ஸ்பாஞ்ச் கேக்

தேதி: June 21, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - கால் கிலோ
சீனி - கால் கிலோ
வெண்ணெய் - கால் கிலோ
முட்டை - 5
நெய் - ஒரு ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 15
கிஸ்மிஸ் - 20
வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை


 

முட்டையில் உப்பு போட்டு, முட்டை கலக்கும் கரண்டியால் நுரை பொங்க கலக்க வேண்டும்.
சீனியை பொடி செய்து அத்துடன் வெண்ணெய் சேர்த்து, அதே கரண்டி கொண்டு, க்ரீம் பதத்தில் கலக்கவேண்டும்.
மைதாவையும் பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொண்டு, கலக்கிய முட்டை, வெண்ணெய் சீனி கலவை அனைத்தையும் மைதாவுடன் நன்றாக கலக்கி, கிஸ்மிஸ், பாதி முந்திரிப்பருப்பு, எசன்ஸ் போட்டு கலந்துக் கொள்ளவேண்டும்.
இந்த கலவையை 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பிறகு கேக் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, பேப்பரில் நெய் தடவி இதை ஊற்றி எலக்ட்ரிக் ஓவனில் மீடியம் டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்து, பிறகு மீதி உள்ள முந்திரிப்பருப்புகளை மேலே அலங்காரமாக போட்டு, மீண்டும் ஓவனில் 15 நிமிடங்கள் வைக்கவேண்டும்.
பிறகு ஒரு சுத்தமான குச்சியினால் கேக் நடுவில் குத்திப் பார்த்து, கேக் வெந்து விட்டதை உறுதிசெய்த பிறகு, வெளியே எடுத்து ஆறவிட்டு, பிறகு கட்டங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்