ஓட்ஸ் கோதுமை தோசை

தேதி: August 30, 2011

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

ஓட்ஸ்(மிக்ஸியில் பொடித்தது) - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
ரவை(வறுக்காதது) - 1 கப்
சாம்பார் வெங்காயம் - 12
வெள்ளைப்பூடு - 7
இஞ்சி - சிறு துண்டு
பச்சைக் கொத்துமல்லி - 1 சிறிய கட்டு
கருவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, ரவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
இந்த மாவை, 5 - 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், பூடு இவற்றை உரித்து வைக்கவும்.
உரித்த வெங்காயம், பூடு, இஞ்சி, கொத்துமல்லி, கருவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.
ஊறிய மாவில், இந்தக் கலவையைப் போட்டு, நன்றாகக் கரைக்கவும்.
தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
தோசைக் கல்லை காய வைத்து, தோசையாக ஊற்றி, இரு புறமும் வெந்ததும், எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
எல்லா விதமான சட்னி, மிளகாய்ப் பொடியுடன் சாப்பிடலாம்.


தோசை மிகவும் மிருதுவாக இருக்கும். காரம் வேண்டுமென்றால், சிறிது மிளகுப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்