கோவக்காய்-உளுந்து சட்னி

தேதி: September 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோவக்காய் - 50 கி
காய்ந்த மிளகாய் - 5
உளுந்து - 1 மேஜை கரண்டி
புளி - கோலிகுண்டு அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

கோவக்காயை நான்காக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காயை நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு,காய்ந்த மிளகாய்,உளுந்து மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
எல்லாவற்றையும் நன்கு ஆற வைக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
கடுகு,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
சுவையான கோவக்காய் சட்னி தயார்.


இந்த கோவக்காய் சட்னி இட்லி,தோசைக்கு நன்கு பொருந்தும்.

மேலும் சில குறிப்புகள்