மீன் குழம்பு

தேதி: August 26, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (9 votes)

 

மீன்- அரை கிலோ
தக்காளி-6
பச்சை மிளகாய்-6
வெண்டைக்காய்-100 கிராம்
மீன்குழம்பு பொடி-4 ஸ்பூன்
மிளகாய் தூள்-அரை ஸ்பூன்
புளி- நெல்லிக்காய் அளவு
தாளிக்க:-
எண்ணெய்
வெந்தயம்
சோம்பு
கடுகு
கறிவேப்பிலை
வெங்காயம்-2
பூடு-8 பல்


 

மீனை சுத்தம் செய்யவும்.

வெண்டைக்காயை இரண்டாக நறுக்கி வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும் (வழவழப்பு தன்மை நீங்க)

புளியை அரைமணிநேரம் ஊற வைத்து கரைக்கவும். பின் அதில் மீன்குழம்பு பொடி சேர்த்து கரைக்கவும்.அதிலேயே பச்சை மிளகாய்,வெண்டைக்காய்,தக்காளியை சேர்க்கவும்

வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்க்கவும்

பின் புளிகரைசலை சேர்க்கவும்

நன்கு கொதி வந்ததும் மீனை சேர்க்கவும்

15 நிமிடங்கள் கொதித்ததும் (மீன் வெந்ததும்) இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

very usefull

எப்போதும் போல் சூப்பர்தான் போங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மீன் கொழம்புன்னு சொல்றீங்க ..மேலே ஐஸ்கீர்ம் தானே தெரியுது ..அவ்வ்வ்

பூடு அப்படின்னா..???? :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

குட் கொஸ்டீன்... அதாகப்பட்டது என்னான்னா...

(யே..எப்பா இதெல்லாம் அட்மின்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி!)

பூடு எனப்படுவது யாதெனில் கார்லிக் :-) பூண்டு :-) இது வெள்ளை நிறத்தில் காணப்படும் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஐயா இன்னும் ஒரே ஒரு சந்தேகம் :-)

சில பேர் இறாலையும் இறால்மீன்னு சொல்றாங்க .அதுக்கும் இதே ரெஸிபிதானா ஹி..ஹி... :-)
பூண்டு வேர போட்டிருக்கீங்க அப்படியே இஞ்சியும் போட்டா சும்மா கும்முன்னு மட்டன் வாசனை அடிக்குமே ஹி.....ஹி... :-))

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்