பட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?

அன்பு உள்ளம் கொண்ட அறுசுவை நட்புகளுக்காக ஒரு தலைப்பு:

“பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?”

தலைப்பை தந்த தோழி “இஷானி”கு மிக்க நன்றி :)

தேவையான டாப்பிக்னு தோனுச்சு... உங்களுக்கும் வாதிட பிடிக்கும்னு நம்பிக்கையில் தேர்வு செய்துட்டேன் ;) வாங்க வாங்க... எல்லாரும் வந்து வாதங்களை வைங்க.

வழக்கமான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் உண்டு... கூடவே அறுசுவையின் பொதுவான மன்ற விதிமுறைகளையும் பொருந்தும்.

குறிப்பாக...

1. பெயர் சொல்லி வாதிட கூடாது.
2. நாகரீக பேச்சு அவசியம்.
3. எந்த ஜாதி, மத, அரசியலும் கலக்க கூடாது.

சாரி...

””தீர்ப்பு கடைசியில என்னன்னு கரெக்டா ஆனியடிச்ச மாதிரி சொல்லுங்கப்பா...
””

தப்பு நடந்துப்போச்சு...

“தீர்ப்பு கடைசியில என்னன்னு கரெக்டா ஆனியடிச்ச மாதிரி சொல்லிட்டீங்கப்பா...

அப்பா தமிழ்ல ஒரு வார்த்தை விட்டா,சேர்த்தா அந்த வார்த்தியின் அர்த்தமே மாறி போயிடுதுடா சாமி..மன்னிச்சுக்குங்க..

ரொம்ப நன்றி..

இதுவும் கடந்துப் போகும்.

அழகான தீர்ப்பு..வாழ்த்துக்கள்..வளவல கொலகொலனு இல்லாம வேண்டியது இருக்கு :>)
மனதில் பட்ட கருத்தை எதார்த்தமா நச்சுனு சொல்லிட்டிங்க..
உடல் நலத்தை கவனிச்சுக்கோங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவர் அவர்களுக்கு இனிய காலை வணக்கம். அருமையான , சரியான, எதார்த்தமான தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்.

நேற்று எங்க பாப்பாவை ப்ளேஸ்கூலில் விட என் கணவர் சென்றிருந்தார். பாப்பாவை இறக்கிவிட்டு பையை எடுத்து அவளிடம் கொடுத்து அவள் தவறவிட்ட செப்பலை எடுத்து போட வைக்கும் முயற்சியில் இருக்கும் போது ஒரு பெண் இரண்டு மாத்திரைகளைக்காட்டி இந்த மாத்திரை சாப்பிட சாப்பாடு வாங்கணும் காசு தா அப்படீனு நச்சரித்துள்ளார். பாப்பா ஒருபக்கம் செப்பலை போடாமல் பையை வாங்காமல் விளையாட்டு காட்ட இந்த பக்கம் அந்தம்மா காசு கொடுனு நச்சரிக்க இவர் சத்தமா அந்தம்மாவை கொஞ்சம் பொறுமையா இரு என்று சொன்னத்து தான் தாமதம். உடனே நம்ம தளிகா சொன்னதை போலவே அந்தம்ம கண்ணை உருட்டி மிரட்டுவதை போல கோபமாக முனுமுனு என்று திட்டிகிட்டே போச்சாம். இரக்க குணமுள்ள என்னவருக்கு ஆஃபிஸ் கிளம்பிச்செல்லும் அவசர வேளையில் காலையிலேயே இப்படி இவங்ககிட்ட திட்டுவாங்கிட்டோமேனு கவலைபட்டுகிட்டே கிளம்பிச்சென்றார்.

கண்டிப்பா இதுபோன்றவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவில்லாமல் போயிடுச்சு தான். சரியான தீர்ப்பு. பிச்சையிடுவதால் அவர்களைத்தட்டிக் கொடுக்குறோமே தவிர திருந்திவாழ விடாமல் செய்கிறோம் என்பதே உண்மை.

