பழக் கேசரி

தேதி: June 24, 2006

பரிமாறும் அளவு: ஆறு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொடியாக நறுக்கிய பழக்கலவை - கால் கிலோ
ரவை - கால் கிலோ
சீனி - இருநூறு கிராம்
ஏலக்காய் - ஐந்து
முந்திரிப் பருப்பு - பத்து கிராம்
நெய் - ஐம்பது கிராம்
கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - அரை டீ ஸ்பூன்


 

முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு ரவையை வாசனை வர வறுத்து வைக்கவும்.
ஏலக்காயை தோல் நீக்கி அரை டீ ஸ்பூன் சீனி சேர்த்து பொடித்து வைக்கவும்.
ஒரு கடாயில் மீதமுள்ள நெய்யை விட்டு முந்திரிப் பருப்பு போட்டு சிவக்க வறுத்து பழக்கலவையை போட்டு அறநூறு மி.லி தண்ணிர் விட்டு வேக வைக்கவும்.
பழங்கள் வெந்ததும் உப்பு, ரவையைப் போட்டுக் கிண்டவும்.
கேசரிப் பவுடர், ஏலப்பொடி போடவும்.
ரவை வெந்து தண்ணீர் வற்றியதும் சீனியை கொட்டி கிண்டவும். ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.


பழங்களாக ஆப்பிள், திரட்சை, மாம்பழம், வாழை, அன்னாசி, பலா போன்றவையை உபயோகிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்