பட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?

அன்பு உள்ளம் கொண்ட அறுசுவை நட்புகளுக்காக ஒரு தலைப்பு:

“பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?”

தலைப்பை தந்த தோழி “இஷானி”கு மிக்க நன்றி :)

தேவையான டாப்பிக்னு தோனுச்சு... உங்களுக்கும் வாதிட பிடிக்கும்னு நம்பிக்கையில் தேர்வு செய்துட்டேன் ;) வாங்க வாங்க... எல்லாரும் வந்து வாதங்களை வைங்க.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

அன்பு நடுவர் அவர்களுக்கு இனிய காலை வணக்கம். எப்படி இருக்கீங்க....? காய்ச்சல் சரி ஆகிடுச்சா....? முடிய வில்லை போல் தோன்றினால் தயங்காமல் ரெஸ்ட் எடுங்கள். தாமதத்தை எண்ணி வருந்த வேண்டாம். டேக் கேர்.

நடுவர் அவர்களே..... பிச்சை என்றால் கோவில் வாசலிலோ, தெருவிலோ, வீடுவீடாக சென்று கேட்கும் போது அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றவாறு ஐம்பது பைசாவோ ஒரு ரூபாயோ கொடுத்துவிட்டு செல்வது மட்டுமல்ல......... வெயிலில் காய்ந்து கிடக்கும் முடியாத நபர்களுக்கு நம் வீட்டில் எவ்வளவோ நாளாக குப்பையாகக் கிடக்கும் காலி பாட்டிலில் தண்ணீர் கொடுக்கலாம். வீட்டுப் பரன் மேல் கிடக்கும் பிஞ்சு போன குடையை கொடுக்கலாம். வயது முதிர்ச்சியால் தள்ளாமையில் தவங்கி இருக்கும் பெண்களுக்கு நம் பழய உடைகளைக் கொடுக்கலாம். கிழிந்துபோன ஜமுக்காளம் போர்வை களைக் கிழித்து கரித்துனியாக பயன்படுத்தலாமேனு கஞ்சத்தனம் பண்ணாமல் "சே....... அந்த ரோட்டோரமாய் முடியாமல் இருக்கும் முதியவருக்குக் கொடுக்கலாமே" என்று தர்ம சிந்தனையோடு கொடுக்கலாம்.

மேற் சொன்னவை எல்லாமே தர்மம் தான். ஐம்பது பைசா போட்டாலும் தர்மம் தான். நாமதான் ஐம்பது பைசாவோடு நிறுத்திக் கொள்கிறோம்.

"பொருளாக கொடுத்தால் தர்மம். காசு போட்டால் பிச்சை" என்ற எண்ணம் அல்லவா மக்கள் மனதில் வேரூன்றி விட்டது.

தன்னலம் பாராமல் பிரதிபலன் எதிபார்க்காமல் செய்யும் எந்த ஒரு விஷயமுமே தர்மம் தான்.

தர்மம் செய்வதால் நம் மனதில் இரக்க சிந்தனையும் அன்பும் பெருகுகின்றது.

கண்முன்னே வாடும் வரியவருக்கு உதவிய திருப்தி ஏற்படுகிறது. இரக்க, தர்ம, அன்பு எண்ணங்கள் மனதில் குடிகொள்வதால் நல்ல எண்ணங்கள் ஏற்படுகிறது. நல்ல எண்ணங்கள் மனதில் வந்தாலே நம்மை நல்ல செயல்களை செய்ய தூண்டுகிறது. மனம் தெளிவாகிறது.... திருப்தி அடைகிறது....

இப்படி எல்லாமே நல்ல விஷயங்களுக்கு தூண்டுகோலாய் இருப்பதால் கண்டிப்பாக ஆரோகியமான சமுதாயத்தை உருவாக்கிடும்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

தேன்மொழி...