இதுபோன்றவர்களைக் கருத்தில் கொண்டு வயதான முதியவர்கள் முடியாமல் இருப்பவர்களுக்கு தர்மம் செய்வதை ஒருகாலும் நிறுத்திவிடாதீர்கள்.

சரியான முறையில் தீர்ப்பை தந்ததற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வனிதா நல்லதொரு தீருப்பு..எனக்கும் எப்படி பார்த்தாலும் சரி பிச்சை என்ற ஒன்று கூடவே கூடாது என்று தான் சொல்ல முடியும்..நான் கடவுள் பார்த்தோம் உச் கொட்டினோம்..எதனால் அந்த அவலநிலை..பிச்சை கொடுக்கப் போய் தான் அம்மாதிரி கொடுமைகள் நடக்கிறது.
சிறு வயதில் என் தத்தா நோன்பு காலத்தில் ஒரு பானை நிறைய சில்லறைகளை சேமிப்பார்..பின்பு பிச்சைகாரர்களுக்கு கொடுப்பார்..அதை கொடுப்பதில் எனக்கு அவ்வளவு ஆனந்தம்..கேட்டில் டங் டங் கேட்டால் ஓடுவேன்"வல்லிப்பா சகாத்..கொடுக்கவா??"என்று ஓடுவேன்..இப்படி ஒருமுறை கதவை திறந்தால் எல்லாம் கேட்டை திறந்து உள்ளே ஒரு 20 பேர் நிற்கிறார்கள்..திரும்ப உள்ளே ஓடி போய் நிறைய சில்லறைகளை அள்ளி வந்து எல்லாருக்கும் இரண்டு இரண்டு ரூபாய் கொடுக்க சொன்னார்...பார்த்தால் கூட்டத்தில் சற்று முன் வந்து வாங்கிய அதே முகங்கள்..நான் பெரிய பிச்சை போடும் பெரிய மனுஷியாக இல்லை அவர்கள் இப்போ தான் வந்தார்கள் அவர்களுக்கு கொடுக்க கூடாது என்று முந்திக் கொண்டு நீட்டிய கைகளில் புது கைய்யை தேடி பிடித்து போட என்னை தள்ளிக் கொண்டு முட்டி மோதி வீட்டு கதவு வரை வந்து விட்டார்கள்..எந்த பிசாசோ தெரியலை டமால் என்று கைய்யில் ஒரு அடி விழுந்தது..நான் ஆஹ் என்று கத்திக் கொண்டு ஓடி சில்லறைகளை தாத்தாவிடம் கொடுத்து விட்டு தேம்பினேன்..அன்று நிறுத்தியாச்சு சில்லறை பிச்சையை..ஹிஹீ

ராதா பாலு... மிக்க நன்றி. அடுத்த பட்டியில் அவசியம் கலந்துக்கங்க :)

அஸ்வினி... நல்லது... புரிஞ்சுடுச்சா!!! என்னடா மீண்டும் குழப்பமான்னு கொஞ்சம் பயந்துட்டேன்!!! ;) மிக்க நன்றி... இனி வரும் பட்டியிலும் கலந்து கலக்குங்க.

ஹர்ஷா... மிக்க நன்றி. இந்த தாமதத்துக்கே மனசு கேட்கல... என்னடா இப்படி சொதப்பிடுச்சேன்னு!!! அருமையான வாதங்கள் உங்களுடையது. எங்க தான் பாயிண்ட் பிடிக்கறீங்கன்னு தெரியல!!! கலக்குங்க தொடர்ந்து எல்லா பட்டியிலும்.

