காரட் சூப்

தேதி: June 20, 2006

பரிமாறும் அளவு: 5 கப்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - 400 கிராம்
வெங்காயம் - 1
பயத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 1 டீ கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்


 

காரட் மற்றும் வெங்காயத்தையும் பெரிதாக நறுக்கவும்.
இத்துடன் 3 டீ கப் தண்ணீர் மற்றும் பயத்தம் பருப்பையும் சேர்த்து குக்கரில் 1 விசில் வைத்து எடுக்கவும்.
பருப்பு வெந்தபின் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக மசிக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சவும்.
காய்ச்சிய பின் காரட்-பருப்பு கலவையை இதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
உப்பு-மிளகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் நித்தியகோபால்! இன்று உங்கள் காரட் சூப் செய்தேன் .சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணக்கூடிய சிறந்த உணவு. செய்வதும் மிகவும் சுலபம். நன்றி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நன்றி.