//இவர் இரங்குவார் என மனதிற்குள் எண்ணி கையேந்தியிருக்கலாம்... அந்த நம்பிக்கைத் தகரும்போது திட்டியிருக்கலாம்.// - அப்படின்னா திட்டலாம்னு சொல்றீங்களா??? :( ஒத்துக்க மாட்டேன்.

//எமதணியினர் சொன்னதுபோல லஞ்சத்தை எதில் சேர்ப்பீர்கள்? எனவே பிச்சையிடமாட்டேன் என முடிவெடுக்காமல் லஞ்சம் கொடுப்பதில்லை என முடிவெடுங்கள்..அதுதான் சமுதாயத்தை வாழ வைக்கும்.
// - இதை ஒத்துக்குவேன். :)

//வாங்கிக்கொண்ட வயதானவரின் முகத்தில் தெரிந்த சந்தோஷம்..அப்பப்பா. அவர் சந்தோஷத்தைப் பார்த்து நான் பட்டேனே அந்த சந்தோஷம் அது எத்தனை சினிமா பார்த்தாலும் எனக்கு கிடைக்காது.// - இந்த அனுபவம் எனக்கும் உண்டு. :)

அஸ்வினி...

//முதலில் பிச்சை எண்பது வேறு உதவி எண்பது வேறு என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்// - ம்ம்... கரக்ட்டு... பாயிண்ட்டுக்கு வந்துட்டீங்க.

//தான் பெற்ற பிள்ளைக்கு சோறிட முடியாத போது எதற்கு பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள் எப்படியோ இருக்கிற மகராசன நம்பியா?// - நியாயம்!!! பிள்ளையை காட்டி பிச்சை எடுக்க தானே???

ப்ரியா அரசு...

//விதிமீறலுக்கு வருந்துகிறேன். சாரி. கொஞ்சம் உணர்ச்சிவசபட்டுட்டேன். // - அடடா பரவாயில்லை ப்ரியா.. தெரிந்தே யாரும் தப்பு பண்றதில்லை :)

//புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப் பயணிகளை மொய்த்துப் பாடுபடுத்தும் பிச்சைக் காரர்கள் இருக்கிறார்கள். அவர்களை யெல்லாம் தண்டிப்பது காவல், சட்டத்துறையின் பணி. // - அப்படின்னா அந்த மாதிரி பிச்சை தப்புன்னு சொல்றீங்களா??? ஆனா இன்னைக்கு 95% இவங்க தானே இருக்காங்க???

