பட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?

அன்பு உள்ளம் கொண்ட அறுசுவை நட்புகளுக்காக ஒரு தலைப்பு:

“பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?”

தலைப்பை தந்த தோழி “இஷானி”கு மிக்க நன்றி :)

தேவையான டாப்பிக்னு தோனுச்சு... உங்களுக்கும் வாதிட பிடிக்கும்னு நம்பிக்கையில் தேர்வு செய்துட்டேன் ;) வாங்க வாங்க... எல்லாரும் வந்து வாதங்களை வைங்க.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

பாக்யா... புதிதாக பட்டியில் பங்கெடுக்கிறீங்கள்... வாழ்த்துக்கள். வருகைக்கு மிக்க நன்றி. நீங்க எந்த பக்கம்... “சீரழிக்கிறோம்” அணி பக்கமா??? வாங்க இன்னும் வாதத்தோடு :)

ஹர்ஷா... நீங்களூம் “வாழவைக்கிறோம்” அணியா?? எந்த அணி பக்கம் ஆளை காணோம்னு தேடினேனோ அந்த அணிக்கே எல்லா பெரிய தலைகளும் போயிட்டீங்க.. ஏற்கனவே சீதாலஷ்மி அடிச்சு பட்டய கிளப்பிட்டு போயிருக்காங்க...

//இந்த கையேந்தல் நியாயமான காரணத்துக்காக என்றால் அவனுக்கு பிச்சையிடுவதில் தவறில்லை// - இப்போ எல்லாரும் நியாயமா எடுக்கறாங்களா??? இதை தான் எதிர் அணி கேட்குறாங்க.

//ஒரு சமுதாயத்தில் பிச்சை காரன் இருக்கலாம்.அவனால் சமுதாயத்துக்கு பாதிப்பு இல்லை.ஆனால் திருடர்கள் இருக்கவே கூடாது.// - நீ அவன் பிச்ச காரன் ஆக கூடாதுன்னு நினைக்கிற... நான் அவன் திருடனாக கூடாதுன்னு நினைக்கிறேன்... [பேக்ரவுண்டில் இளையராஜா மியூசிக்] எங்கோ கேட்ட மாதிரி இருக்கே!!! ;)

//அல்லது ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுத்து பாருங்க.// - எதிர் அணி சாப்பாடு வாங்கி கொடுத்தா வாங்கிக்குறதில்லைன்னு சொல்றாங்களே!!!

//பாத்திரம் என்பது,அவர்கள் கையில் இருக்கும் திருவோட்டையும் குறிக்கும்.அவர்களின் கேரக்டரையும் குறிக்கும்.// - சரியான விளக்கம்.

தொடருங்க ஹர்ஷா... தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

"இந்த கையேந்தல் நியாயமான காரணத்துக்காக என்றால் அவனுக்கு பிச்சையிடுவதில் தவறில்லை,நடுவரே."

பிச்சை எடுப்பதில் நியாயம் என்ன அநியாயம் என்ன?எடுப்பவன் பிச்சையாக வேலை கேட்டால் பராவாயில்லை,பர்சுல எவ்வளவு இருக்குன்னு இல்ல கேக்கறான்..!!

”அப்படி நாம் பிச்சை போடலனா,அவனுடைய பசி அவனை திருட தூண்டும்.திருடி வரும் பணத்தில் சாப்பிடுவான்.இதே பழக்கம் பிக் பாக்கெட்டாக மாறும்.இது சமுதாயத்தையே பாதிக்கும் அல்லவா?”

ஆகமொத்தம் சோம்பேறி ஆக்கிவிடுகிறதல்லவா..பிறகு எங்கே சமுதாயம் முன்னேற்றம் அடையும்..?

“ஒரு சமுதாயத்தில் பிச்சை காரன் இருக்கலாம்.அவனால் சமுதாயத்துக்கு பாதிப்பு இல்லை.ஆனால் திருடர்கள் இருக்கவே கூடாது”

இன்று பிச்சை கிடைத்தால் அவன் பிச்சைக்காரன் நாளை பிச்சையிட ஆள் இல்லை என்றால் அவன் திருடன் மட்டுமல்ல..இன்னும் என்ன என்னவோ ஆவான்,ஆகமொத்தம் பிச்சைக்காரன் முதல் தீவிரவாதி வரை நாம்தான் உருவாக்குகிறோம்..இன்று கொடுத்துவிட்டு நாளை முடியாது என்றால் முடிந்தவன் தீவிரவாதி ஆகிறான் முடியாதவன் திருடன் ஆகிறான்..

”பிச்சையிடுவதால் ஒரு சமூக விரோதி உருவாவதை தடுக்க முடியும் என்றால் பிச்சையிடுவதில் தவறில்லை நடுவரே.”

தன் கடமையை செய்ய மறந்த ஒரு சமூகவிரோதிக்குதானே நாம் இன்று பிச்சையிடுகிறோம்,அப்புறம் என்ன உருவாக்குவது?

”ஒருவன் பிச்சை எடுத்து அந்த காசில் குடித்தால்,அவனுக்கு கண்டிப்பா அடுத்த முறை யாரும் பிச்சை இட மாட்டாங்க.இது உண்மை.நாம் போடும் பிச்சையில் ஒருவன் சாப்பிட்டால்,அவனுக்கு கண்டிப்பா பிச்சை போடுவோம்.இப்படி ஆராய்ந்து பிச்சை இடுவது நம் கையில் தான் உள்ளது.”

