks ஆமி நல்லா இருக்கேன் . பையனும் நல்லா இருக்கார். ரெசிப்பி செய்துபாருங்க
பொன்னி

வாழ்த்துக்களுக்கு நன்றி வனி. இந்தியா போயிட்டு வந்து கொஞ்சம் பிஸி ஆயிடுச்சு. அதான் பா

பொன்னி

குழந்தைகளுக்கேற்ற அருமையான குறிப்பு. புரதம் மற்றும் காய்கறிகள் என்று எல்லாம் இருக்கு. இருந்தாலும் நூடுல்சுடன் பிரைஸ் புதுசா இருக்கு...எப்பவுமே பர்கர், சண்ட்விச் உடன் தான் சேர்த்து சாப்பிட்டு பழக்கம்......ட்ரை பண்றேன்....வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லதா
வாழ்த்துக்களுக்கு நன்றி லதா. டிரை பண்ணி பாருங்க

லாவண்யா
நன்றி லாவண்யா
ஃபிரைஸ் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Healthy noodles +fries,
இந்த காம்பினேஷனும் நல்லாஇருக்குப்பா டிரை பண்ணி பாருங்க
பொன்னி

பொன்னி செய்து பார்த்தாச்சு சூப்பரா இருந்தது நல்ல குறிப்பு குடுத்ததுக்கு நன்றி

GOOD COMBINATION WILL MAKE & GIVEN RESP.TO U ..... NITHAANAMAKA AVASARAPPADU..

VETKAPPADUM VITHAMA THAPPU PANNAKKUDAATHU ... MEERI THAPPUPPANNITTA VETKAPPADAKKUDATHU ..SAMAYAL SPL

பாத்திமா செய்துபாத்தீங்களா? நல்லா இருந்ததா??
செய்துபார்த்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி மா. நம்பமாட்டீங்க நான் இப்போ சிக்கன் சுத்தம் பண்ணி வைச்சுட்டு மிளகு சிக்கன் ரெசிப்பி பாக்கதான் கம்ப்யூட்டர் ஒபன் பன்னினேன். இப்போ செய்ய போறேன்
காலைல கண்டிப்பாவந்து எப்படி இருந்ததுன்னு சொல்றேன்
பொன்னி

பொன்னி சூப்பரான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஏதோ சொல்லி இருக்கீங்க ஆனா என்ன சொல்லி இருக்கீங்க நிஜமாவே புரியல பா. கீழ தமிழ் எழுத்துதவி இருக்கு அதை உபயோகப்படுத்துங்க.

பொன்னி

நன்றி ஸ்வர்ணா.
பொன்னி

சூப்பர் காம்பினாஷன் :)
பார்க்கவே அழகு .வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பொன்னி,
குட்டீஸ்க்கான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா:
ஆமாம்பா எனக்கு பிடித்த காம்பினேஷன், வாழ்த்துக்கு நன்றி ரம்யா. செய்து பாருங்க

கவிதா:
ஆமாபா குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும் வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து கொடுக்கிறதால நமக்கும் ஒரு திருப்தி.வாழ்த்துக்கு நன்றிப்பா செய்துபாருங்க

பொன்னி