//"பொருளாக கொடுத்தால் தர்மம். காசு போட்டால் பிச்சை" என்ற எண்ணம் அல்லவா மக்கள் மனதில் வேரூன்றி விட்டது. // - நல்ல பாயிண்ட்டை கொடுத்தீங்க... கையை கொடுங்க முதல்ல. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே... தாமதமான பதிவுகளுக்கு மன்னிக்கவும். உடல் நலம் இன்று பரவாயில்லை. எழுந்து நடமாடும் அளவு தேரிட்டேன். விசாரித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி :) இனி தான் தீர்ப்பை யோசிக்கனும்... எல்லார் வாதத்தையும் படிச்சு ரொம்பவே குழம்பி இருந்தேன்... கடைசியா கொஞ்சம் தெளிவும் கிடைச்சிருக்கு... வரேன் தீர்ப்போடு. காத்திருந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு மனிதனை சோம்பேறியாக்கி,முயலாதவனாக்கி,தன்னம்பிக்கையை இழக்க செய்து,பொய் சொல்ல தூண்டி,நடிக்க வைத்து,பிற மனிதர்களை கிட்நாப் பண்ணி துன்புறுத்த வைத்து,அவனுடய சுய மரியாதையை அழித்து,சுய சிந்தனையை சிதைத்து,நாளைய வாழ்வை கேள்விகுறியாக்கி,நடைப்பிணமாக வாழவைக்கும் பிச்சையிடுதல் சமுதாயம் முன்னேற வழிவகுக்குமா?
ஒரு பிச்சையோ,தானமோ,தர்ம்மோ,உதவியோ உறியோர்க்கு,உரிய இடத்தில்,உரிய நேரத்தில்,உரிய முறையில் அரங்கேறினால்தான் அதற்குரிய உண்மையான பலன் நமக்கும்,அவர்களுக்கும் போய் சேரும்...பிச்சையை போட்டுட்டு அத சரியான ஆளுக்குத்தான் போட்டோமா இல்லையான்னு எதுக்கு குழப்பம்?அதுக்குன்னே இருக்கிற இடத்துல உங்க இரக்க குணத்தை காமிக்கலாமே..இல்லை ஒருவரை பார்த்தவுடந்தான் உங்களுக்கு இரக்க குணம் வருமென்றால் அதற்கு அவர்களுக்கு பிச்சையிட்டு ஒரு நாள் பசியை தீர்ப்பதற்கு பதில் அந்த காசோடு இன்னும் கொஞ்சம் போட்டு அவர்களை கொண்டு போய் அநாதை ஆசிரம்ம்,ஆதரவற்றோர் இல்லம்,ஊனமுற்றோர் இல்லம்,குழந்தைகள் நல காப்பகம் இப்படி ஏதேணும் ஒன்றில் சேர்க்கலாமே..ஒரு வேளைக்கு கொடுப்பதால் அவணும் முன்னேற மாட்டான்,சமுதாயமும் முன்னேறாது..அதையே கொஞ்சம் தொலைநோக்கு பார்வையுடன் அவர்களின் கேள்விகுறியான வாழ்விற்கு ஒரு அஸ்திவாரம் விதைத்தால்,அவணுக்கும் வெளிச்சம் பிறக்கும்,சமுதாயமும் பல இன்னல்கள்,இடையூறுகளில் இருந்து முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும்...

ஒரு சமுதாயம் முன்னேறியுள்ளதா எண்பதில் அந்த நாட்டில் உள்ள பிச்சைக்கார்ர்களுக்கும் பங்கிருக்கிறது நடுவரே!!UNO அதையும்தானே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்..பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ளதால்தானோ என்னவோ நம் நாடு நம் கொள்ளுதாத்தா காலத்தில் இருந்து நம் எள்ளு பேரன் காலம் வரை வளரும் நாடாகவே உள்ளது...அப்படியிருக்கையில் சமுதாயம் எப்படி வாழும்?

இருப்பதிலேயே இழிவான தொழில் பிச்சை எண்பதால்தான் நம் பிள்ளைகள் பாக்கெட் மணிக்காக பிச்சை எடுக்க போகவில்லை,நாமளும் அணுப்பவில்லை.இப்படியான ஒரு இழிவான தொழிலால் சமூகம் வளருமா?இல்லை அதற்கு துனைப்புரியும் நாம்தான் சமூகத்தை வளர்க்க போறோமா?
இன்னும் மிச்சம் உள்ளது..வருகிறேன்...

இதுவும் கடந்துப் போகும்.

ஒரு திருடனை பார்த்துதானே சொல்கிறோம் பிச்சை எடுத்தாவது பொழைச்சிருக்கலாமேன்னு,சாதரணமாக பொழப்பு நட்த்துப்பவர்களிடம் இல்லையே...பிச்சை எடுக்கிறவனைப் பார்த்து சொல்வோம்,ஒரு மூட்டை தூக்கியாவது பொழப்ப நட்த்தலாமே என்று..பேசிக்கிட்டே இருந்தா வேலை ஆகாது,என்ன செய்யணும்னு யோசிச்சாதான் எதுவுமே நடக்கும்...
எத்தனையோ கிட் நாப்பிங்,கொலை,கண்ணப்பிடுங்குவது,கிட்னிய விற்பது,இன்னும் பெண் பிள்ளைகள் படும்பாடு,நாடு விட்டு நாடு கட்த்துவது,சூடுப்போடுவதுன்னு நடந்துக்கிட்டு இருக்கறத யாரும் மறக்க முடியாது,மறுக்கமுடியாது,இப்படிப்பட்ட நற்செயல்களுக்கு காரணம் ஈஸியா,இனாமா,வலியில்லாம,வேர்வைசிந்தாம கிடைக்கும் பணமே காரணம்...

