காய்கறி குருமா

தேதி: August 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

உருளை,கேரட்,பீன்ஸ்,கோபி,பட்டாணி- ஒவ்வொன்றிலும் தலா 25 கிராம்
மீல்மேக்கர்- 25 கிராம்
தக்காளி-2
மசாலாவிற்கு
நிலகடலை- ஒரு கைப்பிடி
தேங்காய்துருவல்-3 ஸ்பூன்
பூடு-6
வரமிளகாய்-4
மிளகு-4
பட்டை-2
தனியா-2 ஸ்பூன்
புளி- சிறிதளவு

தாளிக்க:-
எண்ணெய்
கடுகு
சீரகம்
கடலைபருப்பு
உளுந்து
வெங்காயம்-2
பூடு-4 பல்
வரமிளகாய்-2
கறிவேப்பிலை-ஒரு கொத்து


 

காய்கறிகளை ஓரளவுக்கு பொடியார் நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும்

மீல்மேக்கரை சுடுநீரில் 5 நிமிடம் வைத்து பின் பிழிந்து எடுத்து வைக்கவும்

மசலாவிற்கு கொடுத்துள்ளவற்றை வெறும் சட்டியில் வறுத்து நீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

பின் காய்கறிகளையும் மீல்மேக்கரையும் உப்பும் சேர்த்து பாதி பாகம் வேக விடவும்

பின் மசலாவை நீரில் கரைத்து அதில் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளியும் சேர்த்து கொதிக்க விடவும்

மசாலா வாசனை போனதும் இறக்கவும்


சப்பாத்தி அல்லது பூரிக்கு காம்பினேஷனாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்