பீஸ் புலாவ்

தேதி: August 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

காய்ந்த பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பாசுமதி அரிசி - 2 டம்ளர்
நெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி தழை - சிறிது
அரைக்க:
புதினா - பாதி கட்டு
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - சிறுத் துண்டு
தாளிக்க:
வெங்காயம் - ஒன்று
தக்காளி. - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறுத் துண்டு
முந்திரி, திராட்சை - தேவைக்கு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

பட்டாணியை இரவே ஊற வைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். புதினாவை சுத்தப்படுத்தி கழுவி வைக்கவும். இஞ்சி, பூண்டு தோல் எடுத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி ஊற வைத்த பட்டாணியும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியதில் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி 3 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரிசி, உப்பு போட்டு தண்ணீர் வற்றி வரும் பொழுது, சிம்மில் வைத்து மல்லி தழை நெய் சேர்த்து மூடியை போட்டு மூடவும். பின்னர் வெய்ட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.
ஆவி போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடி வரை கிளறி விட்டு பின் பரிமாறவும். சுவையான பீஸ் புலாவ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அருமையா செய்து காட்டியிருக்கீங்க பாத்திமாம்மா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சூப்பரா இருக்கு..நாணும் பையனுக்கு ஸ்கூலுக்கு வெரைட்டி ரைஸ் என்னன்னு இருக்கு பார்ப்போம்னு வந்தேன்,நல்ல ஹெல்தியான டிஷ்ஷா இருக்கு,திங்கட்கிழமைக்கு இப்பவே ஒரு ஐடியா கிடைச்சிடுச்சு,நன்றி.

இதுவும் கடந்துப் போகும்.

Romba azhaga senju kamichirukinga easya irukudhu romba nantri

Idhuvum kadanthu pohum....

பாத்திமா மேடம் ரொம்ப அழக சமைச்சு காமிச்சிருக்கிங்க நன்றி..

Idhuvum kadanthu pohum....

அன்பு ஃபாத்திமா,

நல்ல குறிப்பு. அருமையாக செய்து காண்பித்திருக்கிறீர்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

பாதிம்மா பீஸ் புலாவ் சூப்பரா இருக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நல்ல குறிப்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாத்திமா உங்க குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு இதுக்கு முன்னாடி ஒரு சிக்கன் குறிப்பு உங்க இது எடுத்து செய்தேன் நல்லா இருந்தது

பாத்திமா அம்மா,

மணமணக்கும் புலாவ்

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அருமையான குறிப்பு. விளக்கங்களும் அருமை. ஒரு சின்ன சந்தேகம், தாளிக்க என்று குறிப்பிட்டுள்ள வெங்காயம் தக்காளி இல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ள வெங்காயம் தக்காளியும் சேர்த்து தாளிக்கணுமா? பார்க்கவே பச்சை பசேலென்று சாப்பிட அழைக்கிறது. ப்ரெசென்ட் பண்ணியிருக்கும் விதம் அழகு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சூப்பரான பார்ட்டிக்கு ஏத்த டிஷ்.. நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பாத்திமா பீஸ் புலாவ் ரொம்ப அருமை போங்க:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வலைக்கும் சலாம்........
மிக்க நன்றிடா

மிக்க நன்றி

மிக்க நன்றி

சீதா மிக்க நன்றி

குமாரி மிக்க நன்றி

மிக்க நன்றி

மெர்ஜானா ரொம்ப நன்றி

கவி வாழ்த்துக்கு நன்றி

///தாளிக்க என்று குறிப்பிட்டுள்ள வெங்காயம் தக்காளி இல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ள வெங்காயம் தக்காளியும் சேர்த்து தாளிக்கணுமா?

பட்டை கிராம்பு முந்திரி போட்டு பின் வெங்காயம் தக்காளி சேர்க்கனும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் (ரம்ஜான் பிசி பேத்திவேற இருக்கா அதான் லேட்)
வருகைக்கு நன்றி

ரம்யா மிக்க நன்றி

ஸ்வர்ணா ரொம்ப நன்றி

அம்மா, இன்னைக்கு மதியம் உங்க பீஸ் புலாவ் செஞ்சேன், ரொம்ப அருமையா இருந்தது.... சுவையும் சூப்பர்மா!! என் குழந்தையும் விரும்பி சாப்பிட்டா... பார்ட்டி சமயங்களில் செய்வதற்கும் நல்ல ஒரு டிஷ்....

-ஜெயந்தி