உளுந்தஞ்சோறு

தேதி: August 29, 2011

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

தோல் உளுந்து-ஒருகப்
இட்லி அரிசி-2கப்
தேங்காய்-அரைமூடி
பூண்டு-2
ஜீரகம்-1ஸ்பூன்
வெந்தயம்-1ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு


 

முதலில் வெறும் வாணலியில் வெந்தயம் மற்றும் ஜீரகத்தை வருத்துகொள்ளவும்.

பூண்டை உரித்து வைத்துகொள்ளவும்.தேங்காயை துருவிவைத்துகொள்ளவும்.

அதே வாணலியில் உளுந்தையும் லேசாக வருத்துகொள்ளவும்.அரிசியை இரண்டு தடவை கழுவி மூன்றாவது தடவை உளுந்தையும் சேர்த்து கழுவவும்.

அரிசி,உளுந்தை குக்கரில் போட்டு 9 கப் தண்ணீர் வைக்கவும்.(ஒரு கப் அரிசிக்கி 3 கப் தண்ணீர் வீதம் வைக்கவும்.)

வருத்து வைத்த ஜீரகம்,வெந்தயம்,மற்றும் பூண்டை அதில் போடவும்.உப்பு போட்டு கிளரவும்.

அடுப்பில் குக்கரை வைத்து 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.குக்கரில் ஆவி போன உடன் மூடியை திறந்து தேங்காய் துருவலை போட்டு கிளறி பரிமாரவும்.


உளுந்தஞ்சோறுக்கு கடுகு குழம்பு,கருவாட்டுகுழம்பு,சிக்கன் குழம்பு நல்ல காம்பினேசன்.
இந்த சாதத்தை குழைய வேகவைத்து தண்ணீர் ஊற்றி கஞ்சாகவும் குடிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுந்தரி...... பெண்களுக்கு(கர்பப்பை பலம் பெற) மிகவும் உகந்த உளுந்து ரெசிபி கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள். கண்டிப்பா சத்தான, சுவையான, மணமான மற்றும் செய்வதற்கு எளிமையான குறிப்பு. மீண்டும் வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.