ரசமலாய்

தேதி: August 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (21 votes)

 

ரசமலாய் செய்ய:
பால் - 2 கப்
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
ஊற வைக்க:
பால் - 2 கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 5
பிஸ்தா, பாதாம், குங்கும பூ - அலங்கரிக்க


 

முதலில் ரசமலாய் செய்ய கொடுத்துள்ள பாலை காய்ச்சவும். அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் சிறிது கொதிக்க ஆரம்பிக்கும் போது எலுமிச்சை சாறில் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து பாலில் ஊற்றவும்.
உடனே பால் திரிந்து வரும். கிளறிக் கொண்டே இருந்தால் தண்ணீர் தனியாகவும் பால் தனியாவும் வந்து விடும். உடனே அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
இப்பொழுது ஒரு வடிகட்டியில் மெல்லிய துணியை போட்டு வடிக்கட்டவும். பிறகு குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவவும். கழுவினால் எலுமிச்சை சுவை முற்றிலும் நீக்க படும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்னர் துணியை எடுத்து பிழிந்து ஒரு மூட்டை போல கட்டி அழுத்தமான பாத்திரம் அல்லது ஏதாவது வெயிட்டை அதன் மேல் வைக்கவும். ஒரு மணி நேரமாவது வைக்க வேண்டும். அப்பொழுது தான் அதில் உள்ள தண்ணீர் எல்லாம் வெளியேறி பனீர் நன்றாக வரும். கையில் சிறிதளவு எடுத்து உருட்டினால் ஒட்டாமல் உருண்டையாக வரும். இது தான் பதம். இது தான் பனீர் செய்யும் முறை.
பிறகு பனீரை கையால் நன்றாக சப்பாத்தி மாவு பிசைவதை போல் பிசையவும். குறைந்தது மூன்று நான்கு நிமிடமாவது பிசைந்தால் தான் ஒட்டாமல் நன்றாக வரும்.
பிசைந்த மாவை ஆறு பாகமாக பிரித்து வைக்கவும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்து முதலில் சிறிது அழுத்தி பிசைந்து பிறகு இலகுவாக தட்டி வைக்கவும்.
குக்கரில் மூன்று கப் தண்ணீரில் ஒரு கப் சர்க்கரையை கொட்டி அதிக தீயில் வைக்கவும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது தட்டி வைத்ததை போட்டு மூடி வைக்கவும். ஸ்டீம் வந்தவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் ஏழு அல்லது எட்டு நிமிடம் வேக விடவும். வேகும் போது அளவு பெரிதாகும் அதனால் குக்கர் பெரியதாக இருத்தல் அவசியம். பத்து நிமிடம் கழித்து திறந்தெடுத்து சிறிதளவு பிழிந்து விட்டு தனியே வைக்கவும்.
இதற்கிடையில் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற வைக்க என்று கொடுத்துள்ள பாலை ஊற்றி காய்ச்சவும். நடு நடுவே கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடி பிடித்து விடும். ஒரு சின்ன ஸ்பூன் அல்லது கிண்ணத்தை போட்டு வைத்தால் அடிபிடிக்காது என்று சொல்லுவர்.
பால் கொஞ்சம் சுண்ட ஆரம்பித்ததும் சர்க்கரையை ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் வடித்து வைத்துள்ள உருண்டைகளை இதில் சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம் பிஸ்தா மற்றும் குங்கும பூ (தேவையெனில்) சேர்க்கவும். குளிர் சாதன பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறவும். சுவையான ரசமலாய் தயார். ஒரு முறை செய்து சாப்பிட்டு விட்டால் பிறகென்ன கடையில் வாங்குவதை கண்டிப்பாக தவிர்த்து விடுவீர்கள்.