ரம்யா... மிக்க நன்றி. ஆனாலும் ரெகுலரா பட்டியில் பார்க்க முடியாம இருப்பது சற்று வருத்தமே... உங்க வேலை எல்லாம் முடிஞ்சு விரைவில் வருவீங்கன்னு காத்திருக்கோம். :)

ப்ரியா அரசு... மிக்க நன்றி. அவர் திட்டு வாங்கினதால் தானே தீர்ப்பு சரின்னு தோனுச்சு ;) நான் தப்பிச்சேன். ஹிஹிஹீ. அழகான வாதங்களோடு வந்தீங்க... தொடர்ந்து கலந்துக்கங்க எல்லா பட்டியிலும்.

தளிகா... மிக்க நன்றி. இந்த பட்டியில் உங்க வாதங்களை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி. என்ன அடி எல்லாம் வாங்கினீங்களா??? அச்சச்சோ... சில்லறைக்கே அடின்னா ரூபாய் நோட்டா போட்டிருந்தா என்ன ஆயிருக்கும்னு நினைச்சு பாருங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே அதனுடன் பேரம் பேசாமல் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கலாம்னு நினைக்கிரேன் உங்கள் தீர்ப்பு சிந்திக்க வைத்துள்ளது

அருமையான தீர்ப்பு.
நல்ல சமுதாயம் உருவாக சோம்பேறிகளை ஒழித்தே ஆக வேண்டும். நிச்சயம் தீர்ப்பை படித்த அனைவருக்கும் பிச்சையிடத் தோன்றினால் உங்கள் தீர்ப்பு மனதில் வரும்... இது சரிதானா? செய்யலாமா? என்று.

கேட்கிறவங்களுக்கு கொடுக்கப்படாது... இதுதானே சொல்லுறீங்க... சும்மா காமடி...வனியைப் பண்ணலன்னா வேற யாரைப் பண்ண முடியும்.

உடல் நிலை சரியாயிற்றா?

நடுவரா இருந்தா ரொம்ப யோசிப்பீங்களோ!.. குழப்பிடக்கூடாதுன்னு நீங்க ரொம்ப மெனக்கிடறீங்க... நன்றி. பட்டியின் நடுவர் பதவிக்கும் உங்கள் உடல் நிலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது... கவனித்தீர்களா?

பசரியா.. வேஸ்ட் பண்ணாம யாருக்காவது கொடுங்கன்னு தனி இழைத் தொடங்கிய நீங்க வராதது பட்டியின் இழப்பு...

தளி அடிச்ச அடியில ரொம்பவே திருந்தியிருக்கீங்க... சின்ன புள்ள ஏமாந்துடும்னு நினைச்சிருப்பாங்க... உங்க கிட்னியைப் பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது...

ப்ரியா அரசு... ஹும்ம்ம்ம்.. இப்ப பிச்சைப் போடுறவங்களைவிட வாங்குறவங்களுக்கு பொறுமை இல்லை... கொடுமைதான்.

அன்பரசி மீன்வலை, சத்துணவுன்னு சும்மாப் பின்னீட்டீங்க... ஹூம்... உங்க அளவுக்கு நான் எப்பத்தான் யோசிப்பனோ....

அஸ்வினி, ஹிஹிஹி நான் கூட நினைச்சேன்.. என்னடா இது புதுக் கதை..அதுதான் நடுவர் அழகா சொல்லிப் போட்டாரே... பிச்சைப் போடாதே தர்மம் பண்ணுன்னு இன்னும் எதுக்கு குழப்பம்னு... ஆனா பிச்சை எது? தர்மம் எதுன்னு கேட்கப்படாது.... (நடுவரே எந்த உள்குத்தும் இல்லை)

பசரியா.. மிக்க நன்றி. ஏன் இம்முறை பட்டியில் வாதங்களை காணோம்??

தேன்மொழி... மிக்க நன்றி. மறுபடி குழப்ப கூடாது... நானே குழம்பி போய் ஒரு தீர்ப்பை சொல்லி இருக்கேன். ;( உண்மை தான் பட்டிக்கு நடுவரானாலே எதாவது ஒரு பிரெச்சனை வருது... நீங்க யாராவது வந்தா நான் ரெஸ்ட் எடுப்பேன்ல... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்