எக்&வெஜிடபிள் ரைஸ்

தேதி: August 26, 2011

பரிமாறும் அளவு: 8 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

சீரகசம்பா - 1 கிலோ
நெய்-150 கிராம்
முட்டை-4
விருப்பமான காய்கறிகள்- ஒவ்வொன்றும் கால் கப்
உப்பு-தேவைக்கு
கிராம்பு,பட்டை,ஏலக்காய்,பிரிஞ்சி
இஞ்சி பூண்டு விழுது-8 ஸ்பூன்
முந்திரி-15
வெங்காயம்-3
பச்சை மிளகாய்-6
கறிவேப்பிலை- ஒரு கொத்து


 

அரிசியை கலைந்து அரைமணி நேரம் ஊற விடவும்.

வாணலியில் நெய் சிறிது நெய்விட்டு காய்கறிகளை உப்பு சேர்த்து அரை பதமாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

பின் முட்டையை பொடிமாஸ் போல் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்

பெரிய பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி,வாசனை பொருட்கள்,வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் பின்னர் இஞ்சி பூண்டு விழுது,உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்

அரிசியை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். பின் தேவைக்கு நீர் சேர்த்து கொதிக விடவும்.

முக்கால் வாசி நீர் வற்றும் சமயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக காய்கறிகள் மற்றும் முட்டையை சேர்த்து ஒரு முறை கிளறி பின் 10 நிமிடங்கள் தம்மில் போடவும்

பின் எடுத்து பரிமாறவும்.


காய்கறிகளில் உப்பு சேர்ப்பதால் அரிசியில் கவனமாக சேர்த்துக்கொள்ளவும்
1 கிலோ அரிசியில் 4 டம்ளர்க்கு அரிசி இருக்கும். 4 டம்ளர் அரிசிக்கு 8 டம்ளர் நீர் சேர்க்கவும். மட்டன் க்ரேவி,ரைத்தா ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
காய்கறிகள்-கோஸ்,பீன்ஸ்,பட்டாணி,கேரட்,காளிப்ளவர்,காப்சிகம் சேர்க்கலாம். பார்ட்டி மற்றும் விஷேஷ தினங்களுக்கு பிரியாணி செய்ய இயலாதவர்கள் இது போல் வித்தியாசமாக செய்து பரிமாறலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

hi vanakkam how r u
i like your egg veg rice