பாலில் சேர்க்கும் முன்னரே எடுத்து பரிமாறினால் அது தான் ரசகுல்லா. தட்டி போடுவதற்கு பதிலாக உருட்டி போட வேண்டும். ஃப்ரெஷாக பனீர் செய்த பின் செய்யும் ரசமலாய் அல்லது ரசகுல்லா தான் அலாதி சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் சூப்பர்!!! நானும் இது போல் தான் செய்வேன்... ஆனா பிசையும்போது ஒரு தேக்கரண்டி ரவை சேர்ப்பேன்... ஏன்னு கேக்காதீங்க... எனக்கு சொல்லி கொடுத்த டெல்லி அம்மா அப்படி தான் சொல்லித்தந்தாங்க ;) ஹிஹிஹீ. சூப்பரா விளக்கமா சொல்லி இருக்கீங்க :) ரொம்ப நாள் ஆச்சு செய்து... செய்ய ஆசை வந்துருச்சு பார்த்ததும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் ஹா இருக்கு, ரொம்பநாளா இந்த ஸ்வீட் மேல பெரிய கண்ணு. ஆனாலும் செய்ய பெரிய பெரிய பயம் :-(
நீங்க அழகா பண்ணிக்காட்டி இருக்கீங்க. தைரியமா ட்ரை பண்றேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு லாவண்யா,

ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டு செய்யும் குறிப்புகள் லாவண்யாவின் ஸ்பெஷல்! இதுவும் அப்படித்தான்.

தெளிவான விளக்கங்கள் கொடுத்து இருக்கீங்க. விருப்பப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். நிதானமாக ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரசமலாய் சூப்பரா இருக்கு பா எனக்கு ரொம்ப பிடித்த ஒரு இனிப்பு, சென்னை அண்ணாநகர் மிட்டாய் கடையில் இதை தான் விரும்பி சாப்பிடுவேன்.வாழ்த்துக்கள் லாவண்யா நானும் செய்து பார்க்கிறேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

லாவண்யாயாயாயா.... எனக்கு பிடிச்சமான ஸ்வீட் இத இவ்வளோ எளிதா பண்ண முடியுமா அஹ்யாயா.... கண்டிப்பா செஞ்சு பார்ப்பேன். என் வீட்ல பிரிட்ஜ் இல்ல ஆனாலும் பண்ணிப்பார்க்குறேன். (ஆசை யாரை விட்டுச்சு).... கண்டிப்பா பண்ணிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

யம்மி யம்மி ரசமலாய் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்வீட்ஸ்ல இதுவும் ஒன்னு நானும் ஒரு முறை செய்து ட்ரை பண்ணேன், ஆனா சரியா வரல பிரிஞ்சு பிரிஞ்சு போச்சு அதோட ஸ்வீட் அதுல சேரல. அதுக்கு காரணம் இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன் அடுத்த முறை சூப்பரா அசத்திடமாட்டோம். நன்றி லாவ்ஸ். வாய்ல எச்சு ஊறுது அப்பவும் விடமா பார்த்து பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கேன்

லாவண்யா, சூப்பர் பா. ஆஹா பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிற்தே.

Rasamalai super. enaku pasanthi method sollunga

இந்த ரெசிப்பிய தீபாவளி சுவீட் லிஸ்ட்ல சேர்த்தாச்சு. உங்க ரெசிப்பி ஹைலைட்டே சுலபமான செய்முறையும் மிக குறைந்த பொருட்கள்(ingredients) உபயோகித்ததும். Thanks for sharing.

Simple and sweet.

99% Complete is 100% Incomplete.

லாவண்யா, நேத்து தான் ஒரு ஸ்வீட் இதே மாதிரி செய்தேன் ஆனால் பனீர் சேர்க்கல, ஃபிரன்ட் கூட செம டேஸ்ட் ரசமலாய் மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. எனக்கு பனீர் தயாரிப்பதில் தான் கொஞ்சம் பிரச்சனை... இப்போ தீர்ந்தது...அடுத்து இதை செய்துட வேண்டியது தான்.

சூப்பர் யம்மி டெசர்ட்.. கடைசி படம் நாக்கில நீர் ஊறுது..
நல்லா பொருமையா அழகா செய்து காட்டி இருக்கிங்க ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Hi Ramya

enaku 1 doubt enaku kalaiyil 1ruvar anupia thakavalai eppoluthu evaru kanpathu

லாவண்யா,

ரொம்ப அழகா,பொறுமையா செய்து இருக்கீங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லாவண்யா.... வாவ்... சூப்பர்... யம்மி யம்மி ரசமலாய்... இதை இவ்ளோ அழகா செய்து காட்டியிருக்கீங்க... செய்முறை ரொம்ப தெளிவா இருக்கு... கண்டிப்பா நான் ட்ரை பண்ண போறேன்... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி.