அடபோங்கப்பா இதுக்காக அவன் பின்னாடியே போய் அவன் கண்ணிமாராவில் ஆர்டர் பண்ற விஸ்கிய நாமளும் ஒரு பெக் சாப்பிட்டுக்கிட்டே ஆராய்ச்சி பண்ணவா முடியும்!!!

மனிதனாய் பிறப்பதற்கே ஒரு மாதவம் செய்திட வேண்டுமம்மான்னு சொல்லியிருக்காங்க..அப்படி மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உள்ளது,அதை சரிவர செய்தால்தான் எதுவுமே சரியாக நடக்கும்.நம் குடும்பம் சரியாக இருந்தால்தான்,ஒரு தெரு சரிவர இருக்கும்,ஒரு தெரு ஒரு ஊராகும்,ஒரு ஊர் ஒரு நாடாகும்,ஒரு நாடு பல நாடாகும்...ஒரு மனிதனை சோம்பேறி ஆக்குவதன் மூலம் ஒரு சமுதாயத்தையே சோம்பேறி ஆக்குகிறோம்.

மீண் கேட்டால் மீண் பிடிக்கும் வலை வாங்கி கொடு என்று சொல்வார்கள்,வலை எண்பது பிச்சையிடுவது ஆகாது,அது அவன் வாழ நாம் செய்யும் வழியாகும்..

எதுவுமே பார்க்கும் பார்வையில் இருக்கிறது..அப்படி ரொம்ப இயலாதவர்களுக்கு அவர்களை ஒரு ஹோம்ல கொண்டு போய் விடுங்க,இல்ல அநாதை ஆசிரமத்தில் சேருங்க,ஒரு வீட்டுல வேலைக்கு சேர சொல்லுங்க..அதெல்லாம் முடியாது நான் “நோவாம நோன்பு கும்புடுவேன்னு” சொல்ற மாதிரி அவங்களுக்கு உக்கார்ந்த இடத்துலேயே பிச்சையிட்டா எப்படி?சோம்பேறி மட்டுமல்ல அவணுக்கு அவன் மேலயே ஒரு நம்பிக்கை இல்லாத வாழவும் நாம்தான் வழிவகுக்கிறோம்...

மீண்டும் வருவேன்..

இதுவும் கடந்துப் போகும்.

நடுவரே

//ஒரு காலனியில் ஒரு ரவுன்ட் சுத்தினா கண்டிப்ப குறைந்தது அன்றைய மூன்று வேளை சாப்பாட்டுக்கான காசு கிடைச்சாச்சு..//

//நோவாம நோன்பு கும்புடுவேன்னு” சொல்ற மாதிரி அவங்களுக்கு உக்கார்ந்த இடத்துலேயே பிச்சையிட்டா எப்படி?சோம்பேறி மட்டுமல்ல அவணுக்கு அவன் மேலயே ஒரு நம்பிக்கை இல்லாத வாழவும் நாம்தான் வழிவகுக்கிறோம்...//

என்னங்க நடுவரே இது எதிரணி இப்படி முன்னுபின் முரணா பேசுனா எப்படி?

நீங்க ஒரு பத்து நிமிசம் ஒரே இடத்தில உக்காந்து பாருங்க நடுவரே அது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் புரியும்..;)

இல்லை... காலைல எழுந்ததும் ஒரு வாய் தண்ணி கூட குடிக்காம நாலு தெரு நடந்து பாருங்க எவ்வளவு கஷ்டம்னு... அட வாக்கிங் போறதையும் யாருக்காவது வெயிட் பண்ற நேரத்தில உக்காரதையும்தாங்க சொன்னேன். நமக்கு இதுவே அ..வ்..வ..ள...........வு கஷ்டமா இருக்கும்போது நாலு தெரு நடந்து.. ஒவ்வொரு வீட்டு வாசல்லேயும் நின்னு .. நாய் இருக்குமோ இல்ல அந்த வீட்டு பேய்தான் இருக்குமோன்னு பயந்து பயந்து.. லவுட் ஸ்பீக்கர் டிவி சத்தத்துக்கு மேல கத்தி பிச்சைக் கேக்கரது எவ்வளவு கஷ்டம்னு..;(

நடுவரே பிச்சைக்காரங்க சீரழியறாங்களா இல்லை பிச்சைக்காரங்க வாழ்றாங்களான்னா நாமப் பேசறோம்? நாம பேசறது சமுதாயத்தப் பத்திதானங்க. அவங்கனால நம்ம சமுதாயம் சீரழியுதான்னுதான்னுதான் பேசறோம்.

நடுவரே

ஒரு ஆங்கிலப் படத்தப்பத்தி சொன்னீங்க.. இப்ப வர தமிழ் படமே அப்படிதான் இருக்கு,, காய்ஞ்ச தலையும், கந்தல் துணியும் போட்டு வர ஹீரோவதான் இப்ப இயல்பான நடிப்புன்னு சொல்றாங்க. அப்ப இந்தியாவுல இருக்கிற அத்தனை பேரும் அப்படிதான் இருக்கோமா என்ன... விடுங்க நடுவரே நம்ம டாபிக் பத்தி பேசுவோம்;)

இது நல்ல விசயாமான்னு கேட்டீங்க
டாஸ்மார்க் நல்ல விசயமா ?? கள்ளச்சாரயத்துக்கு இது பெஸ்ட்டுன்னுதான் அரசாங்கமே எடுத்து நடத்துது. இதுல வருமானமும் வருது அது வேர கதை.. அதை விடுங்க..

அதுமாதிரிதாங்க
பிச்சையிடுதல்ங்கிறது கெட்ட விசயமா நீங்க எடுத்திக்கிட்டாலும் அதனால ஒரு திருடனோ,வழிப்பறி கொள்ளையனோ, இல்லை தீவரவாதியோ உருவாகம தடுக்கிறோமே அப்ப இது சமுதாயத்துக்கு நல்லதுதானுங்க.

