சின்ன வெங்காய சாம்பார்

தேதி: September 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (9 votes)

 

துவரம்பருப்பு - 100 கிராம்,
சின்ன வெங்காயம் -250 கிராம்,
புளி - எலுமிச்சம்பழ அளவு,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, - தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.


 

துவரம்பருப்புடன் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பு, வேக வைத்த பருப்பை சேர்த்து, மேலும் கொதிக்க விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.


இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சாம்பார் இது. வெந்தயம், சீரகம், தனியா சம அளவு எடுத்து வறுத்து அரைத்து சேர்த்தால், சாம்பார் வாசனை ஊரைத் தூக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ROMBA SULABAMAGA ULLATHU

Hi Suganthi86 i m new here. How r u? Can u give me recipe for sambar podi ma?