அப்போ கையை காட்டுங்க....சேம் பிஞ்ச்.....(வலிக்குதா....சாரி அழுத்தி கிள்ளிட்டேன்...)....இதை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பெங்காலி. எனக்கு பெங்காலி ஸ்வீட்ஸ் என்றால் கொள்ள இஷ்டம்....செய்து நல்ல சாப்பிடுங்க......சாப்பிடும் போது எனக்காவும் சேர்த்து சாப்பிடுங்க......வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வனி.

என்ன சுகி "பெரிய (கண்ணு), பெரிய (பயம்)" வார்த்தையெல்லாம்.......உங்களுக்கெல்லாம் இது சர்வ சாதாரணம்....நானே செய்கிறேன் என்றால் நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள். செய்து பார்த்துவிட்டு கணடிப்பாக வந்து சொல்லணும்....என்ன சரியா? வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

இருந்தாலும் நீங்க என்னை ரொம்ப தான்......போங்க சீதாலக்ஷ்மி. நீங்க விருப்பட்டியலில் சேர்த்திருக்கேன் என்று சொன்னதே பெரிய சந்தோஷம். வாழ்த்துக்கு மிக்க நன்றி.

குமாரி எனக்கும் ரொம்பவே பிடித்த இனிப்பு. கடைக்கு போகும் போது ஆசைக்கு ரெண்டு வாங்கி சாப்பிடுவேன்.....ஒரு பெங்காலி மாட்டினாங்க.....எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டேன்......இனி என்ன நாமளும் ஸ்பெஷலிஸ்ட் ஆகா வேண்டிய தான்.....செய்துட்டு கண்டிப்பாக வந்து சொல்லுங்க.....வாழ்த்துக்களுக்கு நன்றி.

மீனுனுனுனுனுனு தோ வந்துட்டேன்.....எனக்கும் பெங்கால் ஸ்வீட்ஸ் எல்லாமே ரொம்பவே பிடிக்கும். பிரிட்ஜ் இல்லைனா என்ன செய்து வெளியே வைத்து ஆரிய பிறகு சாப்பிட்டு பாருங்க....இல்லையென்றால் கடையில் இருந்து கொஞ்சம் ஐஸ் கட்டி வாங்கி வந்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதற்க்கு நடுவில் ரசமாலி செய்து ஒரு மூடி போட்ட டப்பாவில் வைத்திருந்து சாப்பிட்டு பாருங்க.....உங்களுடையா பின்னூட்டத்துக்காக காத்திருப்பேன்......வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

யாழினி....வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்க....இந்த முறை கட்டாயம் நல்லா வரும்.....பார்த்துட்டே இருந்தா எப்படி எடுத்து சாப்பிட வேண்டியாது தானே? இல்லைனா வீட்டுக்கு வாங்க.....ஆனா வரும் போது சொல்லிட்டு வாங்க....செய்து பிரிட்ஜில் வெச்சிருக்கேன்.

வாழ்துக்களுக்கு மிக்க நன்றி ஜீவிமா.

தங்கம் குட்டி (உங்களின் பெயர் என்னங்க....இது ஏதோ குழந்தையை கொஞ்சறது போல இருக்கு?) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி....கடைசியில் பாலை சுண்ட விடுகிறோம் அல்லவா அது தான் பசந்தி. என்றாலும் பாசந்தி செய்யும் போது முதலிலே சர்க்கரையை சேர்க்காமல் பாலை கொதிக்க விட்டு ஆடை கட்டும் போது அப்படியே எடுத்து தனியே வைக்க வேண்டும். கடைசியில் சர்க்கரை ஏலம் குங்கும பூ மற்றும் பருப்பு சேர்க்க வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள் இதோ....
http://www.arusuvai.com/tamil/node/3694
http://www.arusuvai.com/tamil/node/12842

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கலாதேவி......செய்து பார்த்துட்டு கண்டிப்பாக வந்து சொல்லுங்க.

