இஞ்சி பூண்டு சட்னி

தேதி: September 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (14 votes)

பூண்டு - 15
இஞ்சி - 10 துண்டுகள் (பூண்டின் அளவு)
தேங்காய் - அரை மூடிக்கும் சிறிது
கறிவேப்பிலை - 6 இதழ்
வரமிளகாய் - 2
புளி - அரை இன்ச்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - சிறிது
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
மல்லி விதை - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - 2 கிள்ளு
நல்லெண்ணெய் - தாளிக்க

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். புளியை ஊற வைக்கவும்.
பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
பின் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
ஆறியதும் தேங்காய், புளி, இஞ்சி மற்றும் பூண்டோடு சேர்த்து அரைக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
மிகவும் சுவையான சட்னி ரெடி.

சுடு சாதத்திற்கு ஏற்றது. வாயுவாலோ அல்லது வேறு காரணத்தாலோ வயறு தொல்லை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. பசியின்மை, வாந்தியின் அறிகுறி, நீண்ட பயணம் மற்றும் நீண்ட நேரம் இரவில் விழிப்பதால் வயிற்றிலும், வாயிலும் ஏற்படும் ஒருவித ஒவ்வாமைக்கு இந்த சட்னியின் வாசனையே சாப்பிட தூண்டும். உடலுக்கு மிகவும் நல்லது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

நல்ல குறிப்பு... வாழ்த்துக்கள்... விருப்பப்பட்டியல்ல சேர்த்தாச்சு :-)

KEEP SMILING ALWAYS :-)

ரம்யா நல்ல ஆரோக்கியமான சட்னிதான் செஞ்சு காண்பிச்சு இருக்கீங்க. சீரகம், வெந்தயம் எல்லாம் சட்னியில் சேர்த்திருப்பது புதுமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

ஹாய் ரம்யா,

எப்படி இருக்கிங்க? ரொம்ப டிஃபரண்டான காம்போவா, நல்லா இருக்கு உங்க இஞ்சி பூண்டு சட்னி! பாராட்டுக்கள் ரம்யா!
இஞ்சி துவையல், சட்னி எல்லாமே எங்களுக்கு, முக்கியமா என்னவருக்கு ரொம்ப பிடிக்கும்! :) அடுத்தமுறை, இந்த மெத்தட்ல செய்து பார்க்கிறேன்! அநேகமா, இந்த வீக்கென்டே! :)

அன்புடன்
சுஸ்ரீ

புதுசா இருக்கு ரம்ஸ்... இப்போதான் இந்த சட்னி பார்க்கறேன்.... செய்து சாப்பிட்டு கண்டிப்பா சொல்றேன்.... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

நான்தான் first. very nice சட்னி.செய்து பார்க்குறேன்.

ஹாய் ரம்யா.... சட்னி வித்தியாசமான சத்தான குறிப்பா இருக்கு. வாழ்த்துக்கள். கண்டிப்பா மணமாகவும் டேஸ்ட்டாக இருக்கும். விருப்பப்பட்டியலிலும் சேர்த்தாச்சு.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுமத்தாருக்கு நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்டிப்பா செய்து பaர்ுங்க.. லைட்டான கசப்பு சுவை இருக்கத் தான் செய்யும்.. ஆனா சுடு சாதத்திற்கு நல்லாவே இருக்கும் ;) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்டிப்பா செது பார்த்து சொல்லுங்க.சுடு சாதத்திற்கு சூப்பரா இருக்கும் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் நலம்.நீங்க..கண்டிப்பா செய்ங்க..ஈஸி.. தாளிச்சு பச்சையா வைத்து அரைப்பது தான்... செய்திட்டு சொல்லுங்க :) நன்றி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நம்ப நன்றி.. ஒரு நாள் லாங் ட்ராவல் போயி வந்து..எதுவும் சாப்பிட பிடிக்கலை.. எங்காளும் கண் முழுச்சு வேலை செய்றவர்.. அப்ப த்ஹன்..அம்மா சொல்லி நாம் செய்தது..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றிங்க.. முதலா வந்து வாழ்த்து சொன்னதில் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா,

ரொம்ப சுவையான சட்னி..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு ரம்யா,

இஞ்சி பூண்டு இரண்டுமே ஜீரணத்துக்கு உதவும், பசியைத் தூண்டும். நல்லதொரு குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப அருமை யான சட்னி

Jaleelakamal

மிக்க நன்றி பா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றிங்க.
ஆமா ரெண்டும் ரொம்ப நல்லது.. கொஞ்சம் சட்னி கசப்பா இருப்பது போல இருக்கும்..ஆனா சுடு சாதத்திற்கு அருமையா இருக்கும். :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்துக்கும், வருகைக்கும் ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருமையான சட்னி விருப்பபட்டியில் சேர்த்தாச்சு வாழ்த்துக்கள்

ரம்ஸ் சட்னி பார்க்கும்போதே சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ்,
புதுமையான குறிப்பா இருக்கு.விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.5 ஸ்டாரும் கொடுத்துட்டேன்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

ரம்யா வித்யாசமான குறிப்பு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிகவும் சத்தான டேஸ்டி சட்னி, நிறையா சத்தான பொருட்கள் செத்து பண்ணி இருக்கீங்க. வாழ்த்துக்கள் ரம்ஸ்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எங்க இருந்து இப்படி குறிப்பெல்லாம் பிடிக்கறீங்க... சூப்பர்... சூப்பர். அவசியம் நாளைக்கே செய்துடறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா செய்து பாருங்க.. இது என் அம்மா செய்வது தான்..
வாழ்த்துக்கு நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி .ஈஸியா செய்ய கூடியது :) செய்து பாருங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றிங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி.. உங்க ஸ்டாருக்கும், வாழ்த்துக்கு. விருப்ப பட்டியல் சேர்த்தை ஒரு நாள் செய்து பார்த்து சொல்லுங்க.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி..அவசியம் செய்து பாருங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செய்துட்டு சொல்றேன்னு சொன்னேன்... நீங்க அந்த பதிவையே பார்க்கல போல... ;) ஆனா நாங்க செய்து சாப்பிட்டோம்ல. சுவையா இருந்தது தோசை கூட. வித்தியாசமான டேஸ்ட்... இஞ்சி பூண்டு வாசம் சேர்ந்து ரொம்ப ரொம்ப சுவையா இருந்தது. சாப்பிடும் போது இருந்த சுவையை விட சாப்பிட்ட பின் நாக்கில் நிக்கும் சுவை ரொம்ப சூப்பர். இனி அடிக்கடி செய்வோம். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி.. செய்து பார்த்து சொன்னதுக்கு. நான் பார்த்தேனே.. பார்த்திட்டு செய்து பார்த்து சொல்லுங்கனும் சொன்னேன் :)..

ஆமாம்.. நான் சுடு சாதத்திற்கு தான் சாப்பிடுவேன் வனி.. இல்லைனா கொஞ்சம் கசந்த டேஸ்ட் கொடுக்கும்.. கூட வெங்காயமும் கடிச்சிட்டா சொல்லவே வேணாம் :) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுட சுட சாதத்தோட சாப்பிட மிகவும் அருமையா இருந்தது. இன்னும் கை கூட கழுவாம பதிவு போடரென்னா பார்த்துக்கோ..எவ்வளவு பிடிச்சிருக்கும்னு....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

நல்ல வேலை திடிர்னு பார்த்தேன். இல்லைனா உங்க பதிவு மிஸ் ஆயிட்டு இருக்கும்..:) ரொம்ப தேங்க்ஸ் :) அம்மாவோட ரெஸிபி தான்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)