மிளகு குழம்பு

தேதி: August 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
தக்காளி - ஒன்று
புளி - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு, சீரகம், தனியா, உளுந்து - ஒரு தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு


 

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அரிந்து வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், தனியா, உளுந்து, பூண்டு சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதை லேசாக தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
அதே வாணலியில் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது, புளி கரைசலை ஊற்றவும்.
நன்றாக கொதிக்கும் போது, மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்து வைத்த விழுதை போட்டு கொதிக்க வைக்கவும்.
கடைசியாக ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
சுவையான மிளகு குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆகா... பார்க்கவே அழகா இருக்கே.... கலர் சூப்பர். அவசியம் செய்து பார்த்துட்டு வரேன்... ஆரோக்கியமான குழம்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி மிளகு குழம்பு சூப்பர் பா,நல்ல பசியை கொடுக்கும் இந்த குழம்பு வாழ்த்துக்கள் .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி மிளகு குழம்பு நல்லா இருக்கு. இந்த மழைக்காலத்து செய்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இன்னும் 9 குறிப்பு இருக்கு கோல்டு ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

அன்பு கவிதா,

நல்ல காரசாரமான குழம்பு! சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

சுடு சாததிற்கு ஏற்ற குழம்பு.. வாழ்த்துக்கள். :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,குழுவினர்க்கும் நன்றி

வனிதா மேடம்,
செய்து விட்டு சொல்லுங்க.
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ஸ்வர்ணா,
சரியா சொன்னீங்க.
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

வினோ,
மழைக்கு ஏற்ற உணவு தான்..
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

சீதா அம்மா,
சுவையாக இருக்கும்.
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ரம்யா,
வெங்காயம்,தக்காளி சேர்க்காமல் செய்தால் இரு வாரம் கூட பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மிளகு குழம்பு சூப்பர். நாங்கள் பூண்டை அரைக்காமல் தக்காளி சேர்க்காமல் செய்வோம். இது சிறு மாறுதலோடு நன்றாக இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம், ஏற்க்கனவே தான் நாம் மிளகு சீரகம் இவையெல்லாம் சேர்த்து அரைத்து குழம்பில் சேர்த்து விட்டோம் அல்லவா....அதன் பிறகும் ஆல் பர்பஸ் பொடி சேர்க்கனுமா.....காரம் அதிகம் ஆகிடாதா? கண்டிப்பாக அடுத்த தடவை மிளகு குழம்பு உங்க முறைப்படி தான் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆல் பர்பஸ் ????? ithu yenna powedr ?

கவி குழம்பு சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கலக்கல் குறிப்பு கவிதா

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பிரமாதம், சுவையான குழம்பு ரெடி.... வித்தியாசமான குழம்பு,வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நல்ல காரசாரமான குழம்பு விருப்பபட்டியில் சேர்த்துட்டேன் வாழ்த்துக்கள்

லாவண்யா,

கொஞ்சம் காரமா தான் இருக்கும்.பூண்டை எப்படியாவது சாப்பிடுவது என்ற எண்ணத்தில் தான் அரைத்து சேர்த்தேன்.பொடி போடாம செய்தால் குழம்பு வாசனையே இல்லாதது போலே இருக்கும் (மூக்கு நீண்ட தேவதை நான்!!!)
போடாமல் செய்தாலும் வித்தியாசமா தெரியாது
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

கவிஅன்பு,

இந்த லிங்கை சொடுக்குங்க:http://www.arusuvai.com/tamil/node/15911

குமாரி,

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ஆமி,

உங்களது குறிப்பை விடவா?
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

சுகி,

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

பாத்திமா அம்மா,

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

hai kavi, unga milagu kulambu super innaike seithu parka poran seithuttu solren. kavi peru pidichirukku. bye.

கவிதா, ஆல்பார்பஸ் பொடி எப்படி தயார் செய்வது.

ஜீவி, கவிதா ஆல் பர்பஸ் பொடி முன்பே படங்களுடன் கொடுத்து இருக்காங்க. அதோட லிங்க http://www.arusuvai.com/tamil/node/15911.

ரொம்ப நன்றி வினோ.

ரொம்ப நன்றி வினோ.