உமா, பனீர் சேர்க்காமல் ரசமலாய் மாதிரி ஒரு ஸ்வீட்டா.....பேரு சொன்னால் நாங்களும் தெரிந்துக் கொள்ளுவோம்...சொல்லும் போதே நல்ல இருக்கே....நீங்க எப்போ தான் எங்களுக்கெல்லாம் உங்களின் சமையல் திறமையை காட்ட போறீங்க....ஒவ்வொரு முறையும் நீங்கள் நான் இதை செய்தேன் என்று சொல்லும் போது....எங்களுக்கு ஆசையாய் இருக்கு....இருந்தாலும் கை குழந்தையை வைத்துக்கிட்டு....ரொம்ப கிரேட். ஏதோ ஒரு வகையில் இந்த குறிப்பு உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சி. நன்றி.

ரம்மி, நாமெல்லாம் யாரு....வேற யாரு...சாப்பாடு என்றால் எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையா இல்ல இருப்போம்....அதனால் தான்...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

MMSKSVS, நீங்கள் என்ன கேட்குறீங்க என்று தெரியலை. இருந்தாலும் நீங்க புதிது என்பதால் சொல்றேன்....உங்களுக்கு எந்த டவுட் என்றாலும் அதை அந்தந்த இடத்தில் தான் கேட்க வேண்டும். இங்கு இந்த குறிப்பில் உள்ள சந்தேகம் கேட்டால் பதில் கிடைக்கும். தமிழில் பதிவிருந்தால் புரிந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்

நீங்கள் ரொம்ப எதிர்ப்பார்த்த குறிப்பு இது தானா? இல்லை நீங்க வேற முறையில் செய்வீங்களா? வாழ்த்துக்களுக்கு நன்றி கவிதா?

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி வித்யா. கண்டிப்பா வந்து சொல்லுங்க எப்படி இருந்தது என்று?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஒரு தடவை டிவி ல இது பொல் செய்து காட்டினாங்க.... ஆனா பனிர் உருன்டைகளை சர்கரை பாகில் பொட்டு வேகவிடவில்லை.... அதனால் சப் என்று இருந்தது.... இந்த குறிப்பு நன்றாக உள்ளது.... நன்றி.....

கஸ்தூரி பாய்

உங்களின் அன்பான வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
ரசமலாய் சூப்பரா செய்து இருக்கீங்க.இவ்வளவு பொறுமையா நான் செய்வேனானு தெரியல.விருப்ப பட்டியலில் சேர்த்து இருக்கேன்.என்றாவது ஒரு நாள் கண்டிப்பா செய்துடுவேன்.ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கங்கள் அருமை.வாழ்த்துக்கள்.

எனக்கு பொறுமைன்னா சொன்னீங்க.....சரி விடுங்க....அப்படியே இருக்கட்டும்......

நீங்க கண்டிப்பா செய்வீங்கன்னு எனக்கு தெரியும். செய்துவிட்டு கட்டாயம் சொல்லுங்க.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா சம சூப்பரான ரசமலாய். பனீர்ல மாவு எதுவும் சேர்க்காம உருண்டை ஸ்மூத்தா செய்து இருக்கீங்க. பனீர் தயாரிக்கறது நல்ல விளக்கமா சொல்லி இருக்கீங்க. எனக்கு இதுப்போல் வந்தது கிடையாது. மசாலா தோசை செய்ததுபோல் இதையும் ஒருநாள் செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள்

ரசமலாய் superrrrrrrrrrrrrrrrrrrrr nice pics i wil try this but ennaku oru doubt panneer marthiri seiyum pothu ottama varuma pa?milk boil panni podum pothu odaiyama varuma ?

ஹாய் லாவி... சூப்பர் ரசமலாய்...... பார்க்கும் போதே நாக்கு ஊருது.....
ரொம்ப ஈஸியா செய்து காட்டிடீங்க.... என்னோட பேவரெட் ஐடம் இது..... அதுவும் ஹோட்டல் ரத்னா கபேல ரொம்ப நல்ல இருக்கும்...... இனிமேல் இதை வீட்டிலேயே செய்யலாம் உங்க தயவில்..... :)

ரசமலாய் குறிப்பு அழகா நிதானமா பொருமையா செஞ்சு காட்டியிருக்கீங்க. பார்த்ததுமே செய்யனும்னுதான் ஆசை வருது;)

மூணு மணி நேரத்துக்கும் மேல பிசையனுமா;( கை எல்லாம் நல்லா வலிச்சிருக்குமே உங்களுக்கு;(

இந்த எல்லாப் பாடும் கடைசில வர நல்லாயிருக்குன்னு சொல்லைக் கேக்கதானே;) அதுதானே நமக்கு வேணும்;)) தேங்க்ஸ் லாவண்;-).