//தன் கடமையை செய்ய மறந்த ஒரு சமூகவிரோதிக்குதானே நாம் இன்று பிச்சையிடுகிறோம்,அப்புறம் என்ன உருவாக்குவது?//

இந்த சமூக விரோதினால சமூகத்துக்கு ஒரு கேடும் நேரப்போறதில்லை. அப்புறம் எதுக்குங்க கவலைப்படனும். நீங்க பிச்சைபோடமா இருந்து பாருங்க அப்பதான் வரும் கேடு... அதுக்கு பிச்சை போட்டுட்டு போங்கன்னுதான் சொல்றோம்.

நடுவரே அவங்க பாட்டுக்கு தேமேன்னு இருக்காங்க சமுதாயம் பாட்டுக்கு தன் வேலையப் பாத்துட்டு இருக்கு... இதில சீரழிவு எங்க வந்தது? அதனால சமுதாயம் ஏதோ நம்மாள முடிஞ்சது கொடுத்தோம்ங்கிற திருப்தியல வாழ்ந்துட்டுதான் இருக்கு..அதனால பிச்சையிடுவதினால் சமுதாயம் வாழுதுன்னு இன்னொரு தடவை அழுத்தம் திருத்தமா சொல்லி இப்போதைக்கு என் வாதத்தை முடிக்கிறேன்.

Don't Worry Be Happy.

”என்னங்க நடுவரே இது எதிரணி இப்படி முன்னுபின் முரணா பேசுனா எப்படி?”

வேலை வெட்டி செய்யாம ஒரே ரவுண்ட்ல மூணு வேளை சாப்பாட்டுக்கு ரெடிபண்ணிட்டாங்கன்னு சொல்றேன்,அவன் அவன் வேர்வை சிந்தி,சாக்கடை அள்ளி சம்பாதிக்கிறான்,இவன் கையேந்துவதை வேலையாக செய்கிறான்,”செய்யும் தொழிலே தெய்வம்”,பிச்சைஎடுப்பது தொழில் அல்ல,பிச்சை போடுபவணும் தெய்வம் அல்ல...

“நடுவரே பிச்சைக்காரங்க சீரழியறாங்களா இல்லை பிச்சைக்காரங்க வாழ்றாங்களான்னா நாமப் பேசறோம்? நாம பேசறது சமுதாயத்தப் பத்திதானங்க. அவங்கனால நம்ம சமுதாயம் சீரழியுதான்னுதான்னுதான் பேசறோம்.”

ஒரு மனிதனில் இருந்துதான் பல மனிதர்கள்,பல மனிதர்கள் உள்ளதுதான் ஒரு சமுதாயம்.

“நடுவரே அவங்க பாட்டுக்கு தேமேன்னு இருக்காங்க சமுதாயம் பாட்டுக்கு தன் வேலையப் பாத்துட்டு இருக்கு... இதில சீரழிவு எங்க வந்தது? ”

ஆம்,அவங்கபாட்டுக்கு தேமேன்னுதான் இருக்காங்க,அததான் நாங்களும் சொல்றோம்,அவன் மட்டும் அல்ல,அவனை சார்ந்த அனைவரும் சோம்பேறியாக இருக்கிறார்கள்,அப்புறம் என்ன?சமுதாயமும் சோம்பேறியாக இருக்க வேண்டியதுதான்.

“இது நல்ல விசயாமான்னு கேட்டீங்க
டாஸ்மார்க் நல்ல விசயமா ?? கள்ளச்சாரயத்துக்கு இது பெஸ்ட்டுன்னுதான் அரசாங்கமே எடுத்து நடத்துது. இதுல வருமானமும் வருது அது வேர கதை.. அதை விடுங்க..”

ஒரு படத்துல வர டயலாக்,தப்பு எல்லா இடத்துலயும் நடந்துக்கிட்டுதான் இருக்கும்,ஆனா எங்க (கவர்மெண்ட்) கண்ட்ரோல்ல இருக்கும் அவ்வளவுதான்,இதுதான் யதார்தமான உண்மை..

பிச்சைகாரர்கள் அனைவருக்கும் குடும்பம்,குட்டி உள்ளது...அவணுக்கு பிச்சையிட்டால் அவன் குடும்பத்துக்கே பிச்சையிடுவதாகத்தானே அர்த்தம்,குடும்பம் சமுதாயம் ஆகாதா?

மீண்டும் வருகிறேன்.

இதுவும் கடந்துப் போகும்.

அஸ்வினி... //பிச்சை எடுப்பதில் நியாயம் என்ன அநியாயம் என்ன?எடுப்பவன் பிச்சையாக வேலை கேட்டால் பராவாயில்லை,பர்சுல எவ்வளவு இருக்குன்னு இல்ல கேக்கறான்// - ஹஹஹா... எங்க தான் பேச கத்துக்கறீங்களோ!!!

//தன் கடமையை செய்ய மறந்த ஒரு சமூகவிரோதிக்குதானே நாம் இன்று பிச்சையிடுகிறோம்// - சம பாயிண்ட்டு

ஜெய்...

//என்னங்க நடுவரே இது எதிரணி இப்படி முன்னுபின் முரணா பேசுனா எப்படி// - அவங்க தான் சொல்லனும் தெளிவா :(

//நீங்க ஒரு பத்து நிமிசம் ஒரே இடத்தில உக்காந்து பாருங்க நடுவரே அது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் புரியும்..;)

இல்லை... காலைல எழுந்ததும் ஒரு வாய் தண்ணி கூட குடிக்காம நாலு தெரு நடந்து பாருங்க எவ்வளவு கஷ்டம்னு...
// - அனுபவமா??? ;) என்னா சப்போர்ட்டு!!!

