பரமன்னம்(அரிசி பாயாசம்)

தேதி: August 29, 2011

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

பால்-அரை லிட்டர்
அரிசி-அரை கப்
பாசிப்பருப்பு-ஒரு கை அளவு
வெல்லம்-1கப்
சக்கரை-1கப்
நெய்-4ஸ்பூன்
முந்திரி,திராட்சை-அவரவர் விருப்பம்
ஏலக்காய்-2


 

பாலை காய்ச்சி அதில் அரிசி மற்றும் பருப்பை போட்டு வேகவைக்கவும்.

வெல்லதில் சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பக்கதில் வைக்கவும்.

அரிசி வெந்ததும் சக்கரை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

இன்னொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை போட்டு பொன்னிரமானதும் பாயசதில் சேர்க்கவும்.ஏலக்காய் பொடி கொஞ்சம் சேர்க்கவும்.

பாயாசம் லேசாக ஆறியதும் வெல்லப்பாகை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.


சுட சுட பாகை ஊற்றினால் பாயாசம் திரிந்துவிடும்.வெல்லம் கரைந்தால் போதும் பாகு வரவேண்டாம்.இந்த பாயாசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது.

மேலும் சில குறிப்புகள்


Comments

சுந்தரி.,
படிக்கும்போதே சுவை எப்படின்னு தெரியுதுபா.... பாராட்டுக்கள்;)

Don't Worry Be Happy.

நன்றி ஜெயா,இந்த பாயாசம் வீட்டில் பூஜைக்கு பிரசாதமாக செய்தால் நல்லது.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.