Don't Worry Be Happy.

ஜெயா //மூணு மணி நேரத்துக்கும் மேல பிசையனுமா// குறைந்தது மூன்று நான்கு நிமிடமாவது பிசைந்தால் தான் ஒட்டாமல் நன்றாக வரும். இதுதான் லாவண்யா சொல்லி இருக்காங்க.

வினோஜா இங்கே சொல்லியிருப்பது போல் மாவு எதுவும் சேர்க்காமல் சொன்னபடியே தட்டி வைத்தால் உதிரவே உதிராது. செய்திட்டு சொல்லுங்க. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சத்யா, பனீர் செய்யும் போது தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி விட வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கண்டிப்பாக வெயிட் வைத்து செய்தால் ஒட்டவே ஒட்டாது. தண்ணீர் இருந்தால் தான் பிசுபிசுவென்று இருக்கும். அதே போல் மாவை தட்டி வைக்கும் போதும் இங்கு சொல்லியபடியே தட்டி செய்தால் கண்டிப்பாக நன்றாக வரும். செய்து பாருங்கள். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. (தமிழில் இருந்திருந்தால் இன்னமும் சந்தோஷமாக இருந்திருக்கும்)

திகில் தீபா எனக்கு ரத்னா கஃபே என்றாலே அவர்களின் சாம்பார் அதுவும் ஜக்கில் கொண்டு வந்து வைப்பார்களே அது தான் ஞாபகத்துக்கு வரும் . இனி என்ன செய்து அசத்துங்க.....வாழ்த்துக்கு மிக்க நன்றி.

ஜெயா, எங்கே மூன்று நான்கு நிமிடம் பிசைந்தால் போதும். (நான் கூட குறிப்பில் தான் தவறாக கொடுத்து விட்டேனோ என்று திரும்பவும் போய் செக் பண்ணினேன்!) நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்....எல்லாம் பாடும் கடைசியில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு நல்லாயிருக்கு என்று சொல்லும் போது பறந்து போய் விடும். அப்போ செய்வீங்க தானே ;) வாழ்த்துக்கு மிக்க நன்றி.

வினோஜா....கரெக்ட்...நான் கூட பயந்து போயிட்டேன் :(....எனக்காக பதில் சொன்னதற்கு நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா........... சூப்பர் ரஸமலாய். சென்றவருட தீபாவளிக்கு இதைதான் செய்து எங்க அம்மா, அண்ணனிடம் ரொம்ப பாராட்டு வாங்கினேன். அக்கம் பக்கத்தினரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டு பாராட்டினர். உங்க குறிப்பை பார்த்ததும் மறுபடியும் செய்யனும்போல ஆசை வந்திடுச்சு. ஃபோட்டோஸை பார்க்கும் போதே வாசம் மனதை நிரப்பிடுச்சு போங்க....... வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய்ய்ய்... லாவண்யா,

எப்படி இருக்கிங்க? ப‌சங்க எப்படி இருக்காங்க?! ரொம்ப நாளாச்சு பேசி.
அட‌டா.... எத்தனை சூப்பரா இருக்கு உங்க ரசமலாய்! எப்படி மிஸ் பண்ணினேன் தெரியலை! எங்க?, அறுசுவையில் நிதானமா பதிவுகள் போட்டு/படிக்கவே நேரம் இல்லாமல் போய்ட்டிருக்கு எனக்கு... :(