அஸ்வினி...

//வேலை வெட்டி செய்யாம ஒரே ரவுண்ட்ல மூணு வேளை சாப்பாட்டுக்கு ரெடிபண்ணிட்டாங்கன்னு சொல்றேன்,அவன் அவன் வேர்வை சிந்தி,சாக்கடை அள்ளி சம்பாதிக்கிறான்,இவன் கையேந்துவதை வேலையாக செய்கிறான்// - எப்புடி புடிச்சாங்க பாருங்க பாயிண்ட்டை!!!

எங்கப்பா மற்றவர்கள் எல்லாம்... வாங்க எதாவது ஒரு அணிக்கு வாதாட!!! நடுவர் வெயிட்டிங். :) இன்னொருவாட்டி பட்டி உள்ளே போக கூடாது சரியா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

”அதுமாதிரிதாங்க
பிச்சையிடுதல்ங்கிறது கெட்ட விசயமா நீங்க எடுத்திக்கிட்டாலும் அதனால ஒரு திருடனோ,வழிப்பறி கொள்ளையனோ, இல்லை தீவரவாதியோ உருவாகம தடுக்கிறோமே அப்ப இது சமுதாயத்துக்கு நல்லதுதானுங்க.”

”கொடுப்பதினால் எனக்குக் கிடைக்கும் புத்துணர்வு, மன நிறைவு, புதிய உற்சாகம் இருக்கே, அது ஆக்ஸிஜன் மாதிரி வேலை செய்யுது எனக்குள்ள.”

ஆஹா இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவணுக்கு உதவினால் இவங்களுக்கு மனநிம்மதி கிடைக்குமாம்...எப்படி?

ஏன் அவன் திருடனாவோ,சமூகவிரோதியாகவோ மாறவேண்டும்,ஒரு உழைப்பாளியாக மாறவேண்டியதுதானே..அதுதானே உசித்தமான செயல்,அதைத்தானே நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்..பிறர் கையை நம்பி எத்தனை நாள் அவன் உயிர் வாழ முடியும்,இல்லை நாம்தான் எத்தனை காலம் உதவி செய்ய முடியும்...?யோசியுங்கள்..பிச்சையிடுவதால் புண்ணியம் சேருமா??தானம்,தருமம் எண்பது இல்லாதவர்களுக்கு செய்வது..அதாவது அவர்களுக்கு அவர்களே ஏற்படுத்திக்கொண்ட அடிப்படை வசதிகள் இருக்கும் பட்சத்தில் அவணுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்து அவனை இன்னும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவது..

குழந்தைக்கு நாம் நம் கையைதான் ஒரு ஊன்றுகோலாக தரவேண்டுமே தவிர நாமே அவர்களை இடுப்பில் உக்கார வைத்துக்கொண்டு போகவேண்டிய இடத்துக்கு நடந்தால் ஊனமான குழந்தையை நாமே உருவாக்குகிறோம் என்றே அர்த்தம்..இல்லை ஒரு சோம்பேறியை உருவாக்குகிறோம் என்றே அர்த்தம்..அதனால் நல்லவனை உருவாக்க உதவலை என்றாலும்,ஒரு சோம்பேறியை உருவாக்காதீர்கள் என்றே கூறுகிறோம்..

மீண்டும் வருவேன்...

இதுவும் கடந்துப் போகும்.

அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்து நடுவராக பொறுப்பேற்றிருக்கும் அன்புதோழி வனிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நடுவர் அவர்களே............ நான் எந்த அணி என்பதை தெரிவிக்கும் முன்பு சமீபத்தில் நான் கண்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நான் தற்போது இருக்கும் திருப்பூரில் 3 மாததிற்கு முன்பு என் பொண்ணோட சில பத்தாத நல்ல ஆடைகளை தூக்கி எறிய மனதில்லாமல் யாருக்காவது கொடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் என் கண்ணில் பட்டவர்கள் நொய்யல் ஆற்றங்கறை ஓரத்தில் நொய்யலில் ஓடும் சாக்கடை தண்ணீரில் ஆனந்தக்குளியலிட்டு, சாலை புழுதியில் புரண்டு, அழுக்கு மக்களாய் இருக்கும் அவர்கள் தான். சரி யென்று ஒரு பெரிய பை நிறைய எடுத்துக்கொண்டு ஹோண்டா ஏவியேட்டரில் கிளம்பினோம் நானும் எங்க பாப்பாவும். அவ்ர்களை நோக்கி தான் செல்கிறோம் என்று உணர்ந்து கொண்ட அவர்கள் வண்டியை நிறுத்தி பையை எடுப்பதற்க்குள் அங்கிருந்த சிறுவர்களே போட்டி போட்டுக்கொண்டு பிடுங்கி எடுத்துக் கொண்டனர். அங்கிருக்கும் பெரியவர்கள் அவர்களை நோகி வந்தனர். சரி அப்படியெல்லாம் நடந்துக்கக்கூடாதுன்னு அந்த சிறுவர்களை கண்டிப்பார்கள் என்று பார்த்தால் அவர்களும் அந்த சிறுவர்களப்போலதான் நடந்துகிட்டான்க.

