8 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

என் மகனுக்கு 7மாதம் முடிந்து 8வது மாதம் ஆரம்பித்து இருக்கிரது........அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?பருப்பு சாதம் முட்டை மஞ்சட் கரு குடுக்கிறேன் எதை கொடுத்தாலும் வாய்க்குல்லேயே வைத்து துப்பி விடுகிறான் என்ன செய்வது...???

பால்வாடி தமிழக மில்க் போர்ட் எல்லாம் இல்லை!! கிராமப்புறங்களில் இருக்கும் பாலர் பள்ளி. அரசாங்கம் நடத்தும் பள்ளி, கவர்மெண்ட் நர்சரி ஸ்கூல்!! அங்கே குட்டீஸ் காலை முதல் மதியம் வரை இருந்துட்டு வீட்டுக்கு கிளம்பிவரப்ப இந்த சத்துமாவு உருண்டை கொடுப்பாங்க. அதைத்தான் அவங்க கேட்டிருக்கணும் என நினைக்கிறேன்...அது சின்னக் குழந்தைகளுக்கு தரலாமான்னு தெரில, பெரியாட்கள் சாப்பிடலாம், நான் சாப்பிட்டிருக்கேன். :))))

//யார்ட வாய் அசைந்தாலும் வாயைத் திறந்துருவார். :-)// ஹாஹ்ஹா ஹிஹ்ஹி!!!

அன்புடன்,
மகி

ஹாய் பெரிய குழந்தை!! ;)) //பாலர் பள்ளி.// ஆஹா! நான் நினைச்சே பார்க்கல. சொன்னதுக்கு நன்றி மகி. ஆனாலும்... சரியாத்தான் படிச்சிருக்கேன். வடி இல்ல வாடிதான். ;) மீன்வாடி ஃபிஷ் மார்க்கட். அதனால பால்வாடி பால் விக்குற இடமாக்கும் என்று நினைச்சேன். ;))))

இலங்கைல ஒரு காலம் ஸ்கூல் பசங்களுக்கு திரிபோஷா என்று ஒன்று கொடுப்பாங்க, பாக்கட்ல. அது சத்துமாவுதான்.

//ஹாஹ்ஹா ஹிஹ்ஹி// ;)) ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்குப் போனோம். இது சின்னன் என்று எதுவும் சர்வ் பண்ணல அவங்க. சோகமா சுற்றிச் சுற்றிப் பார்த்தார். இவர் கைல எடுத்ததையும் சர்வ் பண்ணவங்க புடுங்கி வைச்சிட்டாங்க. இந்தாள் ஒரு சின்ன அக்கா கைல இருந்த கேக்கை தானாவே அவங்களுக்குத் தெரியாம சாப்பிட்டு முடிச்சுட்டார். அப்போதான் ஏழாம் மாசம் தொடங்கி இருந்துது. எல்லாரும் காமெடி சினிமா பாக்குற மாதிரி சிரிச்சுட்டே பார்த்தாங்க. :-)
அவரது இந்த சாப்பாட்டு ரசனைதான் இப்ப சமையல் ரசனையா மாறி இருக்கு போல. :-)

‍- இமா க்றிஸ்

இன்று காலை ராகி மாவை சலித்து கூல் காய்ச்சி பாப்ாக்கு கொடுத்தேன் அவள் சாப்பிடாள், but motion கருப்பு niramaga irunthathu,athil ethathu broblama,,,plz help

mana helth mix வறுத்த மாாவா? or வறுக்காத மாவா.. இது குழந்தைக்கு best thana,, yaravathu use panringala,,,ena thingslam serntjulathu,, plz உதவுங்கள்..my sistet cerlac kuda kuduka thevailai intha mathri kkoool kuduthl pothum enral, athan thangalidam kulapathai theerka kekiren

//கருப்பு niramaga// சாக்லேட் கொடுத்தாலும் இப்படி இருக்கும். இது சாதாரணம் தான். யோசிக்க வேணாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி பதிலுக்கு,,

ராகி உடம்பை ஒல்லியாக்கி விடுமா. daiatil irupavargal ithai kudithl oli agalam enru ethilo படித்த நியாபகம்

//ராகி உடம்பை ஒல்லியாக்கி விடுமா//
யாருக்கு கேட்கிறீர்கள் என்று புரியவில்லை?உங்களுக்கா குழந்தைக்கா?

குழந்தைக்காக இருந்தால்

ஒல்லியாக்காது. ஒரு உதாரணம் சொல்கிறேன் .என் தங்கை விபரமானவள்தான் ஆனால் ஒருனாள் மெசேஜ் ல் நன்கு தளிர் விட்ட ஒரு ஸ்வீட் பொட்டைட்டோ படத்தை அனுப்பினாள்.
இதை எதுக்கு குழந்தைக்கு செய்து குடுக்காமல் முளைக்க வச்சிருக்கிறாய்.நேரமில்லியோ? என்று கேட்டேன் .இல்லை ஸ்வீட் பொட்டைட்டொ மெலிய வைக்குமாம் நெட்ல இருக்கு டயட் பண்ற ஆக்கள் சாப்பிடுறதாம் அப்டி பதில் சொன்னாள்
எனக்கு செம கோவம் வந்துட்டு.இப்போ அதே பதிலை உங்களுக்கு தட்டுகிறேன்.
உடம்பு மெலிய வைக்க டயட் பண்ண நாம் எடுக்கும் உணவுகள் எங்களை எவ்வாறு தன் வேலையை செய்து நம்மை மெலிய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனில் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டும் ,அதிக கலோரிகளை தராமலும் நம்மை மெலிய வைக்கும் என்று எதிர்பார்க்குறோம்?

