கத்தரி, உருளை மசாலா

தேதி: June 22, 2006

பரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - நூற்றைம்பது
கத்தரிக்காய் - நூற்றைம்பது
வெங்காயம் - ஒன்று
ப. மிளகாய் - மூன்று
பூண்டு - மூன்று பல்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்
இலை, அன்னாசிப் பூ - தாளிக்க
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்
மல்லி இலை - ஒரு டேபிள் ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
சிறிய பூண்டுப் பல் - ஒன்று


 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து அரை அங்குல கணத்திற்கு நறுக்கி வைக்கவும்.
கத்தரிக்காயை அரை அங்குல கணத்திற்கும், வெங்காயம் ப. மிளகாயை மெலிதாக நீளமாகவும் நறுக்கவும்.
பூண்டுப் பல்லை நன்றாக தட்டி வைக்கவும்.
அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் வானலியை வைத்து எண்ணை ஊற்றி பிரியாணி இலை, அன்னாசிப் பூ தாளித்து வெங்காயம், ப. மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பூண்டு, கறிவேப்பிலை, கத்தரிக்காய் சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து வேக வைத்த உருளை, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு மேலும் ஆறு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி மல்லி இலை தூவி மூடவும்.


இந்த மசாலா சப்பத்தி,பூரி,பிரட் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்