அங்கிருந்து கிளம்பிய எனக்கு மனசே சரியில்லை. பின்னலாடை ந்கரமான, துணிகளுக்குப் பஞ்சமில்லாத ஊரில் கோடிக்கணக்கில் வரிப்பணம் கிடைக்கும் ஊரில் ஊரின் நடுவில் நாகரிகமே இல்லாத காட்டு வாசிகள் போலத்தான் அவர்கள் வாழ்கின்றனர். எத்தனை எத்தனை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவ்ர்கள் எல்லாம் வெளிநாட்டு நன்கொடைகளுக்காக மட்டுமே செயல்படுகின்றன.

மேலும் ரோட்டோரத்தில், கோவில் வாசலில் உடம்பில் நோய்களோடும் உடல் குறைபாட்டோடும் வயதானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கண்டிப்பாக அவர்களுக்கெல்லாம் நாம் தர்மம் செய்தே ஆகவேண்டு. ஏன் செய்யனும் அப்படீனு கேள்வி எழுப்புபவர்கள் எல்லாம் தன்னுடைய வேலை சீக்கிரம் முடிக்கணும்னு அலுவலகங்களில், கேஸை முடிக்கனும்னு போலிசிடம் லஞ்சம் கொடுக்கும் போது மறுபேச்சில்லாம கொடுப்பாங்க.

கைகால் சுகத்தோட நன்கு படித்து நல்ல சம்பளம் வாங்கக்கூடிய அலுவலர்களே வெக்கம் மானம் சூடு சொரனை இன்னும் பல இல்லாமல் லஞ்சம் என்ற பெயரில் பிச்சை எடுக்கிறாங்க.

நம்ம ஓட்டுகளை வாங்கி நமக்காக சேவை செய்யறேன்ற போர்வையில் எதுவும் செய்யாமல் நம்ம பணத்தையும் திருடி சொத்து செர்க்கிறாங்களே அரசியல் வாதிகள் இவங்க வாழரதும் ஒருவகையில் பிச்சைக்காரப் பிழைப்பு தானே.

ஏ ஸி ரூம் பிச்சை காரங்கன்னா மரியாதை தரோம். நடு ரோடில் இருக்கும் பிச்சைக்காரன் என்றால் முகத்தை சுழிக்கிறோம்.

அவர்களுக்கு சரியான பாதை வகுத்துத்தராத காரணத்தினாலேயே அவர்கள் வாழ்நாள் முழுதும் அந்நிலையிலேயே இருக்கிறார்கள்.

அதிலும் அத்திப் பூத்தார் போல கோவையில் இருக்கும் ஒரு பிச்சைக் காரர் தனது மகனை அரசு பள்ளியில் படுக்க வைத்து முதுகலைப்பட்டமும் பெற வைத்துள்ளார் என்று ஒரு நாளிதழில் படித்தேன். அந்த பைய்யன் படிக்கும் போதே பகுதிநேர வேலை பார்த்து தனது உடல் நலமில்லாத பிச்சை எடுத்து தன்னை காப்பாற்றிய தந்தையை காப்பாற்றினாராம். இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால் எங்கும் வேலை கிடைக்க வில்லையாம். சுயதொழில் செய்யலாம் என்றால் வங்கிக்கடன் கிடைக்க வில்லையாம்.

பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் எல்லாம் வெறும் பெயரளவிலேயே செயல் படுகின்றன.

நான் கண்ட ரோட்டோர வாசிகளும் சும்மா இல்லை. ஃபினாவில் தயாரிப்பதி, மூங்கில் கூடை முடைவது போன்ற வேலைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எங்க வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்த நபருக்கு பழய சாதம் இருந்ததைக் கொடுத்தேன். அப்போது பேச்சு கொடுக்கும் போது தான் தெரிந்தது அவர் பரம்பரை பிச்சைக்காரர் இல்லை. ஒருகாலத்தில் இந்த ஊருக்கு வீட்டை விட்டு ஓடி வந்து ஒரு கம்பெனியில் வேலை செய்து நன்றாக வாழ்ந்தவர். தனக்கென்று குடும்பம் இல்லாதவர். வயது முதுமை, தள்ளாட்டம் காரணமாக நோய் வாய் பட்ட காரணத்தினால் இப்படி பிச்சை எடுக்கிறேன் என்றார்.
மற்றொரு தன்னார்வ அமைப்பு பற்றி கேள்விப் பட்டேன். அவர்கள் தினமும் சாலையோரத்தில் முடியாமல் இருக்கும் ஒருவரை குளிப்பாடி உடை மாற்றி விட்டு உண்ண உணவு கொடுத்து வருகிறார்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கம்பெனிகளில் வேலை பார்க்கும் இளைஞர்கள் சிலர் இப்படி செய்கின்றனர்.

மற்றொரு அமைப்பு தினமும் சாப்பாடு பொட்டலங்களை வண்டியில் வைத்து ரோட்டோரங்களில் நிராதரவாக நோய்வாய் பட்டு முடியாமல் இருப்பவர்களைத் தேடி கண்டு பிடித்து உணவு தருகிறார்கள்.

கண்டிப்பாக முதியவர்கள், நோயால் தளர்ந்தவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யனும்.

நன்றாக இருந்து சிறு குழந்தைகளை காட்டி பிச்சை எடுப்பவர்கள் சட்டத்தால் தண்டிக்கப் பட வேண்டியவர்களே அன்றி ஊக்குவிக்கப் பட வேண்டியவர்கள் அல்ல.