சரி நம் உடம்பில் ஏன் இந்த தேவை இல்லாதது எல்லாம் தங்குகிறது??????
காரணம் நம் உடல் அவயவங்கள் வளர்ச்சி அடைந்து முடிந்து விட்டது .பசிக்கும் ருசிக்கும் சக்திக்கும் தான் நமக்கு உணவு தேவை.

ஆனால் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் உணவு வளர்ச்சிக்கு உள் இழுக்கப்பட்டு விடும்.எலும்பு,பல் ,மூளை எல்லா வளர்ச்சியும் இந்த சத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் .இந்த நேரத்தில் முட்டை கொழுப்பு பீட்ரூட் சிவப்பு என்று சாட்டுக்கள் வைத்து கொடுக்காமல் விட்டால் குழந்தைக்கு தேவையான போஷாக்கு கிடைக்காது.
ஒரே சத்தை அதிகமாக கொடுப்பதும் ஆரோக்கியமில்லா உணவுகளை {கேக் பிஸ்கட்,சிப்ஸ்}அதிகம் கொடுப்பதும் தவிர்த்து குழந்தைகளுக்கு உணவில் கவனம் செலுத்தியே ஆக வேணும் என்பது என் கருத்து

நேற்றே உங்கள் கேள்வி கண்ணில் பட்டது. பதில் சொல்லாம விட்டதற்கு ஒரு காரணம் இருக்கு.

இப்ப என் சந்தேகத்தைக் கேட்கிறேன். உங்களால தமிழிலில் நன்றாகவே தட்ட முடிகிறது; ஆங்கிலத்திலும் தட்ட முடிகிறது. எதற்காக ஒரு சொல் தமிழ் ஒரு சொல் தமிங்கிலம் ஒன்று ஆங்கிலம் என்று கலந்து கட்டி அடிக்கிறீங்க? :-) இடைல சின்னச் சின்னதா ஷார்ட் ஹாண்ட், ஸ்பெலிங் மிஸ்டேக்... உங்களுக்கு உதவ விரும்புறவங்க, அவங்கதான் அட்ஜஸ்ட் பண்ணிப் படிக்கவேண்டி இருக்கு. கஷ்டமா இராதா!

ஒரு கேள்விக்குப் பதில் கொடுத்தால் சங்கிலித் தொடராக வரும் கேள்விகளைப் படித்துப் பதில் சொல்லாமல் விடுவது நன்றாக இராது. இது ஒரு ரெஸ்பான்சிபிலிடி மாதிரி ஆகிருது. இதுக்கு மேல உங்க கேள்விகளைப் படிக்க என்னால முடியாதுன்னு தோணிச்சு. அதனாலதான் பதில் சொல்லாம விட்டுட்டேன். நீங்க கேள்வியை என்னிடம் வைக்கல, தெரியும். இருந்தாலும் சொல்லத் தோணிச்சு. ஏதாவது 'ஒரு' விதமா தட்ட முடியாதா! ட்ரை பண்ணுறீங்களா?

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

பால்வாடி என்பது அரசால் நடத்தப்படும் பிறந்த‌ குழந்தைகள்
முதல் ஆறு வயது வரை உள்ள‌ குழந்தைகளுக்கான காப்பகம்.
வேலைக்குச் செல்லும் வசதி குறைந்த‌ குழந்தையைப் பார்த்துக்
கொள்ள‌ யாரும் இல்லாத‌ தாய்மார்களுக்கு உதவுதல், அதுமட்டுமல்லாமல் பிறந்த‌ குழந்தைகள் முதல் அனைத்துக் குழந்தைகளும் சத்துணவுக் குறைபாடுகளால் வரக் கூடிய‌ நோய்களால்
தாக்கப் படாமல் இருப்பதற்கும், நல்ல‌ ஆரோக்கியமான‌ எதிர்கால‌
சந்ததிகளை உருவாக்கவே, இப் பாலர் பள்ளி போன்ற‌ அமைப்பு.
இங்கு குழந்தைகளுக்கான உணவு, ஆரம்பக் கல்வி இவையும் தரப்படும்
இது உறைவிடப் பள்ளி அல்ல‌.
இங்கு தரப்படும் உணவு சத்தான தரமான‌ உணவுகளே. சத்துமாவுக்கான‌ பொருள்களைக் கட்டாயமாக‌ வறுத்தே அரைக்க‌ வேண்டும், ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தான் வறுக்கவேண்டும்.வறுபடும் நேரம் ஒவ்வொன்றுக்கும் வேறுபடும்.
பொருள்கள் பதமாக‌ வறுபடாமலும் கஞ்சியைச் சரியாகக் காய்ச்சாமலும் குழந்தைக்குக் கொடுத்தால் (யார் குடித்தாலும்)
வயிறு கெட்டுப் போவதோடு பேதி ஆகவும் வாய்ப்பு உண்டு.
பொருள்களைத் தனித்தனியாக‌ வாங்கியும் அரைக்கலாம்,
பாக்கெட்டின் மேல் வறுத்ததா/வறுக்காததா என்று உள்ள‌ குறிப்பைப்
பார்த்து வாங்கி அதன்படி செய்யவும். அங்கு தரும் உணவினை
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தைரியமாக உண்ணலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்