
தேதி: June 21, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வடநாட்டிலோ, வெளிநாட்டிலோ வெகுநாட்கள் இருந்துவிட்டு வீடு திரும்புகின்றவர்கள் மறக்காமல் கேட்பது இந்த புளிக்குழம்பினைத்தான். அதிகம் பழக்கம் இல்லாத புதுவகை உணவுகளைச் சாப்பிடும் போது நாவின் சுவை மொட்டுக்கள் சற்று மரத்துப் போய்விடுகின்றன. இதனைத்தான் நாக்கு செத்துப் போயிற்று என்கின்றோம். செத்துப் போன நாக்கிற்கு உயிரூட்டும் தன்மை இந்த புளிக்குழம்பிற்கு நிறைய உண்டு.
அறுசுவை தளத்தில் வாசகர்கள் அதிகம் தேடும் குறிப்புகளில் இந்த புளிக்குழம்பும் ஒன்று. செய்வது எளிமையானதுதான். வெறும் குறிப்பை மட்டும் படித்து செய்யும்போது நிறைய சந்தேகங்கள் வரும். உதாரணமாக, புளியைக் கரைத்து எடுத்துக்கொள்ளவும் என்று இருக்கும். எவ்வளவு புளியை எவ்வளவு தண்ணீரில் கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல் சரியாக இருக்காது. புதிதாய் சமைப்பவர்கள் தண்ணீர் அளவு தெரியாமல் அதிகமாகவோ குறைவாகவோ கரைத்து விடுவார்கள். குழம்பின் ருசிக்கு புளி கரைக்கும் அளவு மிக முக்கியம். இதில் மாற்றங்கள் இருந்தால் ருசியிலும் மாற்றம் இருக்கும்.
வெண்டைக்காய் - 4
முருங்கைக்காய் - 1
தக்காளி - 2
தேங்காய் - அரை மூடி (சிறியது)
புளி - எலுமிச்சை அளவு
வடகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10
பெரிய வெங்காயம் - 2 (நடுத்தர அளவில்)
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித்தூள் - அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கல் உப்பு - அரை மேசைக்கரண்டி









மிகவும் சுவையாக புளிக்குழம்பு செய்யக்கூடிய இல்லத்தரசி திருமதி. காயத்ரி அவர்களின் தயாரிப்பை இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம். பொருட்களின் அளவுகளும் துல்லியமாக அளந்து கொடுக்கப்பட்டுள்ளன. செய்து பார்த்து தங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
Comments
நன்றி
எனக்கு மிகவும் பிடித்தமான புளிக்குழம்பு குறிப்பினை கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஆனால் வடகம் என்பது புதிதாக உள்ளது? வடகம் என்பது வறுத்து, உணவிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் வற்றல் தானே?
வடகம்
வெயிலில் காய வைத்து, நீர் சத்தினை வற்றிப் போக வைத்து எடுக்கும் பொருட்கள் அனைத்தையுமே வற்றல் என்றுதான் சொல்லுவார்கள். அந்த வகையில் வடகம் என்பதும் காயவைத்து எடுப்பதே. இதில் பலவகை உள்ளது. கூழ் வடகம் என்பது காயவைத்து எடுத்து, எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவது. இந்த வடகம் குழம்பு போன்றவற்றில் சுவைக்காக சேர்க்கப்படுவது. வடாம், வடவம், கருவடாம் இப்படி பல பெயர் இதற்கு உண்டு.
கருவடாம் செய்முறையை மேலே சேர்த்துள்ளேன்.
வடகத்தை
வடகத்தை வெயிலில் தான் காய வைக்க வேண்டுமா? வீட்டிற்குள்ளேயே காய வைக்கலாமா?
Kattyam, vadama veyilil kaya
Kattyam, vadama veyilil kaya vayunga. Sun light acts better on the bio-chemical reaction. Every thing follwed by elders has an reason.
nathan_thilse@yahoo.com
nathan_thilse@yahoo.com
ada.. ada.. Thanga valayal than kudukanum
Ada.. Ada.. Ennala ennaiya namba mudiyala.
I made it... Superb... Kulambu..after 2 months.
Thanks a lot...
Unga kaikku, thanga valayal thaan podanum/.
nathan_thilse@yahoo.com
nathan_thilse@yahoo.com
i have a doubt in pulli kulambu
u mentioned half coconut cup to grind a paste,half means in one full coconut,half or in one cup of coconut half,could u please respond to this immediately,i need to try this pulli kulambu today
பாதி தேங்காய்
ஒரு தேங்காயின் பாதி தான் இங்கே அரை மூடி என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது சிறிய தேங்காய். தேங்காயின் அளவு சற்று கூட குறைய இருக்கலாம். பிரச்சனை இல்லை. புளிப்பு சுவை நன்கு தெரிய வேண்டுமென்றால் தேங்காயின் அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம்.
சின்ன
சின்ன வெங்காயம் உபயொகிபதைவிட பெரிய வெங்காயம் உபயொகிகலாம