சத்து ரொட்டி

தேதி: August 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு-ஒரு கப்
சத்துமாவு-அரைகப்
ஓட்ஸ்- 100 கிராம்
வெங்காயம்- கால் கப்
கொத்தமல்லி -கால்கப்
கேரட் துருவல்-கால் கப்
முட்டைகோஸ் துருவல்- கால் கப்
பச்சை மிளகாய்- 3 (பொடியாய் நறுக்கியது)
இஞ்சி-சிறுதுண்டு (துருவியது)
உப்பு
சோடா உப்பு
நெய்-2 ஸ்பூன்


 

ஓட்ஸை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்

மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி கலந்து வைக்கவும்

தேவைக்கு சுடு தண்ணீர் சேர்த்து பினைந்துக்கொள்ளவும்.

1 மணிநேரம் ஊறிய பின் சப்பாத்திகளாக கவனமாக திரட்டவும்

பின் தோசைகல்லில் எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும்.


பாலக் கீரையை பொடியாய் நறுக்கியோ அல்லது அரைத்தோ சேர்க்கலாம். குருமாவுடன் பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்