உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

மசாலா பிரட் பீசா

 


தேவையானப் பொருட்கள்

  • ப்ரட் ஸ்லைஸ் - பத்து
  • குடைமிளகய் - இரண்டு
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • தக்காளி சாஸ் - பத்து டீ ஸ்பூன்
  • துருவிய சீஸ் - பத்து டேபிள் ஸ்பூன்
  • நெய் - ஐந்து டீ ஸ்பூன்
  • உப்பு - ஒரு டீ ஸ்பூன்
  • மல்லி இலை - முன்று டீ ஸ்பூன்
  • எண்ணை - ஒரு டீ ஸ்பூன்
  • வறுத்துப் பொடிக்க:
  • ஓமம் - கால் டீ ஸ்பூன்
  • சீரகம் - அரை டீ ஸ்பூன்
  • சோம்பு - அரை டீ ஸ்பூன்

செய்முறை

  • முதலில் எண்ணை விடாமல் ஓமம், சோம்பு & சீரகத்தை வாசனை வர வறுத்துப் பொடிக்கவும்.
  • குடை மிளகாய் விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
  • வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பொடித்த தூளைப் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி குடைமிளகாய் சேர்க்கவும்.
  • இரண்டும் பச்சை வாசனை போக வதங்கியதும் உப்பு, தக்காளித் துண்டங்களை சேர்த்து ஒரு நிமிடம் வெதுப்பி இறக்கவும்.
  • இந்தக் கலவையை பத்து பாகங்களாக பிரிக்கவும்.
  • பிரட் துண்டங்களைப் ஒரு தட்டில் வைத்து வதக்கிய கலவையை ஒவ்வொரு துண்டிலும் பரவலாக பரப்பவும்.
  • அதன் மேல் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸும், ஒரு டீ ஸ்பூன் சீஸ் துருவலும் பரப்பவும்.
  • இப்படியே எல்லா துண்டங்களையும் தயார் செய்யவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
  • சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு டீ ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு ப்ரட் துண்டங்களை அடுக்கவும்.
  • இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும்.
  • இப்போது ப்ரட் துண்டின் அடிப்பாகம் சிவந்தும், மேலே உள்ள சீஸ் உருகியும் இருக்க வேண்டும்.
  • இப்படியே எல்லாத் துண்டங்களையும் வறுத்து எடுக்கவும்.
  • ஒவ்வொரு துண்டையும் இறக்கிய உடனேயே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

வழங்கியவர்

திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

ஐந்து நபர்களுக்கு ஐந்து நிமிடங்கள் பதினைந்து நிமிடங்கள்
  random food image


comments