எனக்குத்தெரிந்து ஒரு பெண்மணி தான் அலுவலகம் சென்று வரும் பாதையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஆளுக்கு எடை மெஷின் வாங்கித்தந்து உதவி செய்து அந்த பிச்சைக்காரரின் வாழ்வை மாற்றியுள்ளார்.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
பாத்திரம் அறிந்து பிச்சையிடு
மின்னுவதெல்லாம் பொன்னல்ல

ஏமாற்ருக்காரர்களை தவிர்த்திடுங்க. போலிகளைக்கண்டு ஏமாறாதீங்க வயதானவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உதவிடுக. நீங்கள் செய்யும் உதவி பணமாக மட்டும் அல்ல வேறு எந்த வழியிலாவது செய்யுங்க.

நாம போடுற ஓட்டு கூட ஒரிஜினல் அக்மார்க் முத்திரை பெற்ற சொக்கத்தங்க அரசியல் வாதிக்கா போடுறோம்........? இல்ல ல. நாம அவர்கள் பின்னாடியே போய் அவ்ங்க ஒரிஜினல் முகத்தை கண்டுபிடிக்க ஸ்பை வைக்கிறோமா..........?

இயலாதவனுக்கும் வயதானவர்க்கும் உதவுவதற்க்கும், சின்ன உதவி செய்ய இப்படியா யோசிப்பது. இதெல்லாம் தானம் ங்க. சரியான நபர்க்காக இருக்கனும். அதுதான் முக்கியம்.

அரசாங்கமும் ஏதோ எழுத்தளவில் சட்டங்களை நடைமுறைபடுத்துது.

ஏதோ நம்ம ஊரிலிருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்க மனசு காரங்க செய்யற உதவியால அதாவது உங்க பாஷையில பிச்சை போடுறதால ஏதோ அவங்க வண்டி ஓடுதுங்க. அந்த பிச்சையும் இல்லைனா நிறைய பேரு பசியாலேயும் நோயாலேயும் ரோட்டோரங்களில் இறந்துபோய் அழுகி போய் தான் கிடப்பாங்க. நான்கு நாட்கள் கழித்து நகராட்சி அ மாநகராட்சி குப்பை வண்டில எடுத்துகிட்டு போவாங்க.

என்ன நடுவர் அவர்களே...... இப்ப புரிந்ததா நான் எந்த அணி என்று. ஆமாம். நாம் பிச்சை இடுவதால் சமூகம் வாழ்கிறது..... வாழ்கிறது..... வாழ்கிறது.........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நீங்க தினசரி பிச்சை போடுங்க ஒன்னும் ப்ரச்சனையில்லை..ஒரு நாள் போட மாட்டேன் என்று சொல்லுங்க பாப்போம் என்ன செய்றாங்கன்னு.."ச்சேச்சே இத்தன நாளா போட்டவங்களாச்சே பேசாம போவோம்னு இருப்பாங்கன்னு நெனச்சீங்களா..கண்டிப்பா முனுமுனுவென்று கண்ணை உருட்டிக் கொண்டே இங்க்லீஷ் டிக்ஷனரியால் திட்டிட்டே போவாங்க
ஏங்க இப்ப ஒரு வீட்டு வேலைக்கு ஆளை கெடைக்குதா என்ன??வீட்டு வேலைக்கு அப்படியே வறேன் என்றாலும் ஆயிரதெட்டு கண்டிஷன்...இந்ந நேரத்துக்கு சீரியல் போட்டு தரனும்..வாஷிங் மெஷினில் துணி ஊறவைத்து சுற்ற விட்டு வைக்கனுமாம் அவங்க வந்து அலசி காயபோடுவாங்களாம்..சமீபத்தில் எங்கள் வேலைப்பேன் சொன்னது "இந்த சீமாரால் கூட்டமுடியாது அதை புது வாங்கி தாங்க.."நான் ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால் அது முக்கால் பாகம் கூட தேவாயமல் இருந்தது..அம்மா ரொம்ப அசால்டாக சொன்னாங்க இப்பல்லாம் இவங்க இப்படித் தான்,..குப்பையை போட மாட்டேன்,அந்தப்புறம் விழுந்த மாப்பை எடுத்து வைய்யுங்க நான் எடுக்க மாட்டேன் இல்லாட்டி நாளை துடைக்க மாட்டேன்..இதெல்லாம் தான் அவங்க சொல்லும் சட்டங்கள்..அந்தளவுக்கு அவங்களுக்கு டிமான்ட் ஆகிப் போச்சு..இப்படி சும்மா அலைந்து நோகாமல் பிச்சை கேட்பதற்கு இவங்களுக்கெல்லாம் வீட்டு வேலை பார்க்கலாமே..சரி வேணாம் விடுங்க.
சமீபத்தில் எங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் புல் பிடித்து பறிக்க ஆள் கிடைக்காமல் இருக்கவே இப்படி பிச்சை எடுக்க வந்த சுமார் 35 வயதுள்ள ஒரு பெண்மணியிடம் புல்லை பிடுங்கி தருவீங்களா நான் 100 ரூபாய் தருகிறேன் என்று அம்மா சொன்னார்.புல்லை பிடுங்கி விட்டு 100 ரூபாய் தரமாட்டேன் என்றால் நான் என்ன செய்வது என்றார்...சரி செய்பவர்கள் இருக்கு போலும் என்று நீங்க க்லீன் பண்ணுங்க நான் தருகிறேன் என்றார்..நல்ல உஷாராக க்லீஇன் பண்ண தொடங்கி விட்டு தாமே வந்து இப்ப 100 கொடுங்க என் பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கனும் என்றார்..பார்த்தாலும் கொஞ்சம் விசுவாசமாக தெரியவே காசையும் கொடுத்தோம்...பிறகு ஒரு 30 நிமிடம் வேலை பார்த்திருப்பார் அதன் பிறகு ஆளையே காணோம்...ஒது தான் அவர்களது சுபாவம்..சும்மா இருந்து காசு கிடைத்தே பழகிவிட்டது..உடம்பு வளைவதில்லை உழைக்க தயாராகவும் இல்லை..
சமீபத்தில் கூட்டமாக சுமார் 8 ,9 வயது ஆண் பெண் குழந்தைகள் வந்து பிச்சை கேட்டார்கள்..நான் யார் என்று பார்த்ததும் அதிர்ந்து போய் எங்கிருந்து வற்றீங்க ஸ்கூல் போலையா என்றேன்..எல்லாம் சீருடையில் வந்திருந்தார்கள்..திருட்டு முழி முழித்துக் கொண்டு காசை வாங்காமல் போய் விட்டார்கள்..எல்லாம் பள்ளி விட்டதும் காசுக்காக வீடு வீடாக போகிறார்கள்..அதுகளுக்கு அன்றைக்கு தின்பண்டத்துக்கான காசு ஆச்சு..நான் தர மாட்டேன் என்றாலும் அங்கேயே நின்று கவனித்தேன் மறுப்பேதும் சொல்லாமல் மற்ற வீடுகளில் நோன்புகாலமானதால் சில்லறைகளை கொடுக்க இஅவர்கள் குதூகலத்துடன் சில்லறைகளை எண்ணிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள்...படிக்க போகும் பிள்ளைகளுக்கு பிச்சை எடுக்க கற்றுக் கொடுத்தது இங்கு யார்???நாம் அதானே..எல்லாமே ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளாக தென்பட்டது தான் எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.