கொடுப்பவன் இருப்பதால்தானே வாங்குகிறவன் இருக்கான்...அதாங்க ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்துக்கிட்டுதான் இருப்பான்..இது பிச்சை முதல் லஞ்சம் வரை அடங்கும்..அதற்கு வழி எரியரத புடுங்கினா கொதிக்கறது தானே அடங்கும்..அதனால பிச்சையிடுவதை நிறுத்தினா..பிச்சை எடுக்கிறவங்களும் மாறுவாங்க சமூகமும் மாறும்...மாறுவதற்கு துனைபோகலைன்னாலும்,அது மாறாம இருக்க கூட்டணி சேராதீங்கன்னுதான் சொல்றோம்...

சாரி,நேரம் முடிவடைந்து விட்டதா?எனக்கு கொஞ்சம் கண்ணுல ப்ராப்ளம் இருந்ததால என்னால நேரத்திற்கு பதிவிட முடியலை..இதுவே அவர்க்கிட்ட திட்டு வாங்கிகிட்டு பதிவிடறேன்...நடுவரும் மற்ற அனைவரும் மண்ணிக்கவும்...

இதுவும் கடந்துப் போகும்.

பிச்சைன்னு சொல்லி ஆரம்பிச்சுட்டேன்... ஆனா எதெல்லாம் பிச்சைன்னு குழம்பி போக வேண்டிய நிலையை கொண்டு வந்துட்டீங்க எல்லாரும் சேர்ந்து. :) ஆனா குழப்பம் வந்தா தானே தெளிவு கிடைக்கும்... அதனால் வாதத்தால் குழப்பிய அனைவருக்கும் பெரிய நன்றி.

பிச்சைன்னு சொன்னதும் என்ன என்ன நினைவு வரும்???

1. பாண்டி பஜார் நடுவே அத்தனை ட்ராஃபிக்லையும் பயம் இல்லாம சக்கரம் வைத்த சின்ன மர ஸ்டூல் போல ஒன்றில் உட்கார்ந்து கொண்டு கையை வைத்து ரோட்டில் உருட்டி கொண்டே பிச்சை எடுக்கும் காலில்லாத ஒருவர் “அய்யா... இரண்டு காலும் இல்லாதவன்யா... எதாச்சும் தர்மம் பண்ணுங்க சாமி...”.

2. தேனாம்பேட்டை சிக்னலில் முதுகில் கட்டிய கை பிள்ளையோடு அழுக்காக ஒரு இளம் பெண் “அம்மா... பிள்ளைக்கு பால் வாங்கனும்... எதாச்சும் தர்மம் பண்ணுங்கம்மா...”.

3. ஷாப்பிங் முடித்து வெளியே வந்தால் “அக்கா பசிக்குதுக்கா... 5 ரூபா கொடுக்கா”னு கேட்கும் சிறு பிள்ளைகள்.

4. நல்ல உடையோடு கையில் ஒரு ஃபைலோடு “சார்... ஹெல்ப் பண்ணுங்க சாரி... என் பிள்ளையை படிக்க வைக்க வசதி இல்லை... உங்களால் முடிஞ்ச உதவியை செய்யுங்க சார்... அவன் ஃபைல்ஸ் எல்லாம் பாருங்க... 80 மார்க் வாங்கி இருக்கான்”னு வாசலில் 3வது வருடம் எஞ்சினியரிங் படிக்கும் பையனுக்காக 2 மாதத்துக்கு ஒரு முறை வருடம் தவறாமல் வந்து கதவை தட்டும் நபர். எத்தனை வருஷமா பிள்ளை படிக்கிறானோ 80 மார்க் வாங்கி ஃபெயிலாகி ஃபெயிலாகி!!!

