மசாலா பூரி

தேதி: September 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோதுமை மாவு-2கப்
புதினா-அரைகப்
கொத்தமல்லி-அரைகப்
பச்சை மிளகாய்-4
இஞ்சி பூண்டு விழுது-அரை ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
சீரக பொடி-1ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு


 

கொத்தமல்லி இலை,புதினா,பச்சைமிளகாய் இவற்றை மிக்சியில் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துகொள்ளவும்.

கோதுமை மாவில் இந்த விழுது,இஞ்சி பூண்டு விழுது,சீரகபொடி,உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி பூரி செய்ய தேவையான அளவு பிசைந்து வைத்துகொள்ளவும்.

இந்த மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


இந்த பூரி குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சாஸ்சுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்