மிளகு சிக்கன் கிரேவி

தேதி: August 20, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (11 votes)

 

சிக்கன் - முக்கால் கிலோ
வெங்காயம் - 4
மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - 3 அல்லது 4 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 குழிக்கரண்டி


 

கோழியை சுத்தம் செய்து கழுவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வதக்கி அதனுடன் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
வதக்கிய பின் கோழியை போட்டு வதக்கி அதனுடன் மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்க்கவும்.
ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
கோழி வெந்ததும் இறக்கி பரிமாறவும். இது சாதம் சப்பாத்தி பரோட்டாவிற்கு நல்ல காம்பினேஷன்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலரே தூக்கலா இருக்கு, சூப்பர் காரமா இருக்கும்ன்னு நினைக்கறேன். வாழ்த்துக்கள்ம்மா!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எனக்கு சிக்கன் எப்படி பண்ணாலும் பிடிக்கும் இந்த முறைப்படியும் செய்து பார்கிறேன் அக்கா இத பாத்ததும் பசிக்க ஆரம்பிச்சுடுச்சு பார்சல் ப்ளீஸ் வாழ்த்துக்கள் by Elaya.G

நாளைக்கு கோகுலாஷ்டமி.... நான் வெஜ் கெடயாது ஆனா நாவுல தண்ணிவுருது என்ன பன்ன இன்னொரு நாள் செய்து பாத்துட்டு சொல்றேன்.... பாக்கவே யம்மீமீமீ..........(கலக்குறீங்க பாதிமா)
அன்புடன்
லதா......

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

நல்ல குறிப்பு. பார்த்தாலே ஆசையா இருக்கு. நாளை செய்துட்டு சொல்றேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வழக்கம் போல சூப்பர் குறிப்பு
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிக்கன் கிரேவி இப்பவே எடுத்து என்னை சாப்பிடு என்று அழைக்குது :)அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாத்திமா சுவையான குறிப்பு இன்னைக்கு சிக்கன் தான் செய்ய போறேன் உங்க முறைபப்டி செய்துட்டு சொல்றேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இங்க பரோட்டாவிற்கு இந்த மிளகு சிக்கன் கிரேவிதான் ஃபேமஸ்.. எனக்கு ரொம்ப பிடிச்ச ஐடம் ;) எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி;)

Don't Worry Be Happy.

சுகி முதல் ஆளாய் வந்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி வருகைக்கு நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

இளையா செய்து பாருங்கள் அட்ரஸ் ப்ளீஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

லதா வருகைக்கு நன்றி

வனி வருகைக்கு நன்றி செய்துட்டு சொல்லுங்கள்

ரம்யா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

லாவண்யா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

குமாரி செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

ஜெயா வருகைக்கு நன்றி

சிக்கன் க்ரேவி சூப்பர் கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சும்மா சொல்லகூடாது சூப்பரா இருந்தது. நேற்று நைட் சப்பாத்திக்கு குழம்பா சாப்பிட்டோம் மீதி இருந்ததை நல்லா ட்ரை ஃபிரை செய்து மதியம் ரசம் ,சாதம் கூடவும் சாப்பிட்டோம் நல்லா இருந்தது. குறிப்புக்கு நன்றிம்மா
பொன்னி

ஹமீதா அம்மா,
அருமையான மிளகு கறி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நல்லா இருந்தது, காரமாகவும் நல்ல டேஸ்ட்டாகவும் இருந்தது