மைதா முறுக்கு

தேதி: August 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 1 /2 கிலோ
எள்ளு - 1 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான ளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 /2 லிட்டர்


 

தண்ணீரில் உப்பு பெருங்காயம் எள் ஓமம் சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு அதில் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.மாவு வெந்ததும் நன்றாக பிசையவும்.(கொஞ்சம் சூடு பொறுக்கும் அளவு)
இதை முறுக்கு குழலில் போட்டு பிழிந்து சூடான எண்ணெய்ல் பொறித்து எடுக்கவும்.
சூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.


வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யும் இம்முறை மிகவும் சுலபமானது தண்ணீர் மட்டும் மாவு அளவுக்கு தகுந்தாற்போல இருக்கணும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சின்ன கண் உடைய குழலில் பிழிந்தால் சுவையாக இருக்கும்.

கொதிக்கும் தண்ணீரில் நான் எல்லா பொருட்களையும் போட்டேன் மாற்று முறையில் மாவில் அனைத்து பொருட்களையும் போட்டு கொதிக்கும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து குழம்பு கரண்டியின் காம்பினால் கலக்கவும் செய்யலாம். இரெண்டும் ஒன்றுதான்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Maidha muruku vithyasama irukku valthukkal.

ஹாய் ஜானு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

mikavum arumayaka irunthathu.en magal virumbi sappital.nanri.

god is great

மிக்க நன்றி பா செய்து பார்துடின்களா? இனி அடிக்கடி பொண்ணுக்கு செய்து கொடுங்க anushyaseetharaman

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தோழி........... அரிசி முருக்கு தா அம்மா செய்வாங்க மைதா முருக்கு சாப்டது இல்ல..... செய்து பாத்துட்டு சொல்ரேன்.....(கூடிய சீக்கிறம் படங்களோட குறிப்பு தாங்க).....
அன்புடன்
லதா........

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

ஹாய் லதா செய்து பாருங்க நன்றாக இருக்கும்.படத்துடன் நெறைய குறிப்பு கொடுத்து இருக்கேன் மா. இந்த லிங்க் பாருங்க..

http://www.arusuvai.com/tamil/expert/1564

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