ஈஸி ப்ரெட் சாண்விச்

தேதி: August 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

ப்ரெட்(பிரவுன் அல்லது ஒயிட்) - 6 துண்டுகள்
காரட் - ஒன்று
பீன்ஸ் - நான்கு
காப்ஸிகம் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
மொஸருல்லா சீஸ் - சிறிதளவு
மேகி டேஸ்ட் மேக்கர் - அரை பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

காரட்டை துருவிக்கொள்ளவும். பீன்ஸ், காப்ஸிகம் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயத்தை முதலில் வதக்கி விட்டு மற்ற காய்களையும் சேர்த்து வதக்கவும்.காய்கள் பாதி வெந்ததும் டேஸ்ட் மேக்கர் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறிவிட்டு கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கி வைக்கவும்.
ப்ரெட் துண்டுகளை தோசை தவாவில் வைத்து சூடாக்கவும்.
இரண்டு ப்ரெட் துண்டுகளின் மீது காய்கறி கலவையை வைத்து அதன் மீது சீஸ் சிறிதளவு தூவி அடுத்த இரண்டு ப்ரெட் துண்டுகளை மேலே வைத்து தோசை கரண்டியால் அழுத்தவும்.
ப்ரெட் துண்டுகளை இருப்புறமும் லேசாக சிவக்கவிட்டு எடுத்து பரிமாறவும்.
ஈஸி ப்ரெட் சாண்விச் ரெடி.

சீஸ் மற்றும் டேஸ்ட் மேக்கர் விருப்பப்படாதவர்கள் அதை தவிர்க்கவும். டேஸ்ட் மேக்கர்க்கு பதிலாக கால் தேக்கரண்டி மிளகாய்த்தூள், கால் தேக்கரண்டி சீரகத்தூள் உபயோகிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு ரொம்ப ஈஸியா இருக்கு. வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

சுவையான சுலபமான சாண்ட்விச். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very easy,i will try.

பொன்னி... சூப்பர்... ஈஸியா இருக்கு செய்முறை... வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

நல்ல குறிப்புகள்.. குழந்தைகளுக்கு ஏற்றது.வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஈசியான எளிமையான குரிப்பு... குழந்தைகலுக்கு ஏற்றது...... சூப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
அன்புடன்
லதா.....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

சூப்பர் ஈஸியா செய்யலாம் கண்டிப்பா செஞ்சுபாக்குறேன் வாழ்த்துகள்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அன்பு பொன்னி,

காய்கறிகள், சீஸ் எல்லாம் சேர்த்து, சத்தான குறிப்பாக தந்திருக்கீங்க. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி
ponni

நாகா ராம்:
நன்றிப்பா, ரொம்ப ஈஸி செய்துபாருங்கள்

வனி
ஆமா வனி ரொம்ப சுலபம். குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும்.

Giriamu:
நன்றிபா, டிரை பண்ணி பாருங்க

வித்யா:
வாழ்த்துக்களுக்கு நன்றி வித்யா. செய்து பாருங்க.

ரம்யா:
நன்றி ரம்யா.

லதா:
நன்றி லதா, செய்யறது ரொம்ப ஈஸி, குழந்தைகளுக்கும் பிடிக்கும் செய்துபாருங்க

ரேணுகா:
செய்துபாத்துட்டு கண்டிப்பா எப்படி இருந்த்துன்னு செல்லனும் ஒகே…

சீத்தம்மா:
உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்களுக்கு நன்றிமா.

பொன்னி

பொன்னி,

சத்தான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா

பொன்னி