ஓட்ஸ் பணியாரம்

தேதி: August 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (10 votes)

 

ஓட்ஸ் - 2 கப்
கடலை பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
வர மிளகாய் - 8
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை
இஞ்சி, சீரகம் - சிறிதளவு
கொத்தமல்லித் தழை
உப்பு - தேவையான அளவு


 

ஓட்ஸ் பணியாரம் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
பருப்பு வகைகளை 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். ஓட்ஸ் மற்றும் வரமிளகாயை நைசாக பொடி செய்து கொள்ளவும்.
இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து அதனுள் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, இஞ்சி, சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் இந்த மாவு கலவையை ஊற்றவும். இருப்புறமும் பணியாரத்தை வேகவிட்டு எடுக்கவும்.
சுட சுட, சத்தான ஓட்ஸ் பணியாரம் ரெடி. எல்லா பருப்பு வகைகளும் சேர்த்து இருப்பதால் உடம்பிற்கு மிகவும் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஓட்ஸ்ன்னு பார்த்ததும் உங்க நியாபகம் தான் வந்தது... குறிப்பும் உங்களுதாவே இருக்கு ;) அவசியம் செய்து பார்க்கிறேன்... ஏகப்பட்ட ஓட்ஸ் இருக்கு வீட்டில். பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகி ஓட்ஸ் பணியாரம் பார்க்கவே சூப்பரா இருக்குப்பா,கண்டிப்பா செய்து பாக்கனும் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுகி உங்க சமையல் எப்போதும் சிம்பிளி சூப்பர் தான். சத்தான குறிப்புதான் ஒட்ஸ் பணியாரம். பணியாரக்கல் வாங்கினதும் செய்து பார்த்துடுறேன் சுகி. வாழ்த்துக்கள்.

அன்பு சுகந்தி,

சாயங்கால நேரத்துக்கு செய்து சாப்பிட சுவையான குறிப்பாகத் தந்திருக்கீங்க, பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

சுவையான சத்தான டிபன். வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஆரோக்கியமான சுவையான குறிப்பு.. ஓட்ஸ்னு பார்த்ததும் நீங்க தானு நினைத்தேன் :) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுகி,
எளிய குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சத்துள்ள சிம்புலான குறிப்பு சுகந்தி. கண்டிப்பாக இதில் புரதம் மற்றும் நார் சத்து அதிகம்....டயத்துக்கு ஏற்ற உணவு.

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுகி நன்றாக செய்து இருக்கீங்க, சத்தான குறிப்பு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வனி - முதல் ஆளா வந்து பதிவு போட்டதுக்கு நன்றி, ஓட்ஸ் எனக்கு பிடித்த ஒன்று. இதை பண்ணி பாருங்க, அப்பறம் ஓட்ஸ் சீக்கரம் தீந்து போய்டும்... :-)

ஸ்வர்ணா - வாழ்த்துக்கு நன்றி, பண்ணி பாத்துட்டு சொல்லுங்க

வினோஜா - வாழ்த்துக்கு நன்றி டா, பணியாரக்கல் ல தான் ஊத்தனும்ன்னு இல்ல, அடை மாதிரி தோசை கல்லையே ஊத்துங்க. செம டேஸ்ட் ஹா இருக்கும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சீதாம்மா - நலமா? உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.

மஞ்சுளா - செய்து பாத்துட்டு சொல்லுங்க, வாழ்த்துக்கு நன்றி...

ரம்யா - நீங்களும் ஓட்ஸ் பாத்துட்டு நான்னு நினைசீங்களா!!!! வாழ்த்துக்கு நன்றி

கவிதா -வாழ்த்துக்கு மிக்க நன்றி

லாவண்யா - கண்டிப்பா ரொம்ப ரொம்ப சத்தான உணவு, கொஞ்சம் சாப்பிட்டாலே போதும். :-)

குமாரி- வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சத்தானா ஓட்ஸ் குழிபணியாரம்

Jaleelakamal

நலமா? ரொம்ப நாள்க்கு பின்னாடி பாக்கறேன்!!
வாழ்த்துக்கு மிக்க நன்றி,

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி... ஓட்ஸ் ல பணியாரமா....??? கலக்கறீங்க போங்க... எப்படித்தான் கண்டுபிடிக்கரீங்கலோ தெரியல.... :) ஆனா சூப்பர் டயட் குறிப்பு.... நான் தினமும் ஓட்ஸ் சாப்பிடற ஆள்தான்... இதுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லணும்.... வாழ்த்துக்கள்.....

வித்யா பிரவீன்குமார்... :)

அருமையான பணியாரம்... பார்த்துட்டு சொல்லல, சாப்பிட்டுட்டு சொல்றேன் ;) இப்ப தான் ஒரு 6 பணியாரம் முழுசா உள்ளே போச்சு. சுவையாக இருந்தது. குழந்தைகளுக்கும் பிடிச்சுது. நன்றி சுகி :) இனி ஓட்ஸ் செல்வாயிடும் வீட்டில்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்களும் ஓட்ஸ் பிரியரா..நானும் தான். இது பண்ணி பாருங்க, ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்க பண்ணி சாப்பிடதுமே, நான் சாப்பிட்ட மாதிரி இருக்கு. குட்டீஸ்க்கும் புடுச்சுதா,தேங்க்ஸ் வனி.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி சத்தான குறிப்பு வாழ்த்துக்கள்

சுகந்தி.... இன்னிக்கு நைட் டின்னர் உங்க ஓட்ஸ் பணியாரம் சாப்பிட்டு விட்டு பதிவு போடறேன்... ரொம்ப நல்லா இருந்துச்சு... ஓட்ஸ்-ல செய்த மாதிரியே இல்ல... செய்வதற்கும் ரொம்ப சுலபம்... இனி அடிக்கடி என் மெனுவில் இது இருக்கும்... :) நன்றி....

வித்யா பிரவீன்குமார்... :)

பாத்திமா - வாழ்த்துக்கு மிக்க நன்றிம்மா!!!

வித்யா - அதுக்குள்ளே பண்ணீட்டீங்களா!! ரொம்ப சந்தோசம், நேத்து நீங்க,வனி ரெண்டு பேருமே பண்ணிட்டு வந்து பதிவு போட்டது ரொம்ப சந்தோசம், மிக்க நன்றி வித்யா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி ஓட்ஸ் பணியாரம் நல்லா இருந்ததுப்பா. இதே மாவு மிக்ஸ் வைத்து கொஞ்சம் தண்ணியா கரைத்து ஒருநாள் தோசையும் செய்தேன் அதுவும் நல்லா வந்தது. தக்காளி சட்னி அதோட நல்ல காம்பினேஷனா இருந்ததுபா.
நல்ல குறிப்பா குடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்.

பொன்னி

ஒட்ஸ் பணியாரம் செய்து பர்ர்த்தேன். சுவை நன்றாக இருந்தது. என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்புக்கு நன்றி.