www.arusuvai.com
காஜூ-கொப்ரா ஷீரா
தேவையானப் பொருட்கள்
- முந்திரி - 1/2 கப் (பொடித்தது)
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- சர்க்கரை - 1/3 கப்
- ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
- குங்குமப்பூ - 1 சிட்டிகை
- நெய் - 2 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் - 1/4 கப்
செய்முறை
- கண்ணாடி பாத்திரத்தில் தேங்காய் துருவல், முந்திரி, நெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து , மைக்ரோவேவ் அவனில் 2 நிமிடம் வைக்கவும்.
- நடுவில் ஒரு முறை எடுத்து கலக்கவும்.
- மற்ற பொருட்களையும் சேர்த்து , 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 2 நிமிடம் வைக்கவும்.
- நடுவில் ஒரு முறை இந்த கலவையை கலக்கவும்.
- சூடாக பரிமாறவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 |
10 நிமிடம் |
4 நிமிடம் |