5. ”அம்மா.... பொண்ணுக்கு தாளி செய்யனும்... தோஷம் போக பிச்சை எடுத்து செய்யுறதா வேண்டிகிட்டேன்... உங்களால் முடிஞ்சது... 50 ஓ 100 ஓ... உங்க விருப்பம்... “னு மஞ்சள் ஆடையோடு கையில் சொம்புக்கு மஞ்சள் பூசி ஒரு நடுத்தர வயது பெண். கேட்கும் போதே லிமிட்டும் சொல்லிடுவாங்க... “குறைஞ்சது 50”னு. இந்த அம்மாக்கு எத்தனை பொண்ணோ எத்தனை கல்யாணமோ... வருஷா வருஷம் இவங்களை பார்க்கலாம்.

6. “அம்மா... தாயே... தர்மம் பண்ணுங்கம்மா... நல்லா இருப்ப...”னு வெய்யிலில் அலயும் கஷ்டம் கூட இல்லாம நிழலில் கோவில் வாசலில் குளு குளுன்னு உட்கார்ந்த இடத்தில் உள்ள சாமிகிட்ட பொலம்பிட்டு வருபவர்கள், வெளிய இருக்கும் இவனுக்கு போட்டா இவனாவது நம்மை நல்லா இருன்னு வாழ்த்த மாட்டானா... அது பளிக்காதான்னு சின்ன ஆசையோட இறைவன் முன் இல்லை என சொல்ல மனம் வராமல் 1 ரூபாயை போட்டுட்டு போகும் மக்களை நம்பி சிலர்.

7. ட்ராஃபிக்கில் நிக்கும் வண்டியின் கண்ணாடியை ஓனரை கேட்காமலே துடைத்துவிட்டு “சார்... எதாவது கொடுங்க சார்...”னு கேட்கும் சின்ன பிள்ளைகள்.

8. கண் தெரியாத வயதானவரை அழைத்து கொண்டு கையேந்தும் பிள்ளை.

9. வயிற்றை சாய்த்து கொண்டு “அக்கா... பசிக்குதுக்கா...”னு நிக்கும் வயிற்றுபிள்ளைதாச்சி.

10. ”நாங்க மொத்தம் 10 பேர் வந்திருக்கோம்”னு சொன்னதும் கல்லா பெட்டியில் இருந்து 100 ரூபாய் எடுத்து கொடுக்கும் கடைக்காரர் “இவங்களுக்கு தலைக்கு 10 ரூபாய்... எப்ப வந்தாலும் கொடுத்தே ஆகனும்”னு புலம்புவதை கண்டுக்காம கையில் உள்ள காசை எண்ணி கொண்டு குதித்து ஓடும் அரவாணிகள்.

11. ட்ரெயினில் பிச்சை எடுக்கும் அரவானிகள்... இல்லை என்றால் கொமட்டில் குத்திட்டு நம்மை அசிங்கமா திட்டிட்டு போவது வழக்கம் தானே.

அடுக்க அடுக்க குறையல பட்டியல்.... எத்தனை வகையான மக்கள்... எத்தனை வகையான பிச்சை!!!

நீங்க சொன்ன ஆடை கொடுப்பது, சாப்பாடு வாங்கி கொடுப்பது இதெல்லாம் பிச்சை லிஸ்ட்ல வரலயே... ஏன்னு கேட்கறீங்களா???

