8 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

என் மகனுக்கு 7மாதம் முடிந்து 8வது மாதம் ஆரம்பித்து இருக்கிரது........அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?பருப்பு சாதம் முட்டை மஞ்சட் கரு குடுக்கிறேன் எதை கொடுத்தாலும் வாய்க்குல்லேயே வைத்து துப்பி விடுகிறான் என்ன செய்வது...???

லாவண்யா ரொம்ப நன்றி பா உங்க விளக்கமான பதிலுக்கு இப்ப அவனுக்கு சத்து மாவு கஞ்சி கொடுக்கலாமா? எப்படி செய்வது?அது குளிர்மயா?சாப்பாட்ட கண்டாலே அழறான்பா...........நல்லா மெலின்சிட்டான்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

லாவண்யா ரொம்ப நன்றி பா உங்க விளக்கமான பதிலுக்கு இப்ப அவனுக்கு சத்து மாவு கஞ்சி கொடுக்கலாமா? எப்படி செய்வது?அது குளிர்மயா?சாப்பாட்ட கண்டாலே அழறான்பா...........நல்லா மெலின்சிட்டான்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

தாராளமாக கஞ்சி கொடுக்கலாம்.

அரிசி மாவு கஞ்சி செய்ய ஒரு கப் அரிசியை எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கால் பங்கு பொட்டுக்கடலை, இரண்டு மிளகு, நான்கைந்து சீரகம், துளி பெருங்காயம் சேர்த்து பொடியாக திரித்து வைத்துக் கொள்ளவும். தேவை படும்போது ஒரு ஸ்பூன் மாவெடுத்து அரை க்ளாஸ் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி கஞ்சி பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து உப்பு போட்டு கொடுக்கவும்.

ராகி கஞ்சி என்றால் இரவே ராகியை ஊறவைத்து மறு நாள் அதை அரைத்து ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும். வடிகட்டிய பாலை அப்படியே கஞ்சி போல் காய்ச்சி கொடுக்கவும். அதிகமாக வேண்டும் என்றால் ராகியை ஊறவைத்து முளை கட்டி அரைத்து அந்த பாலை காயவைக்கவும். சிறிது காய்ந்ததும் அது பொடியாகி விடும். அதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது அரிசி கஞ்சி போல் காய்ச்சி கொடுக்கவும். இதனுடன் நீங்கள் பால் சேர்த்து கூட காய்ச்சி கொடுக்கலாம்.

கொஞ்சம் நாள் போக போக நீங்கள் ராகி பால் எடுக்காமல் வேறு சில தானியங்கள் சேர்த்து மாவாக திரித்து கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.

பத்து மாதத்திலிருந்து நீங்கள் அரிசி பருப்பு சாதம் நன்றாக மசித்துக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கான கஞ்சி ரெசிபி அறுசுவையில் நிறைய இருக்கு. நம்ப ஜலீலா அல்லது செல்வி அவர்களின் குறிப்பில் ஏராளமாக இருக்கும். மேலும் தளிகா வனிதா குறிப்பிலும் கூட நிறைய இருக்கு. இன்னும் வேறு ஏதாவது சந்தேகம் என்றால் கேட்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மாலை,இரவில் கஞ்சி கொடுக்கலாமா?சளி பிடிக்குமா?அவனுக்கு சூப் கொடுக்கலாமா?எப்படி செய்ய வேண்டும்?மீண்டும் மீண்டும் பல கோடி நன்றிகள்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

குழைந்த சாதத்தில் அவித்த உருளைக்கிழங்கு, கிரட்டை பிசைந்து கொடுத்தால் நல்லது நல்ல வெயிட்டும் போடும்

-ரஸினா

நன்றி பா.....நான் அவனுக்கு கொடுத்து பாக்குறன் உங்கலுக்கு எத்தனை குழந்தைகள்?ஈத் முபாரக்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

mag

Ettu mathaa kulanthaikku sathana unavu sollunga friends pls help me .......

பால் வாடியில் தரும் சத்து மாவு 8 month babyku தரலாமா

இந்த த்ரெட் லேட்டஸ்ட் த்ரெட்டா இருக்கு. உங்களுக்கு முன்னாலயே ஒரு த்ரெட் தேடிக் கொடுத்ததாக நினைவு. அதுல விபரம் கிடைக்கலயா!!

இது தேடுறதுக்கு தமிழ் தட்டணும் என்கிஈற அவசியம் இல்லை. மன்றத்தில் க்ளிக் பண்ணி உள்ளே குழந்தைகள் பக்கத்தைக் க்ளிக் பண்ணி ஒவ்வொரு பக்கமா க்ளிக் பண்ணிட்டே போங்க. தலைப்புகளைப் பார்த்தால் உங்களுக்கு எது பொருத்தம் என்று தெரியும். 9ம் மாதம், 10ம் மாதம் எல்லாம் இருக்கு. இப்போ தேடிக் கொடுக்கிறேன். இனி அங்கங்கே பார்த்து சந்தேகம் இருந்தால் அங்கேயே கேளுங்கள்.

இப்போதைக்கு சில த்ரெட்ஸ் தேடிக் கொடுக்கிறேன்.
http://www.arusuvai.com/tamil/node/32733
http://www.arusuvai.com/tamil/node/14814
http://www.arusuvai.com/tamil/node/26736
http://www.arusuvai.com/tamil/node/17496
http://www.arusuvai.com/tamil/node/6950
http://www.arusuvai.com/tamil/node/7337
இன்னும் இருக்கு. தேடுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்