”கைகால் சுகத்தோட நன்கு படித்து நல்ல சம்பளம் வாங்கக்கூடிய அலுவலர்களே வெக்கம் மானம் சூடு சொரனை இன்னும் பல இல்லாமல் லஞ்சம் என்ற பெயரில் பிச்சை எடுக்கிறாங்க.”

வெக்கப்பட்டா ஏன்ப்பா பிச்சை எடுக்கப்போறாங்க...அப்படி வெக்கப்படாம இருப்பதால்தானே பிரச்சனையே...

“ஏ ஸி ரூம் பிச்சை காரங்கன்னா மரியாதை தரோம். நடு ரோடில் இருக்கும் பிச்சைக்காரன் என்றால் முகத்தை சுழிக்கிறோம்.”

எங்க எடுத்தாலும் பிச்சை பிச்சைதான்ப்பா..அதனாலதான் பிச்சை போடுவது சமூகத்துக்கு கேடு விளைவிக்குதுன்னு சொல்றேன்..”ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவனே குற்றவாளி”...

“எனக்குத்தெரிந்து ஒரு பெண்மணி தான் அலுவலகம் சென்று வரும் பாதையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஆளுக்கு எடை மெஷின் வாங்கித்தந்து உதவி செய்து அந்த பிச்சைக்காரரின் வாழ்வை மாற்றியுள்ளார். ”

ஆஹா அருமை..உங்கள் வாதத்திலேயே தெரிகிறதே..பிச்சைக்காரணுக்கு உதவி செய்து அவனை மனிதனாக மாற்றவேண்டும் என்று..பிறகேன் பிச்சைக்காரனுக்கு பிச்சைப்போட்டு அவனை பிச்சைக்காரணாகத்தான் வைத்திருப்பேன் என்று வாதாடுகிறீர்கள்...

”பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் எல்லாம் வெறும் பெயரளவிலேயே செயல் படுகின்றன. ”

நீங்க எல்லாம் அவனை அப்படியேத்தான் வைத்திருப்பேன் என்றால் திட்டம் என்ன பண்ணும்..?

மீண்டும் வருகிறேன்....

இதுவும் கடந்துப் போகும்.

நடுவருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

பிச்சை எடுப்பது சரியா, தவறா? தப்புதான்.

ஆனா, இது இல்ல நம்ம தலைப்பு.

பிச்சைக்காரர்கள் ஏமாற்றுக்காரர்களா? நமக்குத் தெரியாது, சிலர் இருக்கலாம்.

ஆனால், இது இல்ல இங்க கேள்வி

பிச்சை எடுப்பது என்பது மனித வாழ்வின் மிக, மிக, மிகக் கீழ்ப்பட்ட ஒரு நிலை.

‘இந்த நிலைமைக்குப் பதிலாக பிச்சை எடுக்கலாம்’

’ஏன் இந்த பிச்சைக்கார புத்தி’

இதெல்லாம் கேட்டிருப்பீங்க. கடை நிலையான வாழ்க்கைதான் பிச்சை எடுப்பது என்பது எல்லோருக்கும் தெரியும்.

திருட்டு, மோசடி, துரோகம் இதெல்லாம் செய்பவர்களிடம் என்ன சொல்றோம்?
‘இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு, பிச்சை எடுத்துப் பொழைக்கலாமே’

இங்கே, சொல்லப்படுகிற அர்த்தம், பிச்சை எடு, பரவாயில்ல, அது கடைத்தரமானதுதான், ஆனா, நீ செய்வதை விட அது பரவாயில்ல.

ஸ்விஸ் பாங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்காங்களா? இது படிக்கறதுக்கு நல்லா இருக்கு. இது மட்டும் நடைமுறையில் சாத்தியம்னா, பேசாம பிச்சைக்காரர்கள் அண்ட் கோ, பிச்சைக்காரர்கள் அண்ட் லிமிடெட் என்று கம்பெனிகள் ஆரம்பிச்சு, வேலைக்கு சேர விருப்பமுள்ளவங்களை(!) சேர்த்து, எல்லோரையும் பணக்காரர்களாக்கி, நாட்டையும் சமுதாயத்தையும் வாழ வச்சுடலாமே!

