8 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

என் மகனுக்கு 7மாதம் முடிந்து 8வது மாதம் ஆரம்பித்து இருக்கிரது........அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?பருப்பு சாதம் முட்டை மஞ்சட் கரு குடுக்கிறேன் எதை கொடுத்தாலும் வாய்க்குல்லேயே வைத்து துப்பி விடுகிறான் என்ன செய்வது...???

செர்லாக் கில் எந்த விதமான சத்து உள்ளது.அது கண்டிப்பாக தரவேணடுமா..அதில் உள்ள சத்துக்கள். அவசியமானவைதானா... நான் குழந்தைக்கு காலையில் எழுந்தும் சத்து மாவு கூல் பின் 11 மணிக்கு ராகி கூல்பின் 1 மணிக்கு சாதம் any vegitable பின்னர் 4 மணிக்கு pritania பிஸ்கட் இரவு இட்லி 7 ணிக்கு தருகிறேன்...செர்லாக் எப்போ தரலாம்... மற்றும் என் மகளுக்கு இட்லி பிடிக்கவில்லை ... இட்லி உ ளுந்தமாவு என்பதால் மிகவும் அவசியம் என்கின்றனர் ..நான் என்ன செய்வது உதவி plz....செர்லாகும் அவலுக்கு பிடிக்கவில்லை என்பது போல் தெரிகிறது...

//செர்லாக் கில் எந்த விதமான சத்து உள்ளது.// செரிலாக் என்பது ஒரு ப்ராண்ட் பெயர் மட்டும்தான். அந்த ப்ராண்ட்டில் வித்தியாசம் வித்தியாசமாக குழந்தை உணவுகள் கிடைக்கிறது. வித்தியாசமான சுவைகளில் இருக்கிறது. குழந்தையின் வயசுக்கு ஏற்றபடியும் இருக்கும்.

நீங்க வாங்கி இருக்கும் டப்பாவில் அதில் அடங்கி இருக்கும் சத்துக்கள் பற்றிய விபரம் கட்டாயம் போட்டிருப்பாங்க.
~~~~
//அது கண்டிப்பாக தரவேணடுமா.// இல்லை, கண்டிப்பாக தர வேண்டும் என்பது இல்லை.
இப்படியான ரெடிமேட் உணவுகள் பயணங்களின் போது சுலபம்; வேலைக்குச் செல்லும் தாய்மாருக்கு வசதி. குழந்தை உண்ணும் மீதி உணவுகளில் பலவிதமான சத்துக்களையும் சேர்த்துக் கொடுக்க உங்களால் முடிந்தால் இப்படியான உணவுகளைத் தர வேண்டியது இல்லை. முடியாத பட்சத்தில்... இந்த மாதிரியான ரெடிமேட் ஆகாரங்கள் குழந்தைக்குக் கிடைக்காத போஷாக்கை இட்டு நிரப்பும்.
~~~~
//அதில் உள்ள சத்துக்கள். அவசியமானவைதானா.// சத்துக்களில் அவசியமில்லாத சத்துக்கள் என்று எதுவும் இல்லை. தேவைப்படும் அளவுகள் மட்டும் மனித எடை, வயது, பால், செய்யும் வேலைகள் இப்படிச் சில விடயங்களைப் பொறுத்து வேறுபடும். அவசியமில்லாதவற்றைக் குழந்தை உணவுகளில் சேர்த்திருக்க மாட்டார்கள். அதுவும் நெஸ்லே போன்ற ஒரு பிரபலமான கம்பெனி அது போல செய்யாது. வியாபாரமே என்றாலும் சில கட்டுப்பாடுகள் அவர்களுக்கு இருக்கிறது.

நீங்கள் கேட்பது... ரெடிமேட் ஆகாரங்களைக் கொடுக்கத்தான் வேண்டுமா? என்னும் கேள்வியையானால், அதற்கான பதில் முதலாவது பந்தியில் இருக்கிறது. மீதி உணவுகள் மூலம் உங்களால் குழந்தைக்குத் தேவையான எல்லாப் போஷாக்குகளையும் கொடுக்க முடிந்தால் ரெடிமேட் குழந்தையுணவு தேவையில்லை.

குழந்தை உணவுகள் வாங்கும் முன் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களைப் படித்துப் பார்க்க வேண்டும். எத்தனை மாதக் குழந்தைக்குப் பொருத்தம், ஒரு வேளைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும், அதன் மூலம் என்ன சத்துக்கள் குழந்தைக்குக் கிடைக்கும் என்பதைச் சொல்லியிருப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

//இட்லி உளுந்தமாவு என்பதால் மிகவும் அவசியம் என்கின்றனர்// உளுந்து - அரிசி, கோதுமை போல காபோவைதரேற்று (மாப்பொருள்) செறிந்த ஒரு தானியம் அல்ல; அவரை இனத் தாவரங்களைப் போல புரதச்சத்து நிறைந்தது. பயறு, கடலை, நிலக்கடலை, பருப்பு போன்றவை புரதச் சத்து நிறைந்தவை.

இட்லியாகத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் - உளுந்துக்குப் பதில் பயறு, சோயா கலந்தும் இட்லி செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

இந்த இழைக்கு வாங்க. இன்னும் சிலது இருக்கின்றன. மேலே சர்ச் பாக்ஸ் இருக்கிறது. முக்கியமான சொற்களைப் போட்டுத் தேடினால் இழைகள் கண்ணில் படும். தேடிப் படியுங்கள். டயப்பர் ராஷ் பற்றி தனி இழைகள் இருக்கின்றன.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்