சுரைக்காய் அடை

தேதி: August 22, 2011

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

சுரைக்காய்(துருவியது)-2கப்
அரிசி மாவு-2கப்
கடலைபருப்பு-அரை கப்
பச்சை மிளகாய்-5
இஞ்சி-சிறு துண்டு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-பொரித்தெடுக்க
கறிவேப்பிலை-சிறிதளவு
கொத்தமல்லி இலை-சிறிதளவு


 

1.இஞ்சி,பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.கடலை பருப்பை ஒரு மணி நேரத்திற்க்கு முன்பு ஊறவைக்கவும்.

2.துருவிய சுரைக்காயில் அரிசி மாவு,பச்சைமிளகாய் இஞ்சி விழுது,தேவையான அளவு உப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி,ஊறவைத்த கடலைபருப்பு அனைத்தையும் நன்றாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.

3.இவற்றை ஒரு பாலிதீன் கவரில் அடை போல தட்டி எண்ணெயில் பொரிதெடுக்கவும்.


சுரைக்காயில் உள்ள நீரே இதற்க்கு போதும்.
சாஸ் (அ) புதினா சட்னியுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்