கன்னிமாராவில் போய் பீர் குடிக்கறாங்களா? இதுவும் கூட நடந்ததாக இருக்கலாம். ஆனா, என்னோட ப்ரொஃபஷன் பிச்சை எடுக்கறதுன்னு கௌரவமாக சொல்லிக்க முடியாது. ஒரு தடவை பீர் குடிக்கலாம். ஆனா, பிச்சைக்காரர்களின் நிலைமை மாறப் போவதில்லை.

இல்லாதவங்கதான் பிச்சை எடுக்கறாங்களா?

இந்தக் கேள்விக்கு ஆமாம்னு பதில் சொல்றதை விட, இயலாதவங்கதான்
பிச்சை எடுக்கறாங்க என்று பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

பிச்சை போடறது அதிக பட்சம் எவ்வளவு? 1 ரூபாய்? 2 ரூபாய்? அதிக பட்சம் பத்து ரூபாய்.

சரி, பிச்சை போடறவங்க எத்தனை பேர்? ரொம்ப ரொம்பக் குறைவு.

அப்புறம் ஏன் பிச்சையிடுகிறோம்? சமுதாயத்தை வளர்க்கிறோம் என்று சொல்கிறோம்?

சமுதாயத்துல பிச்சை எடுக்கறவங்களோட மக்கள் தொகை எவ்வளவு பெர்சண்டேஜ் இருக்கும்? மிக மிகக் குறைவு.

ஆனால் அவங்க புறக்கணிக்கப்பட வேண்டியவங்க இல்ல. கருணையுடன் கவனிக்கப்பட வேண்டியவங்க.

ஏதோ ஒரு வகையில் கைவிடப்பட்டவங்க, உழைக்கவும் பிழைக்கவும் தெரியாதவங்கதான் பிச்சையெடுக்கிறாங்க.

அவங்களுக்கு பிச்சை போட்டால், சமுதாயம் சீரழிந்து விடும் என்று பிச்சை போடாமல் விட்டால், அதன் அடுத்த ஸ்டேஜ் ரொம்ப ஆபத்தானது. இதைப் பற்றி ஏற்கனவே எங்கள் அணியினர் தெள்ளத் தெளிவாக, விளக்கமாக சொல்லிட்டாங்க.

இன்னிக்கு நாம் அரவாணிகளை மூன்றாம் பால் என்றுதான் சொல்லணும் என்று சொல்கிறோம், அவங்களுக்கு ஓட்டுரிமை கொடுங்க என்று கேட்கிறோம். ஏன்? பூமியில் பிறந்த எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உயிரோடு இருக்க வேண்டும், அவங்க பிறப்பும் இருப்பும் மதிக்கப்படணும் என்றுதானே.

அதே போலத்தான் பிச்சைக்காரர்களும். ஒரு பக்கம் பிச்சை எடுக்காதே அது கேவலம் என்று சொல்லித் தரும் நீதி நூல்கள்தான், ஒரு வேளை அப்படி பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கும் உயிர்களைக் கண்டால் இரக்கம் காட்டு
என்றும் சொல்லித் தருகிறது.

எல்லோரையும் எப்போதும் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்பது அல்ல நமது விருப்பம்,

அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு ஆளாகி இருப்பவரிடம் கருணை காட்ட மறுக்காதீர்கள், மறக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.

இதனால் சமுதாயத்துக்கு என்ன நன்மை, சமுதாயத்தை எப்படி வாழ வைக்கிறோம்?

கருணை, சக உயிரிடம் இரங்குதல், வாடிய பயிரைக் கண்டால் வாடுதல் இதெல்லாம் அடிப்படையில் இருக்க வேண்டிய, வளர்க்கப்பட வேண்டிய உணர்வு. இந்த உணர்வு இல்லையெனில், மனிதமும் அங்கே வாடி விடும்.

பிச்சையிடுதல் ஒரு சிறிய செயல், ஒரு சின்ன தொடக்கம். ஒரு நாள் சம்பளத்தை முகம் சுளிக்காமல் புயல் நிவாரண நிதிக்குக் கொடுப்பது, வீட்டுப் பணியாளரின் குழந்தையின் பள்ளிக்கூட ஃபீஸைக் கட்டுவது, பழைய துணிகளைப் போட்டு, பாத்திரம் வாங்காமல், தேவையானவர்களுக்கு உடுத்தக் கொடுப்பது, ரத்த தானத்துக்கான முகாமில் கலந்து கொள்வது என்று வளரும் - இரக்கமும் கருணையும் இணைந்த செயல்களின் விதை.

ஒண்ணாங்கிளாசில் அ, ஆ, சொல்லிக் கொடுத்தாங்க, அதையா இப்பப் படிக்கிறோம், அது தேவையே இல்ல, அதனால் ஒண்ணாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு எல்லாத்தையும் எடுத்துடுங்க என்று சொன்னால் எப்படி இருக்கும்? அது
போலத்தான் பிச்சை இடுவதால் சமுதாயத்தை சீரழிக்கிறோம் என்று சொல்வதும்.

பிச்சைக்காரர்கள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதை நோக்கியே நமது எண்ணமும் செயல்களும் இருக்கட்டும், அதற்காக பிச்சை இட்டு, சமுதாயத்தை சீரழிக்கிறோம் என்று நினைக்கத் தொடங்கினால், அங்கே
கருணையும் இரக்கமும் கேள்விக்குறிகளாகி, சமுதாயத்தை பாதிக்கவே செய்யும்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்