ப்ரெட் ஆலூ கட்லெட்

தேதி: August 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

ப்ரெட் துண்டுகள் - 6
உருளை - 2
பச்சை மிளகாய் - 2
மைதா - 3 தேக்கரண்டி
ப்ரெட் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு
கொத்தமல்லி இலை - சிறிது


 

உருளை கிழங்கை வேகவைத்து மசிக்கவும்.பச்சை மிளகாய்,மல்லியை பொடியாக நறுக்கவும்.மைதாவை சிறிது தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
ப்ரெட் துண்டை தண்ணீரில் முக்கி அதை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் மசித்த உருளை,பச்சை மிளகாய்,கொத்தமல்லி ,உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உறுதியாக உருட்டிக்கொள்ளவும்.
மைதா மாவில் உருண்டையை முக்கி எடுத்து ப்ரெட் க்ரம்சில் புரட்டி சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையான ப்ரெட் ஆலூ கட்லெட் ரெடி


இக்கலவையில் காய்கறிகளும் சேர்த்து செய்யலாம்.தோசைகல்லில் கட்லட் செய்யலாம்.
இதில் கரம் மசாலா, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

குழந்தைகளுக்கு காரம் இல்லாமல் கொடுக்க நல்ல குறிப்பை கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஜயா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்கள் குமாரி, இதை போல குழந்தைகளுக்கு என்ன செய்வீர்களோ அனைத்தையும் இங்கே குறிப்பு கொடுங்க.எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கண்டிப்பாக குழந்தைகளுக்கான குறிப்பை தருகிறேன் பா வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்கள் குமாரி. ரொம்ப சிம்பிளான குறிப்பாக இருந்தாலும் டேஸ்ட்டான குறிப்பாக இருக்கு. எண்ணெயில் பொறிப்பதால் மொறுமொறுனு இருக்கும்னு நினைக்கிறேன். கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெஸிபி.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ரொம்பவே நன்றாக இருக்கும் ப்ரியா.

என் பையன் ப்ரெட் சேர்த்தது போல தெரியலையேநு சொல்லி விரும்பி சாப்பிட்டான்.வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ப்ரியா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