பிச்சை என்பது நம்மிடம் ஒருவர் கேட்டு வாங்குவது... தானம் தர்மம் என்பதெல்லாம் நாமாக தேடி போய் செய்வதுன்னு நான் நினைக்கிறேன். உண்மையில் இந்த நாட்டில், உலகில் உதவி தேவைப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க... ஆனா அவ்ங்க எல்லாம் வீட்டு வாசலிலும் கடை வீதியிலும் பிச்சை எடுக்கிறார்களா??? இல்லையே!!! அப்படி எடுத்தா இந்தியாவில் 25% பிச்சைகாரகள் தான் இருப்பாங்க. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் பிச்சை எடுப்பதானால் முதியோர் இல்லம் எதற்கு? கண் பார்வை இல்லாதவர் எல்லாம் பிச்சை தான் ஒரே வழி என்றால் அவர்களுக்கு மருவாழ்வு மையம் எதுக்கு? அரவாணிகள் எல்லாம் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்றால் ரோஸ் போன்ற டிவி பிரபலங்கள் உருவானது எப்படி??

யோசிங்க... சக்தி மசாலா கம்பெனி நிறைய உடல் ஊனமுற்றவர்களுக்கு வேலை கொடுத்து வைத்திருக்காங்க. அங்கே போய் தன்னால் முடிந்தவரை உழைக்கும் அவர்களை பார்த்தால் ரோட்டில் பிச்சை எடுப்பவர்கள் மேல் கோபம் வராதா?? வரும்!!!

இங்கே பலரும் சொன்னது போல் சிலரை பார்க்கும் போது மனம் தாங்காமல் உதவி செய்ய தோன்றும்... உண்மை!!! ஆனா இதையே தனக்கு சாதகமா பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் குழந்தைகளை கடத்தி கொண்டு போய் கண், கால், கை எடுத்து பிச்சை எடுக்க வைக்கிறதே!!! இதையே சாதகமாக்கி கைபிள்ளைகளை கடத்தி பிள்ளையை காட்டி பிச்சை எடுக்க இருக்கும் பெண்களிடம் விற்பனை செய்கிறதே!!! படிக்க வேண்டிய வயதில் பிள்லையை அரசு பள்ளிக்கு கூட அனுப்பாமல் அவர்களை பார்த்தால் தான் 4 காசு வரும்னு பிச்சை எடுக்க வைக்கிறார்களே!!! அடடா... நம் இரக்க சுபாவம் இன்னொருவர் வாழ்க்கையை அழிக்கிறதே!!! இது சரியா?? இது தான் தர்மமா?? இல்லவே இல்லை. இன்று பிச்சை என்பது பிசினஸ் ஆயிடுச்சு... இதையே தொழிலா செய்து காசு பார்க்கிறது ஒரு கும்பல். இது எப்படி நாட்டை முன்னுக்கு கொண்டு வரும்?

எந்த டேக்ஸும் கட்டாம அடுத்தவன் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வாங்கி சாப்பிட்டு நிம்மதியா சுற்றி திரியும் இந்த வகை பிச்சை என்றும் நம் நாட்டை வாழ வைக்காது. இது போல் உழைக்க தெரியாத சோம்பேரிகளால் நம் நாடும் அவனை போலவே அடுத்த நாட்டிடம் பிச்சை எடுக்கும், கை ஏந்தும். வேண்டாம்!!! வளர்காதீர்கள் இவர்களை. இவர்களால் நம் சமூகமும் நாடும் சீரழியவே செய்கிறது... இவர்களுக்கு பிச்சையிடுவதால் நாமும் சமூகத்தை சீரழிக்கிறோம்!!!

ஒரு உதவி:

1. இவர்களுக்கு போடும் காசை விடுத்து வயதான காலத்திலும் வீட்டில் முடங்கி கிடக்காமல், பிச்சை எடுக்காமல் உழைக்க வேண்டும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என கடை வாசலில் காவலுக்கு நிற்கிறானே வயதான செகியூரிட்டி அவனுக்கு 5 ரூபாய் கொடுங்க... பாவம் ஒரு குடும்பம் மகிழும்.

