8 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

என் மகனுக்கு 7மாதம் முடிந்து 8வது மாதம் ஆரம்பித்து இருக்கிரது........அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?பருப்பு சாதம் முட்டை மஞ்சட் கரு குடுக்கிறேன் எதை கொடுத்தாலும் வாய்க்குல்லேயே வைத்து துப்பி விடுகிறான் என்ன செய்வது...???

மேலே அஸ்மாவுக்கு எடுத்துக் கொடுத்திருக்கும் இழைகள் உங்களுக்கும் பயன்படும். பாருங்க.

சத்து மாவு எல்லாம் ஓரளவு ஒரே பொருட்களைக் கொண்டுதான் செய்திருப்பார்கள். கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Thanku imma amma.

கடையில் ராகி மாவு வாஙகி அதை தண்ணிரல் கரைத்து தணணிரை மட்டும் வடிகட்டி அதை காய்ச்சி பாப்பாக்கு கொடுத்தேன்...அப்படி காயச்சினால் கட்டியாக வரவில்லை, தணணிராக தான் irunthathu, அது எப்படி வரும் என்று solungalen frnds. Pls,, And மாவை கரைத்து அப்படியே காய்ச்சி தந்தால் அது சத்தா... தண்ணிர் மடடு்ம் தந்நால் எத்தனை தடவை தரலாம்..அதாவது நாம் பாட்டில் பால் தரும் போாதெல்லாம் தரலாமா. எனக்கி சந்தேகம் தீர்க்க உதவி seungal 8 month baby)

8 month nu sollureing ragi konjsam kammiyave kodunga,ena baby vayirrukku set ahama poyida pothu thozi.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

non veg ஒரு வருடத்திற்கு பிறகுதான் கொடுக்க வேண்டும்

ruswana // non veg ஒரு வருடத்திற்கு பிறகுதான் கொடுக்க வேண்டும்//
இல்லை உங்கள் குழந்தையின் உடல் நிலை செமிபாட்டு நிலை என்பவற்றை அறிந்து கொண்டு திட உணவு ஆரம்பிக்கும்போதே மீன் கொடுக்க தொடங்கலாம். 8 மாதத்தில் இருந்து சிக்கன் ம் 10 மாசத்தில் இருந்து மட்டனும் மெதுவாக சேர்க்க தொடங்கலாம்.

குழந்தைக்கு மிகக்குறந்த அளவு உணவுதான் கொடுக்க முடியும் .ஆனா அந்த உணவில்தான் அவர்களின் சகல வளர்ச்சியும் செயல்பாடுகளும் தங்கி இருக்கும்.
அதனால் முடிந்த அளவு அவர்களுக்கு அவசியமான சத்துக்களை உள்ளடக்க வேண்டும்.
அதுக்காக திணிக்க கூடாது.மெது மெதுவாக அவர்கள் விரும்பும்படி செய்து கொடுக்க வேண்டும்.

விஜி ராகி கஞ்சி பற்றி எனக்கு தெரியாது .ஆனால் சத்துமா செய்யும்போது ராகி சேர்ப்பேன்.எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து சத்துமாவாக ஒரு நாளைக்கு 1தடவை மட்டும் கொடுத்தால் விரும்புவார்கள்.

நன்றி. surejini , சத்து மாவு kanji epd seyanum. Enidam pal vadi mavu ulathu,anal athu semikathu enru kooruvathu unmaya,,,

தாங்கள் சொல்வது சரிதான்,, மிகக்குறந்த அளவு உணவுதான் கொடுக்க முடியும் .ஆனா அந்த உணவில்தான் அவர்களின் சகல வளர்ச்சியும் செயல்பாடுகளும் தங்கி இருக்கும்.
அதனால் முடிந்த அளவு அவர்களுக்கு அவசியமான சத்துக்களை உள்ளடக்க வேண்டும். மிக சரிதான்.. அதான் என்ன என்று தெரியாமல் முளித்து கொண்டு iruken,,உதவுங்கள் தோழி

பால் வடி எனக்கு தெரியாது விஜி காரணம் நான் சிறீலங்கன்.
சத்து மாவு நிறைய மாதிரி செய்யலாம் .இப்பிடித்தான் செய்யணும் நு இல்ல.
நான் செய்யும் முறை

சவ்வரிசி.மூக்குகடலை,சோயா,அரிசி,உடைச்சகடலை,சோளம்,ராகி, கோதுமை,பயறு,வேர்க்கடலை ,பாதாம் எல்லாம் சம அளவு எடுத்து சம அளவு என்றால் அரிசி 100 கிராம் ஆ இருந்தால் எல்லாம் 100,100 கிராம் ஒரு கிலோவா இருந்தால் எல்லாம் ஒரு கிலோ.எல்லாத்தையும் ஒண்ணொண்ணா மிதமா வறுத்து அரைச்சு பெளடர் ஆக்கி போத்தல் ல போட்டு வச்சுட்டு .டெய்லி காலைல பால் சூடுபண்ணி எதாவது ஒரு பழம் அண்ட் இந்த மா 3கரண்டி மிக்ஸ் பண்ணி குடுப்பேன்.

இது அம்மா நமக்கு குடுத்து வளத்து அக்காக்கள் பிள்ளைகளுக்கு குடுத்து வளத்ததால என் பிள்ளைகளூக்கு ஒத்து வரும் என்ற தைரியத்தில 10 மாசத்தில இருந்தே எல்லா தானியங்களும் இப்பிடி செய்து குடுக்க தொடங்கீட்டன்.

ஆனா உங்களுக்கு சாப்பிடாமல் விட்டாலும் எங்கிற பயம் இருந்தால் அரிசி ,பாதாம்,சவ்வரிசி,பயறு,ராகி இப்பிடி சிலதை மட்டும் சேர்த்து மாவாக்கி குடுத்து பாருங்கோ.
பழக்கினா ரெம்ப நல்லது.

இங்க கடைல சீரியல் வாங்கி குடுக்கிறதா இருந்தாலும் நான் சொன்னதுகளைத்தான் அதிலும் சேத்து இருக்கினம்.

//பால் வடி எனக்கு தெரியாது விஜி காரணம் நான் சிறீலங்கன்.// :-) நான் நினைச்சதை சுரேஜினி எழுதி இருக்கவும் சிரிப்பு வந்துது. :-) தங்க்லிஷ்ல எழுதி இருக்கு. ஒருவேளை... பால் வா..டி - மில்க் போட் (தமிழ்நாடு மில்க் போட் - ஆவின் பால்!! அந்த ப்ரான்ட் சத்துமா!!) அப்பிடி என்னவும் சொல்லுப்படுதோ தெரியேல்ல.
~~~~
//குழந்தையின் உடல் நிலை செமிபாட்டு நிலை என்பவற்றை அறிந்து கொண்டு// ம்... இது சரிதான். என் மூத்தவர், ஏழாம் மாசம் யார் என்ன சாப்பிடுறதைக் கண்டாலும் பறிச்சு சாப்பிட்டுருவார். அவருக்கு உறைப்பும் ஒன்றும் செய்யேல்ல. பழஞ்சோறு ஊறுகாய் என்று எல்லாமே ட்ரை பண்ணீருவார். செமிபாட்டுப் பிரச்சினை இருக்கேல்ல. நாங்களாக சாப்பாடு அறிமுகம் செய்து விட்டது நாலாம் மாசம். பிறகு யார்ட வாய் அசைந்தாலும் வாயைத் திறந்துருவார். :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்