முட்டை உருளை கிரேவி

தேதி: August 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 4
பேபி உருளை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 2
வர மிளகாய் - 3
பூண்டு - 8 பல்
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு, உளுந்து, கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி
விழுதாக அரைக்க:
தேங்காய் - ஒரு கைப்பிடி
நிலக்கடலை - 3 கைப்பிடி
மிளகு - 10(வறுத்தது)
பட்டை - 1(வறுத்தது)
தனியா - 3 தேக்கரண்டி (வறுத்தது)
வரமிளகாய் - 3 (வறுத்தது)
பூண்டு - ஒன்று முழுதாக


 

அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேபி ஆலுவை அவித்து தோல் நீக்கி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். முட்டையை அவித்து ஓடு நீக்கி எண்ணெயில் பொரிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு, வர மிளகாய், பூண்டு, வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும். வெங்காயம் சிவக்க வதக்கவும்.
பின் தக்காளி, சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
தக்காளி குழைந்து வெந்ததும் அரைத்த மசாலா விழுதினை சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் முட்டை மற்றும் ஆலுவை சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா நன்கு பிடித்ததும் இறக்கி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமினாக்கா, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். . கிரேவி பார்க்கவே சூப்பரா இருக்கு.எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.டேஸ்ட் சூப்பரா இருக்கும் போல, நான் இன்னைக்கே செஞ்சு பார்த்துட்டு சொல்ரேன்.

உங்க க்ரேவி பார்க்கவே கலர் புல்லா இருக்கு..... "பேபி ஆலுவை அவித்து தோல் நீக்கி, முட்டையை அவித்து ஓடு நீக்கி எண்ணெயில் பொரிக்கவும்." வித்யாசமா இருக்கு......... நானும் ட்ரை பன்னீட்டூ சொல்ரேன்........
அன்புடன்
லதா....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

நல்ல குறிப்பு :)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வித்தியாசமான கிரேவி வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பு ரொம்பவே புது விதமாக இருக்கு....நான் இது வரையில் முட்டையி எண்ணையில் அப்படியே பொரித்ததில்லை.....அப்படியே பொரித்தால் சுருங்கி ரப்பர் மாதிரி ஆகாதா? இருந்தாலும் பார்த்தாலே ட்ரை பண்ண தோணுது.....வித்தியாசமான குறிப்பை கொடுத்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆமி,
முட்டை கலந்தார்போலே இருக்குமா அல்லது முழுமையாக தங்கி விடுமா?
புதுமையான குறிப்பு..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

how r u pa