வாழைப்பூ, கீரை பொரியல்

தேதி: June 20, 2006

பரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய வாழைப்பூ - ஒன்று
ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு
து.பருப்பு - ஐம்பது கிராம்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
சி.வெங்காயம் - ஐம்பது கிராம்
ப. மிளகாய் - நான்கு
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் -ரு டீ ஸ்பூன்
எண்ணை - இரண்டு டீ ஸ்பூன்
உப்பு - இரண்டு டீ ஸ்பூன்


 

முதலில் து.பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.
வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு மூன்று சுற்று சுற்றி துருவல் போல் ஆனதும் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
கீரையை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
சி. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, சீரகம் போடவும்.
வெடித்ததும் வெங்காயம், மிளகாய் சேர்க்கவும்.
வதங்கியதும் வாழைப்பூ, உப்பு போடவும்.
ஐந்து நிமிடம் நன்றாக கிளறி கீரை சேர்க்கவும்.
மேலும் ஐந்து நிமிடம் கழித்து வேக வைத்த பருப்பை போட்டு முன்று நிமிடம் கிளறி இறக்கவும்.


விருப்பமுள்ளவர்கள் இறக்கும் சமயம் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் கிண்டி இறக்கலாம்.
பொதுவாக இந்தப் பொரியலை எங்கள் ஊர் பக்கங்களில் முருங்கைக் கீரை சேர்த்துத்தான் செய்வர்கள். ஆனால் வெளிநாடுகளில் இந்தக் கீரை கிடைக்காததால் நான் மற்ற கீரைகளை பயன்படுத்தி செய்ய ஆரம்பித்தேன். சுவை நன்றாகவே இருந்தது. எந்தக்கீரை வகையை வேண்டுமானலும் சேர்க்கலாம். ஆனால் முருங்கைக் கீரை கிடைக்கும் நம்மவர்கள் அதனை சேர்த்தால் சுவை மிக நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்