மீன்புளிக்கறி

தேதி: August 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

நெய்மீன் துண்டு........4

புளி........சிறு எலுமிச்சை அளவு

சின்னவெங்காயம்........10

தக்காளி........1சிறியது

பூண்டு........3&4பல்

உப்பு........தேவைக்கு

மிளகாய்த்தூள்.......11/2 டீஸ்பூன்

மல்லி இலை.....சிறிது
தாளிக்க

எண்ணெய்........1குழிக்கரண்டி

கடுகு.......1டீஸ்பூன்

வெந்தயம்.......1/4டீஸ்பூன்

சின்னவெங்காயம்.......சிறிது நறுக்கியது

கறிவேப்பிலை.......சிறிது

பச்சைமிளகாய்........1


 

மீனை சுத்தப்படுத்திவைக்கவும் வெங்காயம் தக்காளி,பூண்டு மிக்ஸியில் முக்கா அரைப்பாக அரைக்கவும்

புளியை கரைத்து உப்புபோட்டு வைக்கவும்

அடுப்பில் கடாயைவைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளைப்போட்டு தாளித்து மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

வதக்கியதில் கரைத்த புளியை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும்

பின் மீனைச்சேர்த்து ஒருகொதி வரவும் சிம்மில் 2நிமிடம் வைத்து இறக்கவும்

மல்லி இலைதூவி பரிமாறவும்


புளியை ரொம்ப தண்ணீயாக கரைக்காமல் திட்டமாக கரைக்கனும் அப்போதான் குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்