8 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

என் மகனுக்கு 7மாதம் முடிந்து 8வது மாதம் ஆரம்பித்து இருக்கிரது........அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?பருப்பு சாதம் முட்டை மஞ்சட் கரு குடுக்கிறேன் எதை கொடுத்தாலும் வாய்க்குல்லேயே வைத்து துப்பி விடுகிறான் என்ன செய்வது...???

மன்னிக்கனுமா, நா இப்பதான் தமிழ் டைப் எழுத முயற்ச்சி செய்ரேன். அதான் இப்படி. பாப்பா போன் எடுக்க விடமாட்றா. அதான் அவசரமாக வந்தட்டு ஓடுறேன். 8 தான் பிறந்திருக்கு. இப்பவே சேச்ட ஆரம்பம்

செர்லாக் பாலயோ வெண்ணிரிலோ கலந்தாலுமே க ட்டட கட்டியா வருது plz help,,, குழந்தைக்கு செரிமானம் ஆவதை எப்படி தெரியலாம்

பூங்கோதை உங்களுக்காகத் தான் மெனக்கெட்டு அந்த போஸ்ட் தட்டி இருக்காங்க. நீங்க படிச்ச மாதிரி தெரியல. கீழ்ப் பாதியையாவது படிச்சுப் பாருங்க.

//பாலயோ வெண்ணிரிலோ கலந்தாலுமே க ட்டட கட்டியா வருது// எப்படிக் கலக்குறீங்க. முதலில் திரவத்தைக் கொஞ்..சமாக விட்டு பசை போல் கலக்க வேண்டும். கட்டிகள் வந்தால் கரண்டி அடிப்பக்கத்தால் உடைந்துவிட்டுக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு மீதி திரவத்தை விட்டுக் கலக்குங்க.

//குழந்தைக்கு செரிமானம் ஆவதை எப்படி தெரியலாம்// குழந்தை நார்மலா இருந்தா செரிமானம் ஆச்சு.

செரிலாக் உள்ளே போனதும் சின்னச் சின்னக் கட்டிகள் இருந்தாலும் கரைந்துவிடும். இதனால் செரிமானப் பிரச்சினை வரச் சான்ஸ் இல்லை.

‍- இமா க்றிஸ்

குழந்தைக்கு 8மாதம் 2 நாளாக ஒழுங்கா சாப்பிட்டா. நேத்திலிருந்து வாயில் வைத்துக் கொண்டே அவ பாட்டுக்கு இருக்கா. ஏன் அப்படி பன்றா.. mg சத்து மாவு குடுதேன்.. அது பிடிக்கலயோன்னு 2 மனி நேரம் கழித்து ராகி கூலும் கொடுத்து பார்த்தேன்.அதயும் வாயில் வைத்துக்கிச்டே இருக்கா.. மறுடுயும் 2 நேரம் கழித்து ஆப்பிள் குடுத்தேன், அதுவும் வாவாயில் வைத்துக் கொண்டே திறந்த வாயை முடாம அப்டுயே இருக்கா இது எதனால். இது விளையாட்டா அல்லது சாபாடு பிடிக்காமலா.. அல்லது லிருப்பம் இல்லாமலா சொல்லுஙகல் plz,,என் அக்காட்ட கேட்டு பார்த்தேன் அவள் விளையாட்டா இருக்காதே என்று என்னை திட்டுறா..

யாராவது உதவுங்கள் plz

பதில்தாருங்கள்

மூன்று நாட்களாச்சு. இன்னும் அப்பிடியேதான் பண்ணுறாங்களா? பால் குடிக்கிறது, டாய்லட் போறது, தூக்கம் எல்லாம் சரியா இருந்தா யோசிக்கத் தேவையிராது. சாப்பாட்டை மாற்றிக் கொடுத்துப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

ராகி பிடித்தமாக சாப்பிட்டா.ஆனால் இப்போ அதையும் வேண்டாஙகறா. மன்னா கெலத் மிக்ஸ கூல் காச்சு கொடுத்தேன்.. சிறிது 4 ஸ்பூன் சாப்பிட்டா. அவ்வளவுதான்.. குழந்தைக்குசாதரனமாக எத்தனை ஸ்பூன் உணவு போதுமானது.ஆனா நமக்கு மனசு கேட்கமாட்டக்கு... ஒரு நாளைக்கு ஒரு உணவு சாப்பிட்டா கூட போதும் னு தோனுது.

//4 ஸ்பூன்// ஆரம்பத்துக்கு அது தாராளம். அவங்க வேணாம்னா கொடுக்கிறதை நிறுத்துங்க. இல்லாட்டா அடுத்த வேளை கொடுக்கும் போது சாப்பிட ஆரம்பிக்கவே அடம் பிடிப்பாங்க.
//ஒரு நாளைக்கு ஒரு உணவு சாப்பிட்டா கூட போதும்// இப்பதானே ஆரம்பிச்சிருக்கீங்க. இது போதும். மெதுவா கூட்டிக் கொடுங்க.

//குழந்தைக்குசாதரனமாக எத்தனை ஸ்பூன் உணவு போதுமானது.// இது குழந்தையைப் பொறுத்தது. ஆனா கட்டாயப் படுத்தினா எதுவும் இறங்காது.

‍- இமா க்றிஸ்

நன்றி

மேலும் சில பதிவுகள்