2. ஹோட்டலில் சாப்பிடும் போது எச்சில் பட்ட டேபிலை அருவருப்பில்லாமல் தொடைக்கிறானே சிறுவன்... அவனுக்கு கொடுங்க 5 ரூபாய்... உதவியாய் இருக்கும்.

3. தெருவில் கிடக்கும் குப்பையை சுத்தம் செய்து அழுக்கு துணியோடு சுற்றும் ஊழியனுக்கு கொடுங்க 10 ரூபாய்.

4. தன் நிலை என்ன என்றே புரியாமல் பித்து பிடித்து அலைகிறதே சில உயிர்கள்... அவர்களை காப்பகத்தில் சேர்த்து உடைகள் வாங்கி கொடுங்கள்.

5. முதியோர்கள், குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு முடிந்த போது உணவோ, உடையோ, மருத்துவ செலவோ கொடுங்கள்.

6. ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பு செலவை செய்யுங்கள். அவனால் சமூகமே வாழும்.

தர்மம் செய்யுங்க... ஆனா அதை சரியான இடத்தில் சரியான ஆளுக்கு செய்யுங்க... இன்று பிச்சை என்று சுற்றுபவர்களுக்கு பிச்சையிட்டு நாட்டை பிச்சை எடுக்க விட்டுடாதீங்க.

தீர்ப்பு எல்லாருடைய வாதத்தையும் படித்து அலசி ஆராய்ந்து நடுவரின் ஆழ் மனதில் சரி என்று பட்ட கருத்தை முன் வைத்தது. தவறேதும் இருப்பின் மன்னியுங்கள். வாய்ப்புக்கு நன்றிகள் பல. பங்கு பெற்ர தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி :) வாதங்கள் எல்லாம் அருமை, தெளிவு!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மன்னியுங்கள்... நீங்க இன்னைக்கு வாதத்தோடு வருவீங்கன்னு நினைக்கல நான்... இவ்வளவு நேரம் யோசிச்சு தீர்ப்பை தட்டிகிட்டு இருந்தேன், பதிவை போட்டதும் பார்த்தா உங்க பதிவு. மன்னியுங்கள் அஸ்வினி. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரான தீர்ப்பு வனிதா...நான் கலந்துகொள்ள நேரம் ஒத்துவரவில்லை..வாழ்த்துக்கள்..தர்மம் செய்வதை சரியான இடத்தில், சரியான முறையில் செய்ய வலியுறுத்தி தாங்கள் கொடுத்த தீர்ப்பு அருமை!

என்ன வனி?மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு..எனக்கு கொஞ்சம் முடியலை..அதனாலதான் லேட்டு அதுவும் பட்டிதீர்ப்புன்னு எங்க வீட்டுக்காரர் படிச்சு பார்த்துட்டு சொன்னதால நீங்க வர நாளாகும்னு கொஞ்சம் அசால்டா இருந்தததால அப்பப்ப டைப் பண்ணி வச்சிருந்ததையும்,இன்னைக்கு கொஞ்சமும் டைப் பண்ணி அவசரமா அணுப்பிட்டேன்..அதில எதுவும் பிழையா இருக்குமோன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்..

எப்படி இருந்தாலும் தீர்ப்பை நல்ல படியாக உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் வழங்கியமைக்கு என் சந்தோஷம் கலந்த நன்றிகள்...

தீர்ப்பு கடைசியில என்னன்னு கரெக்டா ஆனியடிச்ச மாதிரி சொல்லுங்கப்பா...

இதுவும் கடந்துப் போகும்.

வனிதா,
நல்ல தீர்ப்பு.உடல் நல குறைவையும் பொருட்படுத்தாமல்,பட்டியை அழகா முடிச்சுட்டீங்க,பாராட்டுக்கள்.தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பாயிண்ட்டும் அருமை.தெளிவான தீர்ப்பு வழங்கிய நடுவருக்கு மறுபடியும் எனது வாழ்த்துக்கள்.

பட்டியில் கலந்து கொண்ட அனைத்து தோழிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்