3 மாத கர்ப்பிணி - கீழே விழுந்து விட்டேன்

நான் 3 மாத கர்ப்பிணி, இன்று காலை பாத்ரூம் செல்கையில் மயக்கம் வந்ததில் பின் புறமாக விழுந்து விட்டேன். வயிற்று பகுதியில் எதுவும் அடி படவில்லை. லேசாக கால் மட்டும் வலிகிறது. குழந்தைக்கு எதாவது பிரச்சினை வருமா?. பயமாக உள்ளது. தோழிகள் ஆலோசனை கூறி என் மன பயத்தை போக்கவும்.

வயிற்றில் ஏதும் அடி படல இல்லையா??? முதுகில் அடி ஏதும் பட்டதா?? வலி ஏதும் இல்லையே?? பயம் வேண்டாம். ஒன்று ஆகாது, ஆனால் இனி ஜாக்கிரதையாக இருங்கள். மயக்கம் வருவது போல் தோன்றினால் உடனே உட்கார்ந்து விடுங்கள். எதுக்கும் ஒரு முறை டாக்டரிடம் போய் செக் செய்து கொள்ளுங்கள். ஏன்ன நீங்க எந்த வாட்டில் விழுந்தீங்கன்னு தெரியாம, கேர்லெஸா இருக்க கூடாதில்லையா... பயப்படாம போய் செக் பண்ணிக்கங்க. குழந்தை ஹார்ட் பீட் செக் பண்ணுவாங்க, ஸ்கேன் பார்ப்பாங்க. சரியா?? ஒன்னும் ஆகாது, பிராத்திக்கிறோம் நித்தியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவலைப்படாதீங்க..ஒன்னும் ஆகியிருக்காது..ஆனாலும் நம் பயத்தை போக்கி கொள்ள முடிந்தளவில் சீக்கிரமாக டாக்டர்கிட்ட போய் ஒரு செக்கப் மற்றும் ஸ்கேன் எடுத்துடுங்க..இல்லைன்னா இந்த நினைப்பே நமக்கு பயத்தை அதிகரிச்சுட்டே இருக்கும்..இறைவனை பிரார்த்திக்கிறேன்..போயிட்டு வந்து பதில் போடுங்க...

இதுவும் கடந்துப் போகும்.

ஹாய் நித்தியா தோழிகள் சொன்ன மாத்ரி முதல்ல போய் செக் பன்னுங்க.னானும் ஒருமுரை 4 மாதம் கர்ப்பமாஇருக்கும்போது நான் வேலை செய்ர இடத்தில விழுந்தேன் முதுகு அடிபட உடனே போய் ஸ்கான் பன்னினேன் ஒன்னும் இல்ல என்ரு சொன்னாங்க நீங்க யோசிக்க வேண்டாம்

துஷி தருண்

கொஞ்சம் கவனமா இருங்கபா . வனிதா சொன்ன மாதிரி மயக்கம் வர்ரா மாதிரி இருந்தா படுத்துக்கோங்க எதுக்கும் டாக்டரை கன்சல் பன்னுவது நல்லது.

அன்புடன்
ஸ்ரீ

தோழிகள் அனைவர்க்கும் மிக்க நன்றி,

உங்கள் பதிலும் பிராத்தினையும் ஆறுதலாக இர்ருதது. டாக்டர் appointment கிடைக்கவில்லை. தெரிந்த nurse ஒருவரிடம் கேட்ட போது ப்ளீடிங் இல்லை என்றால் கவலை பட தேவை இல்லை என்று சொன்னார்.

வீட்டில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. தாமதமான பதிலுக்கு மனிக்கவும்.

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்