இறால் தொக்கு

தேதி: September 6, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (25 votes)

 

இறால் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறு துண்டு
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மஞ்சள் தூள், மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சோம்பு - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு


 

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும். இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
லேசாக சுருண்டதும் இஞ்சி, பூண்டு சேர்க்கவும். இப்படி செய்வதால் அடி பிடிக்காது.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்பு அதனுடன் சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
எளிமையாக செய்யக்கூடிய இறால் தொக்கு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் இறால் தொக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ். எங்க அம்மா செய்து கொடுத்துதான் சாப்பிடுவேன். படங்கள் அருமையா இருக்குபா. பார்க்கவுமே அப்படியே இறால் வாசமும், டேஸ்ட்டும் வாயில் நீர் ஊறவைத்துவிட்டது. கலக்கல் ரெசிபி செய்த கவிதாவுக்கு வாழ்த்துக்கள்.........வாழ்த்துக்கள்.............வாழ்த்துக்கள்.............

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சுலபமான சுவையான தொக்கு. பார்க்கவே சூப்பரா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எளிமையான குறிப்பு ;)

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினர்க்கும் நன்றி

ப்ரியா,வனிதா மேடம்,லாவண்யா,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல குறிப்பு..:)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எளிமையாக செய்யக்கூடிய இறால் தொக்கு சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... நா இதுவரை இறால் செய்தது இல்லை..... இறாலை தானியா வேக வைக்க வேண்டாமா........ பதில் ப்ளீஸ்........
அன்புடன்
லதா.......

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

MADAM
RECIPE EXPLANATION SUPER ............ SOMBU AND SEERAKAM EVLO PODANUM NU KONJAM SOLLUNGA PLS

கவி இறால் நான் சாப்பிட மாட்டேன் நீங்க நல்லா செய்து சாப்பிட்டு இருபிங்கனு தெரியுது..ஹா ஹா ஹா

பாக்க நல்லா இருக்கும்னு தெரியுது வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரம்யா,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

லதா,

தனியே இறால் வேக வைக்க வேண்டாம்...குழைந்து தனியே போய்விடும்
செய்து விட்டு சொல்லுங்க.
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

லின்சி,
நான் சோம்பு அரை ஸ்பூன்,சீரகம் 1 ஸ்பூன் சேர்த்து செய்தேன்.உங்களுக்கு வாசம் தூக்கலாக வேண்டும் என்றால் சோம்பு அதிகமாக சேர்க்கலாம்.வருகைக்கு நன்றி

குமாரி,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
இறால் தொக்கு அருமையா இருக்கு!. அம்மா செய்து தந்து நிறைய சாப்பிட்டு இருக்கேன், எனக்கு ரொம்ப பிடிக்கும்!. ஆனால், இப்பவெல்லாம் செய்வதே இல்லை. ஏனென்றால், என்னைத்தவிர வீட்டில் யாருக்கும் இறால் ரொம்ப பிடித்தமானதாக இல்லை என்பதால். இப்ப, உங்க ரெசிப்பி பார்க்கவும், செய்துபார்க்க ஆசை வந்துவிட்டது! :) நல்ல குறிப்பு கவிதா, வாழ்த்துக்கள்.

அன்புடன்
சுஸ்ரீ

thanx madam..

கவிதா... பார்க்க அருமையா இருக்கு... நான் இதுவரை இறால் செய்ததில்லை... இதை பார்த்தவுடன் செய்ய விருப்பம் வந்துருச்சு.... :) இந்த வாரத்துல செய்துடறேன்.... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

சுஸ்ரீ,
கொஞ்சம் போலே வாங்கி செய்து பாருங்க..:-))
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

லின்சி,
எதுக்குங்க நன்றி எல்லாம்??அடுத்த முறை தமிழில் பதிவிடுங்க..தமிழ் எழுத்துதவி அல்லது http://www.google.com/transliterate/Tamil உபயோகீங்க

வித்யா,
செய்து பாருங்க..
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Innaiku dinner la iral thokku than..rompa taste ah irunthathu..thanks.

Hard Work Never Fails..

ஷெண்பா,
செய்துவிட்டு சொன்னதற்கு நன்றி.
அடுத்த முறை தமிழில் பதிவிடவும்.கீழே உள்ள தமிழுதவி அல்லது http://www.google.com/transliterate/Tamil உபயோகிக்கவும்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா நலமா?பேசி ரொம்ப நாள் ஆகுது. இன்னைக்கு இந்த இறால் தொக்கு செய்தேன் ,ரொம்ப நல்லா இருந்தது.குறிப்பு பகிர்ந்ததுக்கு நன்றிப்பா.

Kalai

செய்து பார்த்தோம். மிக நன்றாக வந்துள்ளது. சுவையாகவும் மணமாகவும் ....
நன்றி
முல்லை

கவிதா,
குறிப்புக்கு மிக்க நன்றி. மிகவும் அருமையாக இருந்தது. எனது கணவரும் மகளும் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்.

சுபா பாலசுப்பிரமணியன்

கலா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முல்லை,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சுபா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Hi kavitha,

super dish, i like this very much. Thank u so much and Keep it up

A love starts after love failure