சிக்கன் பக்கோடா

தேதி: August 23, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

சிக்கன் - அரைகிலோ (எலும்பில்லாதது)
கடலைமாவு-50 கிராம்
அரிசிமாவு-50கிராம்
கார்ன்ப்ளார் -25 கிராம்
பச்சைமிளகாய்-2
மிளகாய் தூள்- அரைஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது-2 ஸ்பூன்
வினிகர்-2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-கால்ஸ்பூன்
கலர்-தேவைபட்டால்
உப்பு-தேவைக்கு
சீரகம்-கால்ஸ்பூன் (ஒன்றிரண்டாய் பொடித்தது)
கொத்தமல்லி-கால் கப்
வெங்காயம்-அரை கப்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
எண்ணெய்-பொரிக்க
முட்டை-1


 

சிக்கனை முள் இல்லாமல் எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிடவும்

பின் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து பினைந்து அரைமணி நேரம் ஊறவிடவும்

பின் சிறிசிறிதாக எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்கவும்

சிக்கன் பக்கோடா தயார்


வெங்காயம்,கொத்தமல்லி,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் ஆகிவற்றை பொடியாக நறுக்க வேண்டும். தேவையெனில் சிக்கனும் சேர்த்தே மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற விடலாம். மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாதவகைகளுடன் சேர்த்து பரிமாறவும் அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமி சூப்பர் ரொம்பவே எளிமையான குறிப்பு ஈசியா செய்துடலாம்.வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரொம்ப எளிமையான குறிப்பு. ஆனால் ஒரு சிறு சந்தேகம்.
இதில் சிக்கனை வேக வைத்து, மிக்ஸியில் போட வேண்டுமா...

அன்புடன்
மகேஸ்வரி

மிக்க நன்றி குமாரி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மகேஸ்வரி

சிக்கனை வேக வைக்கதேவையில்லை. சாதாரணமாகவே ஒரு சுற்று மிக்ஸியில் விடலாம். மிக்ஸி யூஸ் பண்ண விருப்பமில்லைன்னா நம்மலே கைமா பண்ணி யூஸ் பண்ணலாம். சிக்கன் என்பதால் எண்ணெயிலேயே வெந்துவிடும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

romba easyana recipe it tastes gud thank u aamina.....

Idhuvum kadanthu pohum....

மிக்க நன்றி ப்ரியா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அக்கா நல்ல குறிப்பு ஈஸியா செய்யக்கூடிய நல்ல ஸ்நாக்ஸ் நல்ல சைடு டிஸ் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மிக்க நன்றி ரேணுகா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஒரு சந்தேகம்....வெங்காயம், ப.மிளகாய் அரைத்துப் போடவேண்டுமா? சிறிதாக வெட்டிப் போடலாமா??கொத்தமல்லி.......தழையா?? முழு தனியாவா?

அன்புடன்
நிஜாமுதீன்

amended......

மன்னிக்கவும்.....குறிப்பில் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்!!!! சமைத்து விட்டு......சொல்கிறேன்..... நன்றி.....

அன்புடன்
Nizamuddin - Doha,Qatar
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு