கடலை புளிக்குழம்பு

தேதி: September 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப்
சுரைக்காய் (சதுரமாக நறுக்கியது) - ஒரு கப்
புளி - நெல்லிகாய் அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
அரைக்க:
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு (அலங்கரிக்க)


 

வேக வைத்த கொண்டைக்கடலை, சதுரமாக நறுக்கிய சுரைக்காய், புளிக்கரைசல் மற்றும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்த விழுது, இவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி நறுக்கின சுரைக்காயை போட்டு வேக வைக்கவும்.
சுரைக்காய் அரைபதம் வெந்ததும் அரைத்த விழுதை ஊற்றி அதனுடன் புளிக்கரைசல், கொண்டைக்கடலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாசனை போனதும் மற்றொரு வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து பின்னர் இறக்கவும்.
சுவையான கடலை, சுரைக்காய் புளிக்குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான காம்பினேஷன்... சுவையான குழம்பு குறிப்பு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு பொன்னி,

கடலையும் சுரைக்காயும் சேர்த்து செய்திருப்பது நன்றாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

கடலை குழம்பு புதுமை வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பொன்னி,
சுவையான சத்தான குழம்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுவையான புளிக் கொழம்பு..
நாக்குல தண்ணி ஊறுது :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கடலை புளிக்குழம்பு அருமை! பார்த்ததுமே சாப்பிடத்தோணுது!
பிறகென்ன, கடலையை ஊறப்போட்டாச்சு! :) கைவசம் சுரைக்காய் இல்லை. அதனால், நாளை கத்திரிக்காயுடன் சேர்த்து செய்துவிட ப்ளான்!
வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

பொன்னி... புளிகுழம்பு நல்லா இருக்கு... இதே போல என் மாமியாரும் செய்வாங்க... ஆனா தேங்காய் சேர்ப்பாங்க.... உங்க முறையிலும் செய்து பார்க்கிறேன்... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

தாமதமானா பதிலுக்கு ரொம்ப sorry பா

அட்மின் குழு: குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றிகள் பல

வனிதா: சுவை நன்றாக இருக்கும் வனி. வாழ்த்துக்களுக்கு நன்றி வனி

சீதாம்மா: நன்றிமா செய்துபாருங்க.

குமாரி: வாழ்த்துக்களுக்கு நன்றி குமாரி.

கவிதா: வாழ்த்துக்களுக்கு நன்றி கவி

ரம்யா: புளிக்குழம்புன்னாலே அப்படித்தானே ரம்யா, வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா

சுஸ்ரீ: செய்துட்ட்டு கண்டிப்பா எப்படி இருந்ததுன்னு சொல்லனும்

வித்யா: செய்துபாருங்க வித்யா.

ponni

பொன்னி,

கடலைக்குழம்பு சூப்பரா இருந்தது! வழக்கமா நான் கத்திரிக்காயை மொச்சையுடன் சேர்த்து குழம்பு வைப்பேன். இந்தமுறை கடலை சேர்த்து, மிளகு சீரகம் எல்லாம் அரைத்துவிட்டு செய்தது வித்தியாசமா நன்றாக இருந்தது. நன்றி!
(அடுத்தமுறைதான் சுரைக்காயுடன் சேர்த்து செய்து பார்க்கனும்!)

அன்புடன்
சுஸ்ரீ