www.arusuvai.com
மசாலா பிரட் பீசா
தேவையானப் பொருட்கள்
- ப்ரட் ஸ்லைஸ் - பத்து
- குடைமிளகய் - இரண்டு
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - ஒன்று
- தக்காளி சாஸ் - பத்து டீ ஸ்பூன்
- துருவிய சீஸ் - பத்து டேபிள் ஸ்பூன்
- நெய் - ஐந்து டீ ஸ்பூன்
- உப்பு - ஒரு டீ ஸ்பூன்
- மல்லி இலை - முன்று டீ ஸ்பூன்
- எண்ணை - ஒரு டீ ஸ்பூன்
- வறுத்துப் பொடிக்க:
- ஓமம் - கால் டீ ஸ்பூன்
- சீரகம் - அரை டீ ஸ்பூன்
- சோம்பு - அரை டீ ஸ்பூன்
செய்முறை
- முதலில் எண்ணை விடாமல் ஓமம், சோம்பு & சீரகத்தை வாசனை வர வறுத்துப் பொடிக்கவும்.
- குடை மிளகாய் விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
- வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பொடித்த தூளைப் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி குடைமிளகாய் சேர்க்கவும்.
- இரண்டும் பச்சை வாசனை போக வதங்கியதும் உப்பு, தக்காளித் துண்டங்களை சேர்த்து ஒரு நிமிடம் வெதுப்பி இறக்கவும்.
- இந்தக் கலவையை பத்து பாகங்களாக பிரிக்கவும்.
- பிரட் துண்டங்களைப் ஒரு தட்டில் வைத்து வதக்கிய கலவையை ஒவ்வொரு துண்டிலும் பரவலாக பரப்பவும்.
- அதன் மேல் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸும், ஒரு டீ ஸ்பூன் சீஸ் துருவலும் பரப்பவும்.
- இப்படியே எல்லா துண்டங்களையும் தயார் செய்யவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
- சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு டீ ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு ப்ரட் துண்டங்களை அடுக்கவும்.
- இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும்.
- இப்போது ப்ரட் துண்டின் அடிப்பாகம் சிவந்தும், மேலே உள்ள சீஸ் உருகியும் இருக்க வேண்டும்.
- இப்படியே எல்லாத் துண்டங்களையும் வறுத்து எடுக்கவும்.
- ஒவ்வொரு துண்டையும் இறக்கிய உடனேயே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
ஐந்து நபர்களுக்கு |
ஐந்து நிமிடங்கள் |
பதினைந்து நிமிடங்கள் |