ரசமலாய் நான் ஒரு சில தடவைகள் பார்ட்டிக்காக செய்து இருக்கேன், ஆனால் எப்பவும் ஸ்க்ராட்சில் இருந்து பண்ணது கிடையாது! ஹி..ஹிஹி.. எல்லாம் இன்ஸ்டன்ட்தான்! :) பாலை காய்ச்சி, மலாய் தனியா எடுத்து பிசைந்து செய்வது என்றால் நேரம் எடுக்கும், பார்ட்டிக்கு சட்டென்று செய்யவேண்டும் என்பதாலேயே, ஒவ்வொரு முறையும் இன்ஸ்டன்ட்க்கு போயிடுவேன். நீங்க ஸ்டெப் பை ஸ்டெப்பா படங்களை போட்டு, அழகா செய்து காண்பிச்சு, என் ஆசையை மறுபடியும் கிளப்பி விட்டுட்டிங்க! :) கட்டாயம் ஒரு நாள், செய்து பார்க்கனும்!. பாராட்டுக்கள் லாவண்யா! மறுபடியும் பிறகு சந்திக்கலாம், நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் லாவண்யா!. நேற்று உங்க ரெசிப்பி பார்த்து ரசமலாய் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. என் கணவருக்கு ரொம்ப பிடித்து இருந்தது. சூப்பர் ரெசிப்பி இது. ரொம்ப சிம்பிளா சொல்லியிருக்கிறீங்க, ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு. இனிமே நிறைய தடவை செய்வேன் .
தக்ஷிணா

அச்சச்சோ ... நாந்தான் சரியாப் பாக்கலைபா.. நல்லா நறுக்குன்னு என் தலையில ஒரு கொட்டு வச்சிகிட்டேன் சரியா;)

ரொம்ப தையிரியமா (லாவண் குறிப்பாச்சே) மூணு மணி நேரம் பிழைந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு லார்ஜ் அமவுண்ட் பண்ணலாம்னு மறுபடியும் ரெசிபி பாக்க வந்தேன்;) நல்ல வேளை தப்பிச்சேன்;)) செய்ததற்கு அப்புறம் இங்க எப்படி இருந்ததுன்னு கட்டாயம் இன்னொரு பதிவும் போடறேண்டா;-)

வினோஜா தேங்ஸ்டா;)

Don't Worry Be Happy.

wov parkum potha nakkil neer urugirathu, enakku rasa malai endral kollai viruppam, , sweet stall sellum pothu rasa malai thaan vendum endru pidivatham pannuven, . suvaikum pothu sulabam, ana neenga evvalavu easya seireenga . innum ithu pola bengali sweet seiya solli tharungalen

muyarchi sei , valvil munneru nermaiyana vazhiyil, lanjathirku NO sollu

ஹாய் லாவண்யா நான் உங்க ரசமலாய் செய்தேன். ஆனா முத தடவைங்கறதுனால லைட்டா பிஞ்சு வந்தது ஏன்னா நான் பிரிட்ஜ்ல வைக்கல இல்ல அதுனால அப்பிடி ஆச்சு அப்புறம் கொஞ்சம் ஒரு 5 பீஸ் மட்டும் பக்கத்து அக்கா கிட்ட குடுத்து ஃபிர்ட்ஜ்ல வைக்க சொன்னேன். சூப்பரோ சூப்பர்பா ரொம்ப நன்றி இதுக்காகவே நான் ஃபிரிட்ஜ் வாங்க போறேன் அந்த அக்காவும் சாப்டாங்க ரொம்ப நல்லா இருக்கு எனக்கும் குறிப்பு குடுங்க சொன்னாங்க. அப்புறம் என்ன பந்தாவா சொல்லி குடுத்தேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஊரில் பால் சூப்பரா கிடைக்கும், சுத்தமான பசும்பால். உங்க குறிப்பு தான் நினைவுக்கு வந்தது... உடனே செய்துட்டேன். சூப்பரா இருந்தது. ஊரில் மாமா வீட்டுக்கு எல்லாம் கொடுத்தேன், எல்லாரும் சூப்பர்ன்னு சொன்னாங்க. உங்க மெத்தட் தான்... ரவை இல்லாம தான் செய்தேன். :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹே! நான் பர்த்டே பார்ட்டிக்கு செஞ்சு அசத்திட்டேனே;-) சூப்பரா இருந்துச்சுடா...ரொம்ப தேங்க்ஸ்...எல்லாருமே பாராட்டினாங்க;-) அது எல்லாமே உங்களைத் தான் சாரும்;-) மறுபடியும் தேங்க்ஸ்;-)

Don't Worry Be Happy.

Hello,

this is my favorite, supera panni irukeenga, naan try panna poren, parthale sappidanum pola iruku...

ரசமலாய் தீபாவளிக்கு செய்தேன்..இது 2வது தடவை.இரண்டு முறையும் நல்லா வந்தது.குறிப்புக்